ஆயுதப் போராட்டத்தின் தோல்வி:- குலன்

20090406_01g.jpgபிரபாகரனின் இறப்பின் பின் ஓர் உயிர்ப்பு என்ற தலைப்பில் June 19 ல் வெளியான எனது கட்டுரையுடன் தொடர்புபட்டதாக இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.

இன்றுவரை நாம் அரசியலில் படித்த பாடங்கள் சில;

உரிமைகள் மறுக்கப்படும் போது போராட்டம் என்பது அவசியமாகிறது. என்றும் இரண்டாவது இனமே போராட வேண்டி இருப்பதால் முஸ்லீம்கள் மதம்சார்ந்து தம்மை மூன்றாம் இனமாக வகுத்துக் கொள்வதினூடு தம்மை பாதுகாத்துக் கொண்டார்கள். இனங்கள் என்று மொழி வாரியாகவே பிரிக்கப்பட்டுள்ளது என்றாலும், அவர்கள் தம்மை மதரீயாக வகைப்படுத்த விரும்புகிறார்கள். முஸ்லீம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது. முஸ்லீம் மக்கள் நாளை எமது போராட்டத்தில் ஒரு பெரியபரிமாணத்தை எடுப்பர். முக்கியமாக கிழக்கில் முஸ்லீம்களே போராடும் சக்தியாக உருவெடுப்பார்கள் என்பது திண்ணம்.

முதலில் இனக்கலவரம் ஏற்பட்டது சிங்கள முஸ்லீங்களுக்கிடையில்தான். இது சேர் பொன் இராமனநாதன் போன்ற தலைவர்களால் தீர்த்து வைக்கப்பட்டு அவர்கள் தேரில் வைத்து இழுக்கப்பட்டார்கள். பின் கலவரங்களும் போராட்டங்களும் தமிழர்கள் தலையிலே நிர்ப்பந்தமாக திணிக்கப்பட்டது. மற்றவர்கள் பிரச்சினையில் நாம் மூக்கு நுளைக்காமல் இருப்பது முக்கியம் என்பதே இங்கே நாம் படித்தபாடங்களில் ஒன்றாகும்.

ஆங்கிலேயர் நாட்டை விட்டுவிட்டுப் போகும்போது நாமும் எம்தலைவர்களும் நாம் தனித்துவமானவர்கள் என்பதை உணர்ந்து அன்றே பாக்கிஸ்தான்போல் பிரித்திருந்தால் இன்று ஈழம் கோரி ஒருபோராட்டம் நடந்திருக்காது. இவ்வளவு அழிவுகளை நாம் சந்தித்திருக்க மாட்டோம். சிங்களவர்களின் அடிமையாக இருக்காது சிலவேளை சில ஆயுதம் தாங்கிய குழுக்களின் கீழ் அடிமையாக இருந்திருப்போம். ஆனாலும் மொழி பிரதேசம் போன்றவை பாதுகாக்கப் பட்டிருக்கலாம். சிலவேளை எல்லைப்போரில் நாம் பலரைப் பறிகொடுத்திருப்போம். அந்த அழிவை விட இன்றைய அழிவு குறைவாக இருந்திருக்கலாம்.

இன்று தமிழர் சிங்களவர்கள் என்று பிரிவினைக்கு யார் காரணம்? ஆம் முழு இலங்கையின் அரசியல்வாதிகளே காரணம். தமிழ் சிங்கள மக்களிடையே நாட்டின் அபிவிருத்தி சுவீட்சமான வாழ்வு பற்றிய அறிவும், எண்ணங்களும், நாட்டின் நலன் பற்றிய தூரநோக்கும், செயற்திட்டங்களும் இல்லாமல், குறுகிய நோக்குடன் வாக்குவங்கியை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட பிரிவினைவாதத்தின் வெளிப்பாடே இன்றைய போரும் அழிவுகளும். பிரிவினைப் போராட்டத்தால் இழப்புக்களைச் சந்தித்தது தமிழர்கள் மட்டுமல்ல. சிங்களவர்களும் தான். அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய நலன்கள் எல்லாமே போருக்குள் கொட்டப்பட்டது. உயிரிழப்புகளுக்கும் குறைவில்லை என்பதை அறிக.

ஒருநாடு ஒர் அரசு என வந்துவிட்டால் மக்கள் அனைவரும் அந்நாட்டவர்கள் எனும் மனநிலை வளர்த்தெடுக்கப்படுவது முக்கியம். இதை மாறிமாறி வந்த சிங்கள அரசுகள் செய்யத் தவறின, மறுத்தன. ஒருநாடும் ஒருகுடும்பம் போன்றதே. நாட்டுக்குள் பிளவுகளையும் பிரிவினைகளையும் வைத்துக் கொண்டு நாட்டை வளர்க்கலாம் என்பது கனவே. ஏன் எமது ஈழவிடுதலைப் போராட்டத்திலும் சகோதரப் படுகொலைகளைச் செய்து கொண்டு நாம் ஒற்றுமையாய் போராடுவோம் என்பது எப்படிச் சாத்தியமாகும். இதன் விளைவே இன்று நாமும் எம்மக்களும் அனுபவிக்கும் தாங்கொணாத் துயர். வேற்றுமைகள் பலவிருப்பினும் ஒற்றுமைகளினூடும் பொதுவான வேலைத்திட்டங்களுடும் நாட்டின் ஐக்கியம் கட்டி எழுப்பப்பட்டிருக்க வேண்டும். இதை இன்று கூட அரசு செய்யத்தொடங்கலாம். காலம் கனிந்துதான் இருக்கிறது. இவ்வளவு காலமும் சிங்களப்பேரினவாதம் செய்யத்தவறிய விடயத்தை இன்றைய அரசு செய்யுமானால் இலங்கையில் இனஒற்றுமையுடனான சுபீட்சமான வாழ்வு உருவாகும். முதலில் பட்டகாயங்களுக்கு மருந்து போடுவது மட்டுமல்ல சிங்களமக்களிடையே தமிழர்களும் இனநாட்டுப்பிரசைகள் என்ற அறிவை துவேச ஒழிப்பினூடாக அரசு செய்வது அவசியம். முக்கியமாக மதத்திற்கு மதிப்பளியாது மனிதத்துக்கு மதிப்பளிக்கப்படுமானால் இலங்கையில் ஒற்றுமை சாத்தியமானதே.

அரசியலினுள் மதம் என்று மூக்கு நுளைக்கிறதோ அன்று பிரச்சினைகள் வித்திடப்படுகிறது. மதம் என்பது நம்பிக்கை மட்டுமே. மனிதன் கடவுளை என்றும் கண்டதில்லை. ஆனால் காணாத கடவுளுக்காகச் சண்டைபிடித்துக் கொண்டிருக்கிறான். இவ்வுலகில் மதச்சண்டையே அதிகம் என்பதை அறிக. யூதர்கள் பாலஸ்தீனியர்கள் போல் என்றும் இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் என்றும் சரித்திரப்பகை கொண்டவராக இருக்கவில்லை. சிறியநாடாகி சிற்றரசுளாகி நாடு பண்டைய காலங்களில் ஆளப்பட்டாலும் சரித்திரப்பகை கொண்டவர்களாக நாம் என்றும் வாழ்ந்ததில்லை. பௌத்த சிங்களவரின் நலன் மட்டும் கருதி மகாவம்சம் புனையப்பட்டதோ அன்று ஆரம்பமானது இனவெறி.

பௌத்தனாக இருப்பவன் இனவெறி கொள்ளலாமா? ஒரு பௌத்தன் என்றும் மீழ்பிறப்பை நம்புபவன். நாளை அவன் தமிழனாகவும் பிறக்கலாம் அல்லவா. கொல்லாமையை முதன்மையாகப் போதிப்பது பௌத்தம் என்பதை அறிவுறுக.

இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதியில் ஏற்பட்ட அரசியல் மதமாற்றங்கள் காலங்காலமாக இலங்கையில் முக்கியமாக வடபகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியது. மதம் சார்பாக சாம்பிராட் அசோகனின் பௌத்தசங்கங்கள் இந்தியா முழுவதும் சென்று மதம்பரப்பின. அங்கே பௌத்த அலையே முட்டி மோதியது. இதன்பாதிப்பு இலங்கையின் வடபகுதியிலும் இருந்தது காரணம் இன, மொழி, கலாச்சார, வாணிபத்தொடர்புகள் இந்தியாவுடன் மிகமிக நெருக்கமாக இலங்கையின் தென்பகுதியை விட வடபகுதிக்கே அதிகமாக இருந்தது. முதன்முதலில் பௌத்தமதம் வந்ததும். அம்மதத்தை முதன் முதலில் தழுவிக்கொண்டவர்கள் தமிழர்கள் என்பதும் இலங்கைவாழ் அனைத்து மக்களும் உணரவேண்டிய ஒன்றாகும்.

இலங்கை முழுவதும் பௌத்தம் ஒரே நேரத்தில் இருந்தது என்பதற்கான ஆதாரம் போதாது. இருப்பினும் வடகிழக்குப் பகுதிகளில் தமிழ்பௌத்தர்கள் தான் இருந்தார்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உண்டு. கரையோரப் பக்கமாகவே பௌத்தம் வடகிழக்குப் பகுதிகளில் பரவியிருந்தது. தற்போது சிங்களவர்கள் பௌத்தர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக பௌத்தம் சிங்கள மக்களுக்கு மட்டும்தான் உரியது என்பது பெரும் தவறு. தமிழர்கள் நாகர்கள் என்பது ஆய்வியல் உண்மை. இந்நாகர்களுக்குரிய விகாரையே நாகவிகாரை என்பதாகும். இது நயினாதீவில் உள்ளது என்பதை அறிக. நாகத்தின்மேல் புத்தர் படுத்திருப்பதுபோன்ற பலசிலைகள் தென் கிழக்காசியாவில் காணலாம். நாகவணக்கமானது உலகின் பலவிடங்களிலும் நடந்திருக்கிறது என்பதற்கு இது சான்றாகும்.

சிங்களவர்களும் திராவிடரே என்பதற்கு போதியளவு சான்றுகள் உள்ளன. நோர்வே நக்கீராவின் கட்டுரை ஒன்று தேசம்நெற்றில் வந்திருந்தது. படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

தேசியம் வளர்க்கப்பட்டு பொது வேலைத்திட்டங்களின் கீழ் நீண்ட நோக்குடன் மற்றய இன, மொழி, கலாச்சாரங்கள் மதிக்கப்படும் போதே இனவெற்றுமை உயிர்பெறும். தற்போதய சூழல் அரசுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். இதை அரசு செய்யத்தவறின் பண்டாரநாயக்கா, கிட்லர் போன்ற மனிதவினத்துவேசிகளுக்கு நிகராக மகிந்தாவும், அவர் குடும்பமும் உள்ளாகும். போரின்பேரழிவு இருபக்கமும் நடந்திருக்கின்றது. இதையுணர்ந்து இன்றைய அரசியல் தலைவர்கள் செயற்படுவது முக்கியமானது. இன்று நீங்கள் எடுக்கும் சரியான முடிவுதான் நாளை இலங்கையில் ஒரு சுபீட்சமான வாழ்வு. ஆயுதமேந்திப் போராடிய தமிழினம் தான்பட்ட காயங்களுடனும் வெறுப்புகளுடனும் தான் இன்றிருக்கிறது. இக்காயங்களுக்கு சரியான முறையில் மருந்து கொடுக்கப்படாது போனால் நாளை இதைவிட பெரிய, பாரிய அழிவுகளுடனான போர் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. இனியொரு போர் உருவானால் இலங்கை எனும் ஒரு தீவு சரித்திரமாக்கப்படலாம். விஞ்ஞானத்தின் அபரீதமான வளர்ச்சியும் கட்டுப்பாடற்ற கண்டுபிடிப்புக்களும் நாளை எம்நாட்டில் பரிசோதிக்கப்படலாம்.

மீண்டும் மீண்டும் அரசுக்கு நான் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். விழுப்புண்களுடன் இருக்கும் தமிழினம் போராடவும், ஆயுதப்போராட்டத் தோல்வியூடு தான் படித்ததைக் கொண்டு மீண்டும் ஆயுதப்போராட்டத்துக்கு தன்னை சுதாகரித்துக் கொள்வதற்கு அதிககாலம் எடுக்காது. ஆகவே இலங்கையின் சுபீட்சமான எதிர்காலம் இன்று சிங்கள அரசின் கைகளிலேயே இருக்கிறது.

20080521008.jpgதமிழ்மக்களது ஆயுதப்போராட்டத்தின் தோல்விக்குக் காரணம் என்ன?

அரசியல் தெளிவின்மை;
அரசியல் என்பதை புலிகள் விளங்கியவிதம் மிகமிகப் பிழையானது. மண்ணை மீட்பதாலும், இராணுவத்தை அடித்துக் கலைப்பதாலும் ஒரு நாட்டை கட்டி எழுப்பமுடியும் என்பதும், பிடித்தநாட்டை இராணுவப்பலத்தால் காப்பாற்ற முடியும் என்பதும், புலிகளின் மூடத்தனமான முழுமையாக நம்பிக்கையாக இருக்க வேண்டும். வீரதீரங்கள், சாகசங்கள், கதாநாயகத்துவமே அன்றி அரசியல் ஆகாது. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு விடயத்திலும் அரசியல் உள்ளது. சாப்பிடும் உணவில், வாங்கும் பொருட்களில், பிள்ளை பெறுதலிலும் அரசியல் உள்ளது. முக்கியமாக இலங்கை அரசியற்சட்டம் என்ன கூறுகிறது? எப்படி நாம் பிரிந்துபோகும் உரிமையுடையோமா? நாம் எடுத்தோம், வெட்டினோம் என்று நடுவில் கோடுகீறி இது எனதுநாடு அது உனதுநாடு என்று பிரிப்பதா? இப்படியான குழந்தைப்பிள்ளைத்தனமான கேள்விகளுக்குக் கூட சரியான பதில் இல்லாமலேயே புலிகளின் போராட்டம் நடந்திருக்கிறது என்பதை இராணுவ நடவடிக்கைளின் முடிவுகள் காட்டுகின்றன. அரசியலை விட்டு இராணுவத்தீர்ப்பே தீர்மானமானது என்று கொண்ட புலிகளுக்கு விளைந்தது என்ன? ஆயுதம் தூக்கியவனுக்கு ஆயுதத்தால் சாவெனும் சமயபோதனை எமக்கு வேண்டாம். ஆயுதத்தையே எதிர்த்து தன்போராட்டத்தை அகிம்சை கொண்டு நடத்திய மாகாத்மா காந்திக்கு என்ன நடந்தது. காந்தி எப்போது ஆயுதம் தூக்கினார்? ஆயுதம் என்பது அரசியலுக்கும் விடுதலைக்கும் துணைநிற்கும் ஒரு கருவியே தவிர. அதுவே அரசியலாக முடியாது. ஆயுதத்தைச் சரியாகப் பாவிக்காத போது அதுவே எமக்கு ஆபத்தாகி விடுகிறது என்பதற்கு புலிகள் ஒரு உதாரணம்.

ஆயுதம் தூக்காமலே பலநாடுகள் அரசியல் நகர்வுகளால் நாட்டைப்பிரித்து தம்மாளுகைக்குள் கொண்டுவந்த சரித்திரங்கள் எம்கண்முன் நடந்தேறின. உ.ம்: கொசோவோ, ஸ்கொட்லண்ட், கிழக்குத்தீமோர் ஆயுதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வென்ற எரித்திரியாவின் சுவடுகளைப் புலிகள் தொடர்ந்தார்கள் என்பதில் ஐயமில்லை. எரித்திரியா சரித்திரரீதியாக காலணித்துவ காலத்தில் கூடத் தனித்தே ஆளப்பட்டது. இதன் பிரிவினை கூட பேரிழப்பின் பின்னே அரசியலாலேயே நிர்ணயிக்கப்பட்டது.

