ஊவா மாகாண சபை மற்றும் யாழ்ப்பாணம்,வவுனியா உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தலைமையில் தேர்தல் செயலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் இந்தத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்னவும் கலந்துகொள்ளவுள்ள இக்கூட்டத்தில் வாக்களிப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.