பேராதனை பல்கலைக்கழகத்தில் மீண்டும் சட்டத்துறை கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1963 இல் மூடப்பட்ட சட்டத்துறை இந்த வருடம் முதல் மீண்டும் கலைப்பீடத்தில் ஒரு திணைக்களமாக ஆரம்பிக்கப்பட்டு முதல் வருட மாணவர்களாக 48 பேர் வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டனர்.
இந்த 48 பேரில் 40 பேர் பெண்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.