ஒரு இறையாண்மையுள்ள நாட்டை நாம் நினைப்பது போல் துண்டாடிவிட முடியாது. அதற்கு அரசியல் மட்டுமல்ல புவியியல் காரணிகள், வளங்கள், உலகவரசியலின் தாக்கம், பிரிந்து போகும் நாட்டை முன்மொழியவும் அதை வழிமொழிந்து உலகநாடுகளின் முன்நிறுத்துவதற்கான பலம்வாய்ந்த நாடுகளின் பின்புலம், பிராந்திய வல்லரசுகளின் அனுசரணை, அயல்நாடுகளின் உதவி இப்படிப் பலகாரணிகளைக் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.

இன்று 29 வருடமாக புலிகள் நடத்தியது தெரு, ஊர், சண்டித்தனங்களின் புறவளர்ச்சியே அன்றி வேறில்லை. அரசியல் இல்லாத ஒருநாட்டை எப்படிக் கட்டியெழுப்ப முடியும் என்று நினைத்தார்களோ புரியவில்லை. புலிகள் உண்மையாக விடுதலைக்காகப் போராடியிருந்தால் இவ்வளவு அறிவுவளங்கள் வெளிநாடுகளில் இருந்தும் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தியிருக்கலாம். அரசியலுக்கு பாலசிங்கத்தை மட்டும் நம்பியிருந்தார்கள். பாலசிங்கத்தைத் தவிர வெளிநாட்டில் அரசியலுக்காக புலிகளால் நியமிக்கப்பட்ட அரசியல் அறிவுதார்ந்த ஒரு குழுவை சொல்லுங்கள் பார்க்கலாம். புலம்பெயர் தமிழர்களை பணங்காய்க்கும் மரங்களாகப் பாவித்தார்களே தவிர வேறு என்ன செய்தார்கள்? வெளிநாடுகளில் புலிப்பக்தர்களுக்கு விரும்பாத அனைவரையும் துரோகிகள் என்று விலத்தி விலத்தி ஒரினத்தை அழித்து தன்னினத்துக்கே துரோகம் செய்து நிற்பது புலிகளே அன்றி வேறுயாருமில்லை.

அரசியலுக்கு பாலசிங்கம், ஆயுதங்களுக்கு கே.பி (உலகமே தேடும் ஒரு கிறிமினல்) புலிகளின் இராணுவத்துக்கு பிரபாகரன். இந்த மூவரையும் வைத்துக்கொண்டு பலமில்லியன் வருடங்கள் வாழ்ந்த ஒரினத்தை நிர்ணயிக்க முடியும் என்று நம்பிய புலிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் இந்தத்தோல்வி வேண்டிய ஒன்றே. ஒரு மனிதனின் வாழ்க்கை வரையறைக்கு உட்பட்டது. ஆனால் ஒரு விடுதலைப்போராட்டம் பலதலைமுறைகள் கூடக் காவிச்செல்லப்படலாம். இதை ஒருதனிமனிதனான பிரபாகரனால் எப்படி நிர்ணயிக்க முடியும்? தனிமனிதத் துதிபாடல்களில் வாழ்ந்த சமூகம் இதைவிட வேறுவிதமாக எப்படிச் சிந்திக்கும்? சிந்திப்பவர்களின் தலையெழுத்துக்கள் எல்லாம் துப்பாக்கிகளால் எழுதப்படும் போது எந்தப் புத்திஜீவி, எந்த அறிவுஜீவி தன்கருத்துக்களைச் சொல்ல முன்வருவான். போகும் வழி எதுவெனத்தெரியாமல் போனபோராட்டம் தான் புலிகளினது போராட்டம். ஆயுதமின்றி அரசியலால் கூட நாடுகள் பிரிக்கப்பட்டன என்பதை முன்பு குறிப்பிட்டேன் என்பதை அறிக.

எரித்திரிய போராட்டம்;
எரித்திரிய வீரம் செறிந்த கெரில்லாப் போராட்டம் வெற்றி பெற்றது என்றாலும் மக்களின் விடுதலை தனிமனிதனால் பறித்தெடுக்கப்பட்டுள்ளது. கூட நின்று போராடிய போராளிகள் மந்திரிகளாகி பின் சிறைப்படுத்தப்பட்டனர். எரித்திரியாவின் பிரிவினையை உலகநாடுகள் அனுசரித்ததற்கு முக்கிய காரணம் எரித்திரியாவானது என்றும் மற்றைய நாடுகளுடன் இணைந்து இருந்ததில்லை. காலணித்துவ காலத்திலும் கூட. எரித்திரியரால் பேசப்படும் திகிரின்ய எனும் மொழியும், எத்தியோப்பியரால் பேசப்படும் அமாரிக் எனும் மொழியும் கெஸ் எனும் ஆதிமொழியில் இருந்து உருவானது. இது தமிழைப்போல் ஒரு செம்மொழி என்பதும் குறிப்பிடத்தக்கது. செம்மொழியின் வரைபு இலக்கணம் மற்றமொழிகளின் கலப்பின்றி வாழத்தகுதி கொண்ட மொழி என்பதாகும். இந்த எரித்திரியப் போராட்டம் எத்தனையோ உயிர்களைக் காவுகெண்ட பின்பும் ஒரு தனிமனிதனின் கைகளிலே ஒருநாட்டின், மனித இனத்தின் தலைவிதி போய் சேர்ந்துள்ளது. நான் புலிகள் பலமாக இருக்கும் காலங்களின் யாவருக்கும் சொல்லும் வார்த்தை இது: “தமிழர்களின் போராட்டம் யார் கைகளில் அடிமையாக இருப்பது என்பதுதான்”

போராடும் சக்திகள் கண்டறியப்படாமையும் வழிமுறையற்ற போராட்டமும்;

உண்மையாகப் போராடும் சக்திகள் யார்? போராட்டம் எப்படி பின்பற்றப்பட வேண்டும், குறிக்கோளை அடைவதற்கான வழி என்ன? எமது போராட்டம் வெற்றியழிக்குமா? ஒரு இறைமையுள்ள நாட்டிலிருந்து ஈழம் பிரிப்பதற்கு உலகவரசியல் அமைப்பில் எமக்கு சாத்தியமான காரணிகள் உள்ளதா? இருந்தால் அவை எவை? இல்லையென்றால் போராட்டம் எப்படி அமையவேண்டும் எனும் தூரநோக்கோ, தூயநோக்கோ புலிகளுக்கு இருக்கவில்லை.

எம்நாட்டுத் தமிழ்மக்களின் சனத்தொகையை வைத்தும், புவியில் நிலைகளை வைத்தும் ஒரு தனிநாட்டைப் பிரித்து ஆளமுடியுமா? பிரித்தெடுத்தால் எல்லைப்போர் என்பது தவிர்க்க முடியுமா? இதற்கு எமது புவியியல் அமைப்பும் மக்களும் தயாரா? போராட்டம் மண்ணுக்கா மக்களுக்கா?

ஈழம்வேண்டும் என கடைசிவரையும் தெருத்தெருவாகக் கத்தியவர்கள் யார்? இவர்கள் ஈழமண்ணில் நின்றா கத்தினார்கள். அம்மண்ணில் நின்று கதைக்கவோ கத்தவோ வக்கற்றவர்கள் ஈழம் கேட்டுக் கோசம் போட்டார்கள். ஈழம் எங்காவது ஐரோப்பியக் கடைகளில் விற்கிறதா?

போராடப் புறப்படும்போது எம்முடன் இணைந்து செயற்படும் சக்திகள் யார்? சிங்களப் பகுதிகளில் கூட புரட்சிகரமான சத்திகளை இனங்கண்டு எம்மக்களின் பிரச்சனைகளை அவர்களும் வென்றெடுக்கக் கூடிய வசதிகள் உள்ளனவா எனக்கண்டறிந்து போராட்டம் நெறிப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். புலிகள் செய்தார்களா? இல்லையே. புலிகளும் ஈழமென்ற போரில் துவேசத்தை வளர்த்தார்களே தவிர சிங்களப்பகுதியிலுள்ள எமக்காகப் போராடும் சக்திகளைத் தவறவிட்டார்கள் என்பதே உண்மை.

