தென் மாகாணசபை அடுத்த வாரம் கலைக்கப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று அறிவித்தார். கொழும்பு மகவெலி மத்திய நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார்.
தென் மாகாண சபைக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுவிட்டனர் என்றும் அமைச்சர் கூறினார். வடக்கிலும் ஊவா மாகாணத்திலும் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.