ஆபாசப் படங்களைப் பிரசுரிக்கும் இணையத்தளங்களைக் காண்காணிப்பதற்காகக் குழுவொன்றை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு நியமித்துள்ளது. ஆபாசப் படங்களைக் கொண்ட இணையத்தளங்கள் தொடர்பாகத் தொடர்ந்து விழிப்புடன் செயற்படுவதற்குத் தொலைபேசி, இணையச் சேவைகளை வழங்கும் கம்பனிகள் இணக்கம் தெரிவித்திருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு கூறியுள்ளது. அத்துடன், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் இணையத்தளங்களைக் கட்டுப்படுத்தவும் அவை இணங்கியுள்ளன. ஏற்கனவே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட 12 இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் இக்குழுவின் உறுப்பினர்கள் ஆபாசப் படங்களைக் காண்பிக்கும் இணையத்தளங்கள் தொடர்பாக விழிப்புடன் செயற்பட்டு ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்வார்கள் என்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த காரியப்பெரும வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.
இதேவேளை, தமது பிள்ளைகள் தொடர்பாகவும் இணையத்தளத்தில் அவர்களின் செயற்பாடு குறித்தும் அதிகளவு கவனத்துடன் இருக்குமாறு பெற்றோரிடம் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
sekaran
ஜனாதிபதியாய் வநதுவிட்டால்.. அடேங்கப்பா! என்னென்ன வசதிகள் என்று ஆசைப்படுகிறவர்கள் மகிந்தவின் நிலையை யோசிப்பது நல்லது.
தீவிர சிங்களவாதிகள், ஜேவிபியின் ஆதரவைப்பெற 13 வது திருத்தத்தை அமுல் செய்யவேமாட்டேன் என்று சத்தியம் பண்ணி, 13 வதென்ன அதுக்கு மேலேயும் போட்டுக் கொடுப்பேன் என்று இந்தியாவுக்கு சத்தியம் பண்ணி, பீடாதிபதிகளை ஷேப் பண்ண ஆபாச படங்களை பார்க்கவிடமாட்டேன், சிகரட் பத்தவிடமாட்டேன், செல்போன் யூஸ் பண்ணவிடமாட்டேன் என்று சத்தியம் பண்ணி…மேக்க ஜொப்த? …ஒக்கோம மகே கருமைய!..(இதெல்லாம் ஒரு ஜொப்பா? எல்லாம் நான் செஞ்ச கருமம்!..)