சென்னை யிலுள்ள இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதுவர் ஹம்ஸாவின் வாகனம் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாத இளைஞர் கோஷ்டியொன்றினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து, மேலும் தெரியவருவதாவது
லண்டனிலுள்ள இலங்கை தூதராலயத்திற்கு துணைத் தூதுவராக மாற்றலாகிச் செல்வதையொட்டி தூதுவர் ஹம்ஸா ஆந்திர தொழில் கூட்டமைப்பைச் சார்ந்த ஆந்திர முதலாளிமாருக்கு விருந்துபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இவ்விருந்து சென்னையில், உள்ள ஜிம்கான கிளப்பில் நடைபெற்றது. இதனைக் கேள்வியுற்ற இளைஞர்கள் சிலர் அங்கு சென்று தங்களை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கோரியுள்ளார்கள்.
அவர்களுக்கு அனுமதி மறுக்கவே, வெளியே வந்த இளைஞர்கள் சத்தமில்லாமல் கலைந்து சென்றனர். பின்னர் விருந்து முடிந்து வெளியே வந்த ஹம்ஸாவின் காரை சூழ்ந்து சுமார் 20 நிமிடங்கள் முற்றுகையிட்டதுடன், அவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். இதனை அறிந்து பாதுகாப்பு அதிகாரிகள் ஹம்ஸாவை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதையடுத்து அங்கு சிக்கிக் கொண்ட அவரது காரை சேதப்படுத்தியுள்ளனர். இதனால், அங்கு சிறு பதற்றம் நிலவியது. உடனே,காவல் துறையினர் விரைந்து வந்து நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததுடன், தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களையும் தேடி வருவதாக தமிழக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பார்த்திபன்
புலிகளுக்கோ புலிப்பினாமிகளுக்கோ தெரிந்ததெல்லாம் வன்முறை ஒன்று தான். இதன் மூலம் இவர்கள் என்ன சாதித்தார்கள் என்று என்றுமே சிந்தித்துப் பார்த்ததில்லை. ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தால் தான் சாவான் என்பார்கள். இது முள்ளிவாய்க்காலில் உறுதியானது. ஆனால் அதை எண்ணியாவது திருந்தாமல் இன்னும் சில கூட்டங்கள்.
Ruthira
இப்படியான நடவடிக்கைகள் வைககோவிட்கும், நெடுமாறனுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்.
ஆனால் ஈழத்து மக்களுக்கு எந்த விதத்திலும் உதவப் போறதில்லை.