இந்நாட்டு முஸ்லிம்கள் எனது சகோதரர்கள். நாம் ஒரு தாய் பிள்ளைகள் போல் வாழ்கின்றோம். இனி ஒருபோதும் எமக்குள் எந்தவித பேதமும் இருக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவத்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று (23) நடைபெற்ற வைபவத்தில் தமிழில் உரையாற்றும்போது ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். இவ்வைபவத்தில் ஜனாதிபதி தொடர்ந்து கூறுகையில்,
தற்போது நமது நாட்டில் எதுவித அச்சங்கள் இன்றி சுதந்திரமாக வாழக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மாகாண சபை மூலம் எதுவித வேறுபாடுகளுமின்றி மக்களுக்கு சிறந்த பல அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருவதை காணக்கூடியதாக உள்ளது. அதுபோன்று ஊவா மக்களின் தேவைகளை பெற்றுக்கொள்ள ஊவா மாகாண சபைக்கு ஆளும் கட்சியினூடாக முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை நியமிப்பது முஸ்லிம் சமூகத்தின் காலத்திற்குத் தேவையான ஓர் பணியாக இருக்கின்றதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
நாட்டின் எந்த மூலையில் யார் வாழ்ந்தாலும் அனைவரும் எனக்கு ஒன்றுதான். குறிப்பாக சாந்தி, சமாதானம் சகோதரத்துவம் ஆகிய பண்புகளுக்கு புனித இஸ்லாம் முக்கியத்துவம் வழங்குகின்றன. இஸ்லாமிய நாடுகளுடன் எமது நாடு மிகவும் நெருக்கமாகவும் மிகவும் ஐக்கியகமாகவும் இணைந்து செயலாற்றி வருகின்றது.
இன்று எமது நாட்டில் சிறுபான்மையினர் என்று ஒரு இனம் கிடையாது. எனவும் ஜனாதிபதி தமது தமிழ் உரையில் தெரிவித்தார்.