இவ்வருட ஆரம்பம் முதல் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுமிருந்து 18030 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த வருடத்திலேயே அதிகளவானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வருடத்தில் இதுவரை 190 பேர் டெங்கு நோய் காரணமாக மரணமடைந்துள்ளனர்.
டெங்கு நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சைகளை வழங்குவதற்கு நாடு பூராகவுமுள்ள சகல வைத்தியசாலைகளிலும் விசேட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டிலுள்ள பிரதான வைத்தியசாலைகளுக்கு 23 இரத்தப் பரிசோதனை இயந்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் 4035 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதோடு 16 பேர் மரணமடைந்தனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இந்நோய் காரணமாக இறந்தவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுகிறது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.