எதிரியை ஆயுதத்தால் மட்டும் பலமிழக்கச் செய்வதால் நாம் வென்றுவிட முடியாது. எதிரியின் பகுதிகளில் எம்மவர்களின் அரசியல் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதும், எதிரியின் பொருளாதாரக் கட்டமைப்பை சீரழிப்பதும், உடைத்தெறிவதும், உலகநாடுகளில் அவர்களை தனிமைப்படுத்துவதும், எமது பிரச்சனையை கூட சிங்களமக்களின் வாயால் கொணர்விப்பதும் கூட எம்மக்களின் விடுதலைக்கு வழிவகுத்திருக்கும். செய்தார்களா? செய்வார்களா?

விடுதலை விடுதலை என்று என்றும் கதைத்தார்களே தவிர இதற்கான அடிப்படை நடவடிக்கைகள் எதுவுமே யாராலும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. சகோதரப் படுகொலைகளுடாக தமிழ் மக்கள் உள்ளேயே எதிரிகளை வளர்த்துக்கொண்டு விடுதலையின் ஏக சுவீகாரபுத்திரர்களாக எப்படி வாழமுடியும் என்பதன் முடிவே இன்றைய புலியழிப்பு.

பிரபாகரன் இன்று உயிருடன் இருந்தால் அவருக்கு அஞ்சலியே செய்யாது போன மக்களின் நிலையில் நின்று எம்மக்களின் விடுதலைக்கான உண்மைத் தார்ப்பரியத்தைப் புரிந்திருப்பாரா என்பதும் கேள்விதான்?

இலங்கை இராணுவம் இலங்கை அரசின் கைகளேயன்றி முழுஅரசும் இராணுவமல்ல. ஒரு இனத்தின் விடுதலைக்கு ஆயுதம் ஒரு கருவியே தவிர அதுவே விடுதலையல்ல. அந்த அரசியலினுள் பலவிதமான விடுதலைகள் தங்கித் தொங்கியிருக்கும். வகுப்புக்கள், பெண்கள், சாதி, மதம், கலை, கலாச்சாரம் என பலவிடுதலைக் கூறுகள் உள்ளடங்கும்.

அரசியலையும் மக்களைகளையும் ஒரு போராடுகளமாகவும், போராடும் சக்தியாகவும் கருதாத புலிகளின் அழிவு எம்மக்களுக்கு நல்லதையே செய்திருக்கிறது எனலாம். இந்த ஒரு சின்ன விடயத்தைப் புரிந்து கொள்வதற்கு எம்மக்களுக்கும் புலிகளுக்கும் ஒரு இலட்சம் மனிதவுயிர்கள் தேவைப்பட்டுள்ளது.

மக்களை தயார்படுத்தாமை, பங்காளிகளாக்காது பார்வையாளராக வைத்திருந்தமை;

கெரில்லாப் போராட்டம் மட்டுமே வெற்றியளிக்கும் என முழுமையாக நம்பிய புலிகள் என்று மக்களை கெரில்லா யுத்தத்துக்குத் தயார்படுத்தினார்கள்? கெரில்லா யுத்தமும் என்பது ஆயுதப் போராட்டத்தின் ஒரு யுத்தவடிவமே தவிர அரசியலாக முடியாது. மக்கள் தம்விடுதலையை முழுமூச்சாக முன்னெடுக்கும்போது அரசபயங்கரவாத்தின் கரங்களாக இயங்கும் இராணுவத்துடன் கெரில்லாக்கள் மோதியிருக்க வேண்டும். இரண்டும் சமாந்தரமாக நடந்திருக்க வேண்டிய ஒன்றாகும். வைத்தால் குடுமி வழித்தால் மொட்டை என்றாகி விட்டது தமிழர் நிலை. கெரில்லா யுத்தத்தை மட்டும் முன்னெடுத்தார்கள் புலிகள். அரசிலுக்கான, அரசியல் தீர்வுக்கான அடித்தளமோ அவர்களிடம் காணப்படவில்லை. புலிகளின் இராணுவ அழிவின் பின் அரசியலை மட்டும் தூக்கிக் கொண்டு திரிகிறார்கள் புலம்பெயர் தமிழர்களும் கே.பியும்.

உலகில் நடந்த கெரில்லாப் போராட்டங்களை உற்றுநோக்கினால் அனைத்துமே இறுதிவரை அவர்கள் கெரில்லாவாகவே இருந்திருக்கிறார்கள். அரசியல் தன்பாதையில் மக்களில் மையங்கொண்டு கெரில்லாக்களின் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும். புலிகள் தம்கெரில்லாப் பாணியில் இருந்து விலகி மரபுவழி போராளிகளாகத் தயார்படுத்தப்பட்டார்கள். மரபுவழிப் போராட்டம் எம்புவியல்சார் காரணிகளுடன் ஒத்துவருமா என்பதை புலிகள் அறிந்திருந்திருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை. மக்களை வரிவசூலிக்கும் வங்கிகளாகவும், அடித்துவிட்டு ஒளிக்கும் புதர்களாகவும், தம்வசதிகளுக்காய் பயன்படுத்தும் கூலிக்காரர்களாகவும் (பங்கர் வெட்டல், வீடுகட்டல், புலிகளுக்கு நீச்சல்தடாகம் வெட்டல்), ஆள்பற்றாக்குறையாகும் போது குழந்தைபிடிகாரர்களைப்போல் பிடித்து தமக்குப் பாதுகாப்புக்குப் பயிற்சியழித்தார்களே தவிர மக்களை என்ன செய்தார்கள்? போராட விட்டார்களா? மக்களின் கருத்துக்கு செவிசாய்தார்களா? அவர்கள் தேவைகளைக் கேட்டறிந்தார்களா? அரசியல் போருக்காவது தயார்படுத்தினார்களா? சொல்லுங்கள்.

போராட்டம் எப்படி நடந்திருக்க வேண்டும்

• மக்கள் அரசியல் மயப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் மக்களிடையே உருவாகியிருப்பார்கள். இன்நிலை 1976, 77ல் இருந்தது. அதை முழுமையாக மழுங்கடித்தவர்கள் புலிகளே. நல்ல அரசியல் தலைவர்களையும், புத்திஜீவிகள், அறிவுஜீவிகளைத் தேடித்தேடிச் சுட்டது புலிகளே. இவர்கள் அழிவுறும்போது பெரியமனிதவளமே அழிவுறுகிறது. இது முழுமையாகத் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். புத்தியாள்வதை விட ஆயுதம் ஆளத்தொங்கியதால் வந்த வினை தான் இது. –இங்கு புலிகள் மேல் குற்றம் சாட்டப்படுகிறது என்பதற்காக மற்றைய இயக்கங்கள் மார்பு தட்டவியலாது.

• மக்களை அரசியல் முன்னெடுப்புக்களில் ஈடுபடுத்தும் வேளை அழிவாயுதங்களில் இருந்தும், பசிபட்டிணியில் இருந்தும், குறைந்தபட்ச முதலீட்டுடன் பெருவருவாய் தரும் பயிற்செய்கை, கைத்தொழில்களை ஊக்குவிப்பதுடன் பயிற்றுவித்தலும் போதியளவு நடந்திருக்க வேண்டும். கடைசிவரையும் சிங்கள அரசின் உணவிலும், சம்பளத்திலும் தானே அரசஊழியர்களுக்கு பணம் கொடுத்தார்கள். தாம் வன்னியை வைத்திருந்தோம் என்று மார்புதட்டும் இவர்கள் எப்போ வன்னியை முழுமையாய் தம்ஆட்சியின் கீழ் அரசின் உதவியின்றி வைத்திருந்தார்கள். போராட்டகாலத்தில் தமக்குத் தேவையான உணவையும், தம்தேவைகளையும் தன்னிறைவு செய்ய மக்கள் தயார்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

• சிங்களப் பகுதியிலுள்ள போராடும் சக்திகளுடன் இணைந்து தெற்கில் ஒரு வர்க்கப் போராட்ட அவசியத்தை உணர்த்தியிருக்க வேண்டும் செய்தார்களா? எங்கே? சிங்களப் பகுதியில் ஒருபோராட்டம் உருவாகும் போது தமிழர்கள் பகுதியில் அரசின் கவனம் மிகக் குறைந்திருக்கமல்லவா.

• துவேசத்தை வளர்த்து வாக்குவங்கிகளை நிரப்பும் சிங்கள அரசியலுக்கெதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதுடன், நாம் எதற்காகப் போராடுகிறோம், எமக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் என்ன? எமது போராட்டம் சிங்களமக்களுக்கு எதிரானது அல்ல, அரசவியந்திரத்துக்கு எதிரானதே என்பதை விளக்கி ஊடக உறுதிப்பாட்டைப் பேணியிருக்க வேண்டும். இப்படிச் செய்திருந்தாலாவது சிங்களமக்களே அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்திருப்பார்கள். எமது போராட்டத்துக்கு ஊன்றுகோலாக இருந்திருப்பார்கள். வடபகுதியில் போர்நடந்தபோது கூட தென்பகுதியில் என்ன நடக்கிறது என்ற ஒன்றுமே தெரியாதவாறு இருந்ததற்கு காரணம் புலிகளின் எந்த ஒரு அசைவும் தெற்கில் இல்லாததே காரணம்.

• தென்பகுதியில் அரசஇயந்திரங்களை ஸ்தபிக்குமாறு தெற்கிலுள்ள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து தெற்கில் ஒரு போராட்டத்தை தொடர்ந்திருக்கலாம். அங்கே அரசுக்குத் தலைவலி ஏற்படும்போது எமதுபோராட்டம் வெற்றி பெறக்கூடிய சாத்தியங்கள் இருந்திருக்கும். ஏன் செய்யவில்லை?

• புலிகளுக்கு புலம்பெயர் தமிழர்களின் பணம் இருந்தாலும் அரசுக்கு தலையிடி மட்டுமல்ல பொருளாதாரச் சீரழிவுகளை ஏற்படுத்துவதனூடாக அரசை பலமிழக்கச் செய்யலாம். இராணுவ அணுகுமுறைகளால் மட்டும் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்த முடியாது என்பதை புலிகள் அறிந்திருக்க வேண்டும். இதில் எதைச் செய்தார்கள்?.

• ஏன் தென்பகுதியில் ஒரு இடதுசாரிப்போரை ஏற்படுத்த பலசாத்தியக் கூறுகள் அன்றும் இருந்தது இன்றும் இருக்கிறது. அங்கேயும் ஒரு மக்களுக்குள் போராட்டத்தை உருவாவதற்கு அடிகோலி உதவியிருந்தால் அப்போராட்டம் எம்வெற்றிக்கு அடிகோலியிருக்கும்? முயன்றார்களா?

• புலிகள் தென்பகுதியில் எந்த சரியான இராஜதந்திர முறையைக் கையாண்டார்கள்?.

• போராட்டம் என்பது போராடும் மக்களிடையே மட்டுமல்ல எதிரியின் புலத்திலும் நடைபெறுவது முக்கியம் மட்டுமல்ல இன்றியமமையாததும் கூட. செய்தார்களா?.

• புலத்தில் வாழும் தமிழர்கள் வெறும் பணம்காய்கும் மரங்களாகத்தான் பயன்படுத்தப் பட்டார்கள். இவர்களது அறிவு, அரசியல் வளங்கள் எதுவுமே பயன்படுத்தப்படவில்லை. புலிக்குப் பணம் கொடுக்காதவர்கள் எல்லோரும் துரோகியாகத் தூற்றப்பட்டார்களே அன்றி அவர்களிடன் இருக்கும் அறிவுச் செல்வத்தைப் பயன்படுத்த முனைந்தார்களா? இல்லையே!

• ஆயுதப்போரினதும், அரசியல்தீர்வினதும் அடுத்த கட்டநடவடிக்கை என்ன என்பதில் தெளிவாக இருந்தார்களா? இல்லை. இருந்திருந்தால் எல்லோரையும் கூட்டியள்ளிக் கொண்டு போய் வன்னியில் வேள்வி நடத்தியிருப்பார்களா?.

• மாவிலாற்றிலே புரிந்திருக்க வேண்டும் எதிரியின் பலம். காலம் பார்த்து, எதிரியின் பலமறிந்து, தனக்கு இழப்பின்றி அல்லது குறைந்தபட்ச இழப்புடன் எதிரிக்கு பேரிழப்பைக் கொடுப்பவன்தான் கெரில்லா. இதில் புலிகள் எதைச் சரிவரச்செய்தார்கள்? கிளிநொச்சியில் மக்களுக்குப் பேரழிவு ஏற்படும் போது புலிகள் மரபுவழியில் நின்று விலத்தி முழுமையான ஒரு கெறில்லாப் போர்முறைக்கு மாறியிருக்க வேண்டாமா?

• எதிரியைக் கேடயமாக வைத்திருப்பதே ஒரு கெரில்லாப்பாணிப் போர். தம்மக்களையே கேடயமாக்கி தம்மக்களையே எதிரிகள் அழிக்க காரணமானதுடன் தானும் தன்மக்களை அழித்த கொடூரமான இனவழிப்பாளனும், உண்மையில் இனத்துரோகிகளும் புலிகளே.

• இங்கே புலிகள் எனக்குறிப்பிடுவது முக்கியமான புலித்தலைமையையே. பலாற்காரமாகவும் வசதியின்மையாலும் புலிகளில் இணைந்து கொண்டவர்களையும், வானவேடிக்கைகளில் மயங்கிப்போன புலி உறுப்பினர்களையும் நான் இங்கு கருதவில்லை.

• பிரேமதாசா, மகிந்தா போன்றோரிடம் பணம்வாங்கி அவர்களுக்குச் சேவை செய்த புலிகள் பணத்துக்குப் பதிலாக தமிழ்மக்களின் அரசியல் அபிலாசை ஒன்றை ஆடுபொருளாக வைத்திருக்கலாமே. இதில் இருந்து தெரியவில்லையா புலிகள் போராளிகளா? மாவியாக்களா? என்பது. குறைந்தபட்சம் மாநிலசுயாட்சியையோ அல்லது அதிகாரப் பரவலாக்கலையோ எதையாவது அரசியலுக்காக, எம்மக்களுக்காகக் கேட்டிருந்தால்கூட புலிகளை மன்னிக்கலாம். இன்னும் இன்னும் எத்தனையோ… செய்திருக்கலாம். தெற்கிலங்கையில் குண்டுதாரிகளை அனுப்புவதைத் தவிர எதைத்தான் செய்தார்கள். பேருக்குமட்டும் சிறிதாய் ஏதாவதைச் செய்துவிட்டு சரித்திர நாயகனாகப் பிரபா முயன்றுள்ளார் என்பதே உண்மை. கடைசியில் தரித்திர நாயகனானதே முடிவு.

• ஒருபோராட்டத்தின் வெற்றியே மக்கள் பலத்திலும் ஒற்றுமையிலும்தான் தங்கியிருக்கிறது. சகோதரப் படுகொலைகளைச் செய்ததால் எம்மிடையே எதிரிகளை வளர்த்தார்கள். எதிரியை பொருளாதார ரீதியாக வீழ்த்தாமலும் எம்மிடையே எதிரியை வளர்தெடுத்ததாலுமே ஆயுதப்போராட்டம் வீழ்ச்சி கண்டது என்பதே உண்மை.

• திம்பு அல்லது ராஜிவ் ஒப்பந்தம் போன்றவற்றினூடாகக் கிடைக்கவிருந்த சலுகைகளைப் பெற்றுக்கொண்டு, அதிகாரங்களைச் சிறிது சிறிதாக எளிமையான போராட்டங்களினூடு கூட பெறமுயற்சித்திருக்கலாம். வெறுங்கையால் முழம்போட முயன்றார்கள் புலிகள். இப்போ மாநிலசுயாட்சியும் இல்லை புலிகளின் அழிவில் பிரபாவுக்கு மக்களின் அஞ்சலியும் இல்லை.

