லண்டனில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் பர்வேஸ் முஷாரஃப் மீது வழக்குத் தொடரலாம் என பாகிஸ்தான் வம்சாவளி இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அகமது தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய போது முஷாரஃப் குறித்து நசீர் அகமதிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்தது தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதி மன்றத்தில் நடந்து வரும் வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரஃப் ஆஜராக மறுத்தால் அவர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்றார்.
சர்வதேச சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக தற்போது லண்டனில் உள்ள முஷாரஃப் பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனப்படுத்தியது தொடர்பான வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
பல்லி
இது சரியாகவும் நேர்மையாகவும் நடந்து விட்டால்; பல அரசியல் சண்டியர்கள் அடங்கி விடுவார்கள், சிலர் சிறை செல்லவும் வாய்ப்பு அதிகம்; நாமும் எமது சார்பாய் நம்ம நாட்டு பிரதமரையோ அல்லது ஜனாதிபதியையோ ஒருவாட்டி அனுப்பி பார்க்கலாம்;