தன்னை தூக்கிலிட வேண்டும் என்கிறார் கசாப்

இந்தியாவில் கடந்த நவம்பரில் இடம்பெற்ற மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் உயிர் தப்பிய ஒரேயொரு பாகிஸ்தான் ஆயுததாரியான அஜ்மல் கசாப், தான் மரண தண்டனைக்கு தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் தன்மீது கருணை காட்டக்கூடாது என்றும், தன்னை தூக்கிலிடவேண்டும் என்றும் நீதிமன்ற விசாரணையின் போது, அஜ்மல் கசாப் நீதிபதியிடம் கூறினார்.

தாக்குதல்களில் பங்கெடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இவர், தாம் வழிநடத்தப்பட்டவிதம் குறித்த முழுமையான விபரங்களையும் நேற்று வழங்கியுள்ளார்.

மரண தண்டனையை தவிர்ப்பது மற்றும் தாக்குதலுடன் தொடர்புடைய, பாகிஸ்தானிலுள்ள ஏனைய சூத்திரதாரிகளை பாதுகாப்பதுமான தனது கோரிக்கையை கசாப் கைவிட்டுள்ளதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • chandran.raja
    chandran.raja

    எப்பொழுது மனிதன் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறானே அப்பொழுதுதே மன்னிக்கப் பட்டவன்னாகிறான். ஆயிரம் கொலைகளை செய்தாலும். கிறீஸ்தவ வேதம் மட்டுமல்ல மனுநீதிதர்மமும் அதையே முன்மொழிகிறது. கசாப்பை வாழ அனுமதிக்கப்பட வேண்டும்.
    தேவன் இறைவன் அல்லா போன்றவர்களின் அடையாளங்களை இவர்களிடையே இருந்தே! காணமுடியும்.

    Reply