• புலிகளின் போக்கில் விடுதலை என்பது புலிக்கும் புலிக்குட்டிகளுக்கும் என்று எண்ணினார்களே தவிர மக்களுக்கு என்று எண்ணியிருந்தால் மக்களைப் போராட வைத்திருப்பார்கள். வெகுஜனப் போராட்டத்தின் வலுவையும், மக்கள் சக்தியையும் மக்களுக்கே உணர்த்தியிருப்பார்கள். மூன்றரை இலட்சம் மக்கள் வன்னிக்குள் பார்வையாளராக முடங்கிச் சாகும்போது கூட வெகுஜனத்தின் போராடுசக்தியை புலிகள் உணர்ந்தார்களா? குறைந்தது 15 ஆயிரம் 20 ஆயிரம் தமிழர்கள் கிடைத்த கத்தி பொல்லுடன் ஓடிப்போய் ஆமியின் மேல்பாய்ந்திருந்தால் கூட இவ்வளவு மக்கள் அழிவை நாம் தேடியிருக்க மாட்டோம். இப்படியான மக்கள் கூட்டத்தின் முன் எத்தனை ஆமிதான் எத்தனை தாங்கிகள்தான் முன்நிற்க முடியும். ரசியாவில் சிலவருடங்களுக்கு முன்னால் ஏற்படவிருந்த இராணுவப்புரட்சி மக்களால் மேற்கூறியவாறே முறியடிக்கப்பட்டது. நவீனரகத் தாங்கிகளால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. எங்கே மக்கள் சக்தி பயன்படுத்தப்பட்டது. அழிக்கப்பட்டது என்பதே உண்மை.

• தம்மிடமுள்ள பிழைகளைகளையும், குறைகளையும் மறைப்பதற்காகக் கதாநாயகவேடம் போட்டு மக்களை நம்பச்செய்து மக்களின் இயங்குசக்தியை அழித்தார்கள். சாதாரணமாக ஒர் உலங்கு வானூர்தியையே அழிக்க முடியாதவர்கள் எப்படி மிகைஒலிப் போர் விமானத்தை விழுத்தியிருப்பார்கள். கருணா உடைந்து போனபோதுதானே உள்விடயங்கள் அரசுக்குத் தெரியவந்தது. விலாசங்காட்டப்போய் மண்கவ்வியதுதான் மிச்சம்.

• மிக்29 இரசியத்தாயாரிப்பான மிகைஒலிப்போர் விமானம். இது 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தயாரிக்கப்பட்டது. இன்றைய ஐரோப்பிய அமெரிக்க போர்விமானங்களுடன் ஒப்பிடும்போது மிகமிகப் பழையைவாய்ந்ததும் தொழில் நுட்பத்திறன் குறைந்ததுமாகும். எஃவ் 14 (ரொம் கட்) அமெரிக்க தயாரிப்பு, எஃவ் 16( போரிடும் கழுகு) அமெரிக்க தயாரிப்பு, ஏரோ வ்ஃவைட்டர் (ஐரோப்பிய தயாரிப்பு) இவற்றுடன் ஒப்பிடும்போது மிக் 29 பூச்சியம் என்றே கூறலாம். இதற்கான விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ரஸ்சியாவிடமே மிகமிக மலிவான விலைக்கு வாங்கியிருக்கலாம். அதன் விலை விமானத்தின் விலையைவிடப் பலவாயிரம் மடங்கு மலிவானது. ஏன் செய்யவில்லை? புலம்பெயர் தமிழரிடம் வசூலித்த பணங்கள் எங்கே?.

• செசினா எனும் தனிநபர் சிறுவிமானத்தை விடமலிவான பெறுமதியற்ற, ஒருவிமானத்தை வாங்கி ‘ஷோ’ காட்டி (படங்காட்டி) எதிரி எதிர்பார்த்ததை விட பெரிய போர்விமானங்களை வாங்கச் செய்து தனக்குத்தானே தன்தலையில் மண்போட்டார்கள் புலிகள். ஒரு கெரில்லாப் போருக்கு விமானம் முக்கியமா? விமான எதிர்ப்பு ஏவுகணை முக்கியமா? இதை சாதாரண குழந்தைப்பிள்ளையே இதற்குப் பதில் சொல்லும். இரண்டு பேரைக் கொண்டு பறப்புகளை ஏற்படுத்தும் புலிகளின் விமானங்கள் 800கிலோ நிறையுடைய குண்டுகளை கொழும்பிலுள்ள இராணுவத்தளத்தின் மேல் போட்டதாம். யாருக்குக் காதில் பூவைக்கிறார்கள்?

• மக்கள் கருத்துக்களைத்தான் புலிகள் கேட்கவில்லை மாற்றுக்கருத்தாளர்களின் கருத்தையாவது செவிமடுத்திருக்கலாம். கேட்டிருந்தாலே போதும் குறைந்தபட்சம் சிந்தனைக்கு ஏதாவது கிடைத்திருக்குமல்லவா? மக்களின் கருத்துக்களையோ மாற்றுக்கருத்தாளர்களின் கருத்துக்களையோ செவிமடுத்து தன்பிழைகளைச் சரிசெய்து கொண்டு போராடியிருக்கலாம்.

• ஒரினத்தின் தலைவிதியை, மானத்தை, வரலாற்றை, மதிப்பற்ற உயிர்களை துவம்சம் செய்து தனிமனிதனாக தனிக்காட்டு ராஜாவாக வாழமுயன்றதன் விளைவே இது. தனக்கு அடுத்ததான ஒருசரியான தலைவனை தெரிவு செய்யவே தகுதியற்ற பிரபாவுக்கு போராட்டம் ஒரு கேடா?

• மோட்டுச் சிங்களவன் மோட்டுச் சிங்களவன் என்றோமே இந்திய இராணுவத்தைக் கலைக்கவும், பலதமிழ் அரசியல் எதிர்ப்பலங்களை தொலைக்கவும் பிரேமதாசா புலிகளுக்கு பணமும் ஆயுதமும் கொடுத்ததை யாவரும் அறிவர். அங்கே புலிகள் புத்திசாலிகளாக இருந்திருந்தால் பிரேமதாசாவின் ஒருகல்லில் இரண்டு மாங்காய்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். இதுவே ராஜீவ் கொலையாக விரிவடைந்து ஒரு இனத்தின் விடுதலைகே உலைவைத்து நிற்கிறது.

• வன்னிப்புலிகள் வன்னிப்புலிகள் என்கிறார்களே புலிகள். இதற்கு ஒழுங்காக வித்திட்டு நீர்பாச்சிப் பாதுகாத்து வளர்த்தது யார்? பிரபாவா? மாத்தையா… இதை மறந்து விடாதீர்கள். கிட்டு யாழ்பாணத்தில் விலாசம் காட்டினாலும். அடித்தளத்தில் இளைஞர்களை இணைப்பதற்கான இணையங்களை ஊன்றியதும் மாத்தையா, பண்டிதர் போன்றோன் என்பதை அறிக.

• முதன் முதலில் புலிகளுள்ளேயே சகோதரப் படுகொலையை வன்னியில் வைத்து செய்தவர் பிரபா. இது பலகாலமாய் மறைக்கப்பட்டு வந்தது. புளொட் பிரிந்தபின்தான் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டன. பற்குணம் எனும் சுதுமலையைச் சேர்ந்த இளைஞர் சிறியவயதிலேயே தன்னை ஆயுதப்போராட்டத்தில் இணைத்துக் கொண்டவர். இதை சகோதரப் படுகொலை என்பதா? தோழமைக் கொலை என்பதா? இக்கொலையின் ஆரம்பம் தான் பிரபாகரனின் தமிழினவழிப்பு.

