ஒலிநாடா, இசைத் தட்டுகள், இறுவட்டுகள், யாவற்றையும் டிஜிட்டல் தொழில் நுட்பம் மூலம் சுவடி கூடத்தில் சேகரித்து தேவையான நேரத்தில் எடுத்து கலையகத்தின் ஊடாக நேரடியாக ஒலிபரப்பு செய்வதற்கான கணனி தொடர்பு முறையில் செயல்படும் புதிய கலையகத் தொடரை ஊடக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உத்தி யோகபூர்வமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று திறந்து வைத்தார்.
ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் சகலவற்றையும் சுவடிக் கூடத்திற்குள் உட்புகுத்துவதற்கு 33 வருட காலம் தேவைப்படும் என்று தொழில்நுட்ப பொறியியலாளர்கள் தெரிவித்தாலும், இங்குள்ள அனைத்தையும் கட்டிக் காக்க முழு மூச்சுடன் செயல்பட வேண்டும். இது எங்கள் சொத்து இதனை இரவு பகலாக பாதுகாப்பது எங்கள் கடமை என்றார்.
10580 பாடல்கள் அடங்கிய “ஹாட் டிஸ்க்” அமைச்சர் பிரியதர்ஷன யாப்பாவிடம் முன்னாள் ஊழியரும், கலைஞருமான ஆரியதாச பீரிஸ் கையளித்தார். அத்தோடு ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட 99 வருட பழைமை வாய்ந்த இசைத் தட்டு ஒன்று தலைவர் ஹட்சன் சமரசிங் கவிடம் ஆரியதாச பீரிஸால் வழங்கப்பட்டது.