சீனப் பிரஜை ஒருவருக்கு இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக்கூடாது, என்ற சட்டத்தில் சீன அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி இரண்டாவது குழந்தை பெற்று கொள்ள தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. தற்போது அங்கு 130 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு, “ஒரு குழந்தை’ திட்டத்தை சீன அரசு சட்டமாக்கியது. தவறி போய் இரண்டாவது குழந்தை உருவானால் கருச்சிதைவு செய்யும் படி பெண்கள் வற்புறுத்தப்பட்டனர்.சீனாவின் இந்த கடும் சட்டம் நல்ல பலன் கொடுத்தது. இதன் விளைவாக தற்போது சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
இதே நிலை நீடித்தால் சீனாவில் ஓய்வூதியம் பெருகின்றவர்களின்; கூட்டமே அதிகரிக்கும் என்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் என்றும் கருதியே சீன அரசு தன்னுடைய உத்தரவை மறுபரிசீலனை செய்துள்ளது. சீனாவின் வர்த்தக பகுதியான ஷாங்காயில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 21 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர். 2020ம் ஆண்டில் வயதானோர் எண்ணிக்கை 34 சதவீதத்துக்கும் அதிகமாகும், என கணக்கிடப்பட்டுள்ளது.