• ஆரம்பத்திலேயே புலிகளை சரியாக இனங்கண்டு அவர்களைப் புறம்தள்ளி வெளியில் புதியபாதையில் புறப்பட்ட எண்ணிய தோழர் சுந்தரம் (சிவசண்முகமூர்த்தி) கைப்பேனா சுடப்பட்டது. எம்புதியபாதைக்கு உலைவைக்கப்பட்டது. புத்திஜீவிகள் அழிப்பு அன்றே ஆரம்பமானது. அன்று துப்பாக்கிகளுக்கு முன்னோடிகளாக போனாக்களே போராட்டத்தைக் கொண்டு செல்லவேண்டும் என்பதை உணர்ந்திருந்தவர்கள் நாம். திரும்பிப் பாருங்கள் இன்று புத்தி வென்றதா? ஆயுதச் சக்தி வென்றதா? சரி இன்றும் ஆயுதம் தாங்கிய குழுக்களே மக்களின் விடுதலைக்காக பேனாக்களுக்கு வழிவிடுங்கள்.

• ஒரு கந்தசட்டியின் போதுதான் முஸ்லீம் மக்கள் யாழ்பாணத்தை விட்டு இரவோடிரவாக உடுத்த உடுப்புடன் கலைக்கப்பட்டார்கள். புலிகள் செய்தபழி அடுத்த கந்தசட்டிக்கு யாழ்பாணமக்கள் புலிகளால் வன்னிக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். படியுங்கள் தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.

• புலிகள் சகஇயக்கங்களைத் தடைசெய்தார்கள் உலகமே புலிகளைத் தடைசெய்தது. எம்மிடையே பகைகளை வளர்ப்பதனால் வெற்றிப்பாதையில் நாம் பின்னடைவையே சந்திப்போம்.

• புலித்தடையை நீக்க உலகின் முன் நல்லபாம்பாகப் புலிநடிக்கத் தொடங்கியது. உலகம் கண்மூடிக்கொண்டுதான் இருந்ததா? இல்லையே. தெருத்தெருவாய் புலிகள் எம்மையும் மக்களையும் காப்பாற்றுங்கள் எனும் போது உலகம் என்ன சொன்னது? மக்களை வெளியில் விடு. புலிவேறு மக்கள் வேறு என்பதை உலகம் உணர்ந்திருந்தது. மக்களுக்காகப் போராடியிருந்தால் அம்மக்களையே பயணக்கைதிகளாகவும், கேடயமாகவும் பாவித்திருக்க மாட்டார்கள். உலகின் உயர்குற்றங்களின் ஒன்று மனிதக் கேடயம் இதைச் செய்து கொண்டு எங்களைக் காப்பாற்றுங்கள் என்றால் யார் வருவார்? உலகநாடுகளின் உதவி வேண்டுமாயின் அவர்களின் சட்டதிட்டங்களுக்குப் பணிந்து போவது முக்கியம்.

• மாவிலாற்றில் புலிகள் வாங்கிய அடியுடன் உணர்ந்திருக்க வேண்டும் எதிரியின் பலத்தை. இதை உணராதவன் எப்படி ஒரு கெரில்லாப் போராளியாக மட்டுமல்ல மனிதனாகவே இருந்திருக்க முடியாது. எதிரியின் பலமறிந்து அவன் பலவீனத்தை தன் தாக்குதல் வளமாகக் கொள்பவனே ஒரு கெரில்லாப்போராளி. கெரில்லாப் புலிகளின் விறுத்தத்தைப் பாருங்கள். புலிகள் கிளிநொச்சியிலேயே பின்வாங்கியிருந்தால் மக்கள், உடமைகள் காப்பாற்றப்பட்டிருக்கும். புலிகள் தம் கெரில்லாப் பாணியிலேயே தாக்குதல்களைச் செய்து கொண்டிருந்திருக்கலாம். சந்தர்ப்பம் சூழ்நிலைகளைச் சரிவர அறிந்து போராடுபவனே உண்மையாக கெரில்லா.

• புலிகள் ஆயுதங்களை வெளியே எடுக்கும்போது சரியாகக் குறிபார்த்து அந்த இடத்திலேயே ஏவுகணைகள் வந்து விழும்போது புலிகள் உணர்ந்திருக்க வேண்டும் இந்தியாவின் ராடார்கள் (கதிரிகள்) விமானத்தை உளவுபார்க்கும் கதிரிகள் அல்ல. அவை காந்தப்புலமறிகதிரிகள் என்பதை. அக்கதிரிகளை இலகுவாகப் போக்குக்காட்டி அடித்திருக்க முடியும்.

• குழந்தைப் போராளிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று உலகநாடுகளால் புலிகள் எச்சரிக்கப்பட்டார்கள். இதற்குச் செவிமடுக்காது தொடர்ந்தும் ஏன்? எதற்கு என்று கேட்கவலுவற்ற இயந்திரமாக்க வசதியான குழந்தைகளைப் போருக்குப் பயன்படுத்திக் கொண்டு எப்படி உலகநாடுகளிடம் எம்மைக் காற்பாற்றுங்கள் என்று கேட்கமுடியும். இவற்றின் விளைவுதான் மேற்குலகின் மௌனம்.

• தமிழ்மக்களைப் பிரதிநிதிப்படுத்திய புலிகள் ஒரு தனிமனிதனான பிரபாகரனிலும் ஆயுதக்கொள்வனவு ஒரு சிலரின் மட்டுமே தங்கியிருந்ததன் விளைவே ஒரு தனிமனிதனில் அழிவில் ஒரினத்தின் விடுதலைதகர்ப்பு. குறைந்தபட்சம் ஒருசுற்றுத்தலைமை புலிகளுக்குள் இருந்திருந்தாலாவது எம்மக்கள் மாற்றங்களை உணர்ந்திருப்பார்கள். போராட்டம் திருப்பங்களைச் சந்தித்திருக்கும். அரசியல் விழிப்புணர்வு உருவாகச் சந்தர்பம் இருந்திருக்கும். மூளைச்சலவை இன்றியிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

• கெரில்லாப் போரில் விடுதலையடைந்த நாட்டின் போராட்ட வரலாறுகளைப் படித்துப் பார்த்தால் தெரியும் கெரில்லாக்கள் கடைசிவரையும் கெரிலாக்களாகவே இருந்திருக்கிறார்கள். உ.ம் சீனாவில் மாவேயின் போர், சேயின் போர். புலிகளின் கெரில்லாக்கள் மரபுவழிப்போராட முயன்றதன் விளைவும், மனநிலை அமைப்புமே முக்கியமான வன்னித் தோல்வியாகும். சரி மரவுவழியில் இராணுவமொன்றை எல்லைக்குத் தயாராகக் கட்டி எழுப்பும் போது கெரில்லாக்கள் தொடர்ந்தும் கெரில்லா முறையில் போராட்டத்தை மேற்கொண்டிருக்க வேண்டும். அந்த கெரில்லாக்கள் கிளிநொச்சி நெருக்கடியில் பரவலாக்கப்பட்டிருக்க வேண்டும். கிழக்கிலும் வடக்கிலும் விஸ்தரிக்கப்பட்டிருக்க வேண்டும். வன்னி நெருக்கடியின் போது பின்புறத்தாக்கல் ஊடறிப்புத்தாக்கலூடு வன்னிப்புலிகளுக்கு உதவி வழங்கியிருக்கலாம். எதிரியின் சிந்தனையும் போர் உக்கிரமும் திசைதிருப்பியிருக்கும்.

கட்டுரை நீள்வதால் இத்துடன் முடித்துக் கொள்வது அவசியமாகிறது. புலிகளையோ பிரபாகரனையோ குறை கூறுவதற்காக இதை நான் எழுதவில்லை. இவை வருமுன்காக்கும் ஒரு செயலே. எம்மினப்போராட்டம் பிரபாகரன் எனும் தனிமனிதனுடன் அழிந்து விடப்போவதில்லை. காலத்துக்காகக் காத்திருக்கும் மக்கள், அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளந்தெழுவார்கள் என்பது திண்ணம். அப்போது புலிகள் விட்ட பிழைகளை அவர்களும் மீண்டும் விடக்கூடாது என்பதற்காகவே வெள்ளம் வருமுன் அணைகட்ட விரும்புகிறேன். பிழைகள் சுட்டிக்காட்டாத வரை அவைகள் அனைத்தும் சரியானவை போலவே தோற்றமளிக்கும். புலிகள் ஆரம்பத்தில் செய்த இனப்படுகொலைகள் இதற்கொரு உதாரணமாகும். மக்கள் எதிர்க்காது இருந்ததை புலிகள் சம்மதம் என்றே எடுத்துக் கொண்டார்கள். மௌனம் சம்மதம்தான்.

