வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூகியை விடுதலை செய்யாவிட்டால் ‘ஆசியான்’ அமைப்பிலிருந்து மியான்மர் நாட்டை வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். தாய்லாந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், மியான்மரில் மனித உரிமைகள் நிலவரம் கவலையளிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆங் சாங் சூகியை அமெரிக்கர் ஒருவர் சந்தித்துப் பேசியது தொடர்பான விவகாரத்தில் சூகி மீது மியான்மர் இராணுவ அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இது மியான்மரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆசியான் அமைப்பிலிருந்து மியான்மரை வெளியேற்ற வேண்டும் என்று ஹிலாரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது