முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மாவட்டத்தின் நிரந்தரக் குடியிருப்பாளர்களான 28ஆயிரத்து 473குடும்பங்களைச் சேர்ந்த 1லட்சத்து 12ஆயிரத்து 56பேரை மீள் குடியமர்த்துவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இம்மாவட்டத்தில் அடிப்படை வசதிகளுக்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தின்பேரில் அடிப்படை வசதிகள் தொடர்பான மதிப்பீடு, சேதமடைந்த வீடுகள், கட்டிடங்கள், வீதிகள் ஆகியவற்றின் விபரங்கள் சேகரித்தல் போன்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அரசஅதிபர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சேதமடைந்துள்ள கிராம வீதிகளை புனரமைப்பதற்காக 125மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் உடனடியாக கிராம வீதிகளை திருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முல்லத்தீவு மாவட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் ஆர்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மெனிக் தாசன்
உஙள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் செய்து முடிக்கப்படும் போது குடியேறுவதற்கு மக்கள் எவராவது எஞசியிருப்பர்களா என்பது சந்தேகமே. அகதிகளின் பெயரால் கண்டிராக்ரர்கள் பிழைத்துக் கொள்வதற்கே அரச இயந்திரம் வழி செய்கிறது.அகதிகளின் நன்மையை விட அமைச்சர்களுக்கு வருமானம் தருவதற்கான வழி வகைகளே உங்கள் திட்டங்களின் பின்னணி. மக்களை விடுதலை செய்யுங்கள். அவர்கள் தாஙகளாகவே தமது வீடுகளையும் வீதிகளையும் திருத்திக் கொள்வார்கள். அவர்களை மந்த்தைகளாக நடத்தாமல் அவர்களது செயல் ஊக்கத்தில் நம்பிக்கை வையுங்கள்.
மகுடி
மெனிக் தாசன், புலிகள் தெருத்தெருவா குடியேத்தின மாதிரி, ரொடியரா மனிசரை குடியேத்த நினைக்கிறியள் போல?