இந்தியா வின் முதலாவது, முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள அணு சக்தியில் இயங்கக் கூடிய, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய ஐஎன்எஸ் அரிஹாந்த் நீர்மூழ்கிக் கப்பலை பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். விசாகப்பட்டனத்தில் இன்று நடந்த இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில், பிரதமரின் துணைவியார் குர்சரண் கெளர் நீர்மூழ்கியைத் தொடங்கி வைத்தார்.
பல்வேறு கடல் பரிசோதனைகளுக்குப் பின்னர் இந்த நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் இணைக்கப்படும். இதேபோல மூன்று கப்பல்களை இந்தியா வடிவமைத்து வருகிறது. அதில் முதல் கப்பல்தான் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அரிஹாந்த் நீர்மூழ்கிக் கப்பல் 112 மீட்டர் நீளமுடையது. 6000 டன் எடையுடன் கூடியது. 2 ஆண்டுளுக்கு இது கடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. அதன் பின்னர் இது கடற்படையில் சேர்க்கப்படும். அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா உருவாக்கி தொடங்கியிருப்பதன் மூலம், இத்தகைய கப்பல்களை வைத்துள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கியைத் தொடங்கியிருப்பதன் மூலம் வான், நிலம் மற்றும் கடல் மார்க்கமாக அணு ஆயுதங்களைக் கையாளக் கூடிய வல்லமையை இந்தியா பெற்றுள்ளது என்பது முக்கியமானது.
Kusumbo
இதுவும் பிரபாகரினிசத்தில் ஒன்று. சோக்காட்டி அழியும் நிலைதான் இது. இந்தக் கீரோயிசத்தை இன்று மகிந்தாவும் தான் பயன்படுத்துகிறார். இலங்கைக்கும் எம்மக்களுக்கும் இந்தியாவால் என்றும் அழிவுதான். இதை விளங்கிக் கொள்ளாத புலிகள் இந்தியா வெட்டும் புடுங்கும் என்று நம்பினார்கள்.
அணுவாயுதம் செய்வது கடினமான விடயம் அல்ல அவற்றைப் பாதுகாப்பதும் பராமரிப்பதுமே கடினமானது. உதாரணமாக சோவித்யூனியனில் நடந்த மின்சார அணுவுலையில் ஏற்பட்ட கதிர்க்கசிவினால் பலவாயிரம் மக்கள் இறந்தார்கள். செய்திகள் வெளிறேறாதவாறு தடுக்கப்பட்டது. பல பத்தாண்டுகள் கழிந்தும் அதன் கதிரியக்கத் தாக்கம் இன்றும் சுவீடன்; நார்வே; பின்லாந்து; பழைய சோவித்நாடுகளில் உள்ளது. அவற்றில் பலநாடுகள் பலமைல்கள் தாண்டியிருந்தாலும் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. மூளைக்கட்டி; இரத்த குழாய்களில் கட்டி; புற்றுநோய் என்பனவற்றால் மக்கள் அவதியுறுகிறார்கள். பணத்தைச் சம்பாதிக்க அணுவுலைகளைத் தயாரித்து அந்த அணுச்சக்தியால் உலகத்தையே அழிக்க நிற்கிறார்கள். மனிதனுக்கு அணுவும் வேண்டாம் ஆயுதமும் வேண்டாம் சமநிலைகொண்ட இயற்கையுடன் நாம் சேர்ந்து வாழ்ந்து விடுகிறோம். கல்தோன்றி முள்தோன்றா காலத்தில் வாழ்ந்த மூத்த குரங்கு தமிழ்குரங்கு போல் நாமும் வாழ்ந்து விடுகிறோம் போதுமையா உங்களின் விஞ்ஞானங்களும் விபரீதங்களும். எமக்கு இயற்கை அன்னை போதிய வசதிகளைச் செய்து தந்துள்ளால் அவளின் பிள்ளைகளாக நாம் வாழ்ந்து இந்தப்பூமியைக் காப்போம்.
thevi
குசும்பு இப்படி கதைகிறீர்களே யாரோ விஞ்ஞானி வருகிறாராமே விவசாயம் செய்ய. அதற்கு என்ன செய்யப் போகின்றோம்?
mike
2012-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக சீனா யுத்தம் தொடரும் என்றும் அதில் இந்தியா தோற்றுப்போகும் என்றும் ஒரு இந்திய எழுத்தாளரே கூறியுள்ளார். அக்கூற்றை உறுதிப்படுத்துவது போலல்லவா இருக்கின்றது இந்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு. நீயா நானா- போட்டுப் பார்ப்போமா. உலக அழிவு வெகுதூரத்தில் இல்லையென்பது மட்டும் நன்றாக புரிகின்றது. நீரில்லாமல் ஏற்கனவே வறண்டுவரும் பூமிக்கு இது வேறு சாவுமணியா?
stephen brito
இந்தியாவுக்கு முதல் முள்ளிவாய்க்காலில் எமது தேசியதலைவர் எத்தனை நீர்மூழ்கிகளை வெள்ளோட்டம் விட்டவர். பிரபாகரனின் நிழலை கூட எதிரிகள் நெருங்க முடியாது. பிரபாகரன் இறந்தாலும் ஆயிரம் பிரபாகரன்கள் உருவெடுப்பார்கள்.
Kusumbo
தேவி! //குசும்பு இப்படி கதைகிறீர்களே யாரோ விஞ்ஞானி வருகிறாராமே விவசாயம் செய்ய. அதற்கு என்ன செய்யப் போகின்றோம்?// விவசாயம் செய்யவாறாரோ இல்லையே விச சாயம் (விவசாயம்) பூசியிருக்கிறார் போல் தெரிகிறது. விபரமற்ற சாயம் இது.
