மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை சிறதளவும் குறைக்காமலேயே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அரசாங்கம் கடனுதவி பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொதுநிருவாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்களைக் குறைப்பதில்லை என்ற நிலைப்பாட்டுடனேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இக்கடனுதவி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.சர்வதேச நாணய நிதியமும் சமூக நலன்களைக் கருத்திற்கொண்டு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இந்தக் கடனுதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.