மாயா
// stephen brito on July 27, 2009 1:39 am
இந்தியாவுக்கு முதல் முள்ளிவாய்க்காலில் எமது தேசியதலைவர் எத்தனை நீர்மூழ்கிகளை வெள்ளோட்டம் விட்டவர். பிரபாகரனின் நிழலை கூட எதிரிகள் நெருங்க முடியாது. பிரபாகரன் இறந்தாலும் ஆயிரம் பிரபாகரன்கள் உருவெடுப்பார்கள். //
தேசியத் தலைவர் நீர்மூழ்கிகளை வெள்ளோட்டம் விட்டவர். ஆனால் அவை தண்ணிக்குள் அமிழ்ந்ததே தவிர நகரவில்லை. அது நகர்ந்திருந்தால் தலைவர் தப்பியிருப்பார்? கொசுக்களுக்கு மருந்து தெளிக்கும் சில விமானங்களை வைத்து படம் காட்டியதால் புலத்து புண்ணாக்குகள் கரகோஸம் செய்தார்களே தவிர , திறமையான அந்த இளம் விமானிகளை கரும்புலியாக்கியதைத் தவிர வேறு என்ன சாதித்தார்கள்?
திறமையும் , உண்மையான எத்தனையோ இளையோரை சாக வழி அமைத்ததை தவிர வேறு எதையும் புலிகள் செய்ததில்லை?
// பிரபாகரன் இறந்தாலும் ஆயிரம் பிரபாகரன்கள் உருவெடுப்பார்கள். //
இது உண்மை. இப்போது புலத்தில் பல கிரிமினல்கள் தலைமையேற்றுள்ளார்கள். இன்னும் பிரபாகரன்கள் உருவாகுவார்கள். பிரபாகரனின் குணாம்சம் தன்னைத் தவிர அடுத்தவர்களை அழிப்பது. எனவே உருவாகும் அத்தனை பிரபாகரன்களும் ஒருவரை ஒருவர் அழிக்கவே முயல்வார்கள். இவர்கள் பாதாள உலக தாதாக்கள் அல்லது மாபியா குழுக்களாக மாறுவார்கள். புலத்தில் புலிகளது சாவுகள் புலிகளால்தான் இடம்பெறப் போகிறது. இவர்கள் மாபியாக்கள். மக்களை நேசிக்கும் எவரும் புலிகளது தலைமையை ஏற்க முடியாது. ஒரு மாபியா அல்லது சுயநல சண்டியரால்தான் புலிகளின் தலைமை ஏற்க முடியும். அவர்களை பின்பற்றுவோர் மாபியாக்களாக மாறுவதை தவிர்க்கவும் முடியாது.
நண்பன்
நாலு சில்லும் ஒரு இரும்பு துண்டும் இருந்தால் அது வாகனம். அதுக்கு இரு சில்லு இருந்தால் வண்டி. இப்படி பலர் நினைக்கிறார்கள்? தலைவர் உருவாக்கிய நீர்மூழ்கிகள், உண்மையில் நீர் மூழ்கிகள்தான். அதாவது நீந்தாமல் , நீரில் மூழ்கியவைதான். அதனால்தான் துருப்பிடிச்சுப் போன நீர் மூழ்கிகளாக கடலுக்குள் இருந்து படையினர் எடுக்கிறாங்கள்.
இந்தியா விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பியது. அது வெற்றியளித்ததென்றால் , இது பெரிய விடயமேயில்லை. இந்தியாவின் மேதைகள் மற்றும் விஞ்ஞானிகள் உலக நாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நம் கண்களுக்கு தெரிவோர் நெடுமாறனும் , வைகேவும் , ராமதாசும் , திருமாவும்தான்.
ஆரம்பம் முதல் இன்றுவரை சுவிஸில் ஓடும் புகையிரதங்களின் கட்டுப்பாட்டு மையம் இந்தியாவின் சென்னையில் இருந்துதான் செயல்படுகிறது. சென்னை புகையிரதங்கள் சரியாக ஓடாததற்கு காரணம் இந்திய விஞ்ஞானிகளல்ல. ஊழல் அரசு.
ஜெர்மனியின் புகையிரத நிபுணத்துவம் இந்தியாவினுடையது. யாழ் – கொழும்பு புகையிரத பாதை வேலைகளும் இந்தியாவுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. நமக்குள் உள்ள அறிவீனத்தை வைத்து அடுத்தவரை மதிப்பிடுவதை விட , அறிவானவற்றை ஏற்றுக் கொள்ள மனதை மாற்றத்தையாவது கொண்டு வர வேண்டும்.
அர்ஜுன் பிரேம்நசீர்
இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய கடல் தரை ஆகாய படைகளை இலங்கையில் இறந்து விரட்டி அடித்தவர் தனநிகரற்ற உலக ராணுவ விற்பன்னர்
பிரபாகரன். பிரபாகரனின் நிழலை கூட யாரும் தொட முடியாது.
முழு இலங்கைக்கான விடுதலைக்கு வித்திட்டு தனது தூர நோக்கான அரசியல் அறிவால் ராஜபக்சேயை ஆட்சியில் அமர்த்தியவர் பிரபாகரன்.
எந்த ஒரு நாட்டின் வற்புறுத்தலுக்கும் அடிபணியாத நாடாக இலங்கையை மாற்றி முழு இலங்கையிலும் நாட்டு பற்று வளர வழிசமைத்தவர் தீர்க்கதரிசி பிரபாகரன்