அன்றிருந்த ஒருசில துப்பாக்கிகளுக்கே பயந்ததால் பின் நிரந்தர மெனனத்தை மக்கள் கடைப்பிடிக்க நேர்ந்தது. குறைந்த பட்சம் கைகளால் எழுதிக் கூடப் புலிகளின் படுகொலைகளுக்கு எதிராய் நோட்டீசாவது ஒட்டியிருந்தால் ஒருதரம் புலிகள் சிந்திப்பதற்கு சந்தர்ப்பம் கொடுத்திருப்போம். புலிகளுக்கு எதிராக மக்கள் எதுவும் செய்யவில்லை என்பதே என்வாதம். மக்கள் தம் எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும் ஜனநாகயகம் அதாவது சன-நியாயம் நிலைநிறுத்தப் பட்டிருக்க வேண்டும்.

ஒரு குற்றத்தைச் செய்பவனும் குற்றவாளி, அது குற்றமென்றறிந்தும் மௌனமாய் இருப்பவனும் குற்றவாளியே. தொடர்ந்தும் யாரும் குற்றவாளிகளாக இருக்கக்கூடாது என்பதற்காகவும், வருமுன் காப்பதற்காகவுமே இதை எழுதுகிறேன். இன்று புலிகள் ஒரு வரலாறு இதை மறக்கவோ அன்றி மறுக்கவோ இயலாது. இதனால் வரலாறு எமக்குத்தந்த பாடங்களைக் கற்றுக்கொள்ளாது போனால் நாம் மீண்டும் மீண்டும் வழுக்கித்தான் விழுவோம். பழைய தமிழ்மன்னர்களின் வரலாற்றிலும் வன்னியே மறைவிடமாகவும், போர்களமாகவும் இருந்திருக்கிறது என்பதை அறிக.

அன்புடன் என்றும் என் இனியமக்களையும், மொழியையும் உண்மையன்புடன் நேசிக்கும் குலன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 Comments

  • Gajan
    Gajan

    டTTE and Piraba have launched a terrorisim not a liberation struggle if he is a leader of tamil how can he ordered to kill other groups and tamil boys furthermore how can kill his own commerates like Mathayas group or Elanthirayans group or Eastern boys – these all proves he is not a freedom fighter he is a Terrorist in the indian region now he is gone. its good for tamils.

    Reply
  • Kumaran
    Kumaran

    Please dont lose your credibility by releasing article like the above one.I couldnot concentrate in it .Therefore I could not continue to read it.Now it is the time to come out with the correct ideology which is applicable to solve the problems of the oppressed and exploited people of our mother Lanka.

    Reply
  • thiva
    thiva

    புத்தகமாக வெளிவந்து எல்லோர் கைகளினாலும் தமிழ் மக்களின் கவனத்துக் கொண்டு செல்லப்படவேண்டிய மிக முக்கியமானதும் அவசியமானதுமான அருமையானதோர் கட்டுரை. ஆசிரியர் குலன் அவர்களிடம் ஓர் வேண்டுகோள் இதுபோன்ற பல கட்டுரைகளை இணைத்து அவற்றை நீங்கள் புத்தகமாகவே வெளியிடவேண்டும் என்பது. அத்தோடு இதனை ஒலிவடிவில் மாற்றம் செய்து முடிந்தவரை எல்லோரது இ-மெயில் முகவரிகளுக்கும் அனுப்பிவைத்தல் பொருத்தமானதாகும். நன்றி- திவா.

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    //கரையோரப் பக்கமாகவே பௌத்தம் வடகிழக்குப் பகுதிகளில் பரவியிருந்தது. தற்போது சிங்களவர்கள் பௌத்தர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக பௌத்தம் சிங்கள மக்களுக்கு மட்டும்தான் உரியது என்பது பெரும் தவறு. தமிழர்கள் நாகர்கள் என்பது ஆய்வியல் உண்மை. இந்நாகர்களுக்குரிய விகாரையே நாகவிகாரை என்பதாகும். இது நயினாதீவில் உள்ளது என்பதை அறிக. நாகத்தின்மேல் புத்தர் படுத்திருப்பதுபோன்ற பலசிலைகள் தென் கிழக்காசியாவில் காணலாம். நாகவணக்கமானது உலகின் பலவிடங்களிலும் நடந்திருக்கிறது என்பதற்கு இது சான்றாகும்.//

    மேலே உள்ள நயினாதீவை சிங்கள மக்கள் நாகதீப எனவும், புத்த பெருமானார் வந்த இடம் என்றும் கடந்த காலங்களில் நம்பி வணங்கி வந்துள்ளனர். இருந்தாலும் புத்த பெருமான் வந்த உண்மையான நாகதீப எனும் இடம் மையங்கனையில் இருந்து பிபிலை நோக்கிச் செல்லும் போது நாகதீப என்றே இருக்கிறது. இதை முக்கியமான பெளத்த துறவிகளே இன்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    அடுத்து `சிங்ஹல` என ஒரு இனம் இல்லை என்றும் இந்த பெளத்த துறவிகளே சிங்களவர்களிடம் விளக்கியும் இருக்கின்றனர். இவை குறித்த சரித்திர தகவல்கள் எத்தனை பேரிடம் சென்றதோ தெரியாது?

    லங்காபுரியில் (சிறீலங்காவில்) யக்ஷர் , நாகர், தேவர் மற்றும் அசுரர் என நான்கு இனங்கள் இருந்ததாகவும், இந்த நான்கு (சிவ்)இனங்களையும் சேர்ந்தவர்கள் வாழும் தேசத்தை சிவ்ஹெல (நான்கு இனம் கொண்ட நாடு) என அழைத்ததாகவும், அதுவே பின்னர் சிவ்ஹெல என்பது சிங்ஹல என மருவியதாகவும் சொல்லப்படுகிறது. பல்லின மக்கள் என்பதை ஹெலதிவயின என அழைக்கின்றனர்.

    திராவிடர் என்பதில் தமிழர், கன்னடர், தெலுங்கர் மற்றும் மலையாளிகள் அடங்குவது போல சிங்ஹல என்பது நான்கு இனங்கைளக் கொண்ட நாடாக இருந்துள்ளது. இந்தியாவில் இருந்த வந்த மலையக மக்களையே சிங்களவர்கள் திரவிட (திராவிடர்) என அழைத்தனர்.

    சிங்களவர்களால் தமிழர்கள் தெமள (தமிழர்) என அழைக்கப்படுவதை விரும்பாது திரவிடர் என அழைக்கத் தலைப்பட்டுள்ளனர். தற்போது தமில (தமிழர்) என சிங்களவர்களால் தமிழர் அழைக்கப்படுகின்றனர். தெமள என்பது இல்லாமல் போயுள்ளது.

    அரசியல்வாதிகள் தமது சுயநலங்களுக்காக சரித்திர உண்மைகளை மறைத்து அரசியல் செய்யப் போனதில் ஒரே தேசத்துக்குள் பிரிவினைகள் உருவாகியுள்ளதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 60 வருடங்கள் சென்ற பின்னர், சுமார் 30 வருடங்கள் குடும்ப சண்டையிலேயே (இன சண்டையில்) நம்மை நாம் இழந்துள்ளோம்.

    60 வருடங்களுக்கு முன் ஒரு உணவகத்துக்குள் நுழைய முடியாத இனமாக இருந்த ஒரு இனம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது ஒபாவின் தந்தையாரால் அமெரிக்க உணவகம் ஒன்றுக்குள் செல்ல 60 வருடங்களுக்கு முன் முடியாமல் இருந்தது. அன்று ஒதுக்கப்பட்ட அந்த இனம், இன்று அதே இனத்தை ஆளும் ஒருவராக, அவரது மகன் ஒபாமா தேர்வாகியுள்ளார். அங்கே இன மத பேதம் இல்லை என்று சொன்ன பெளத்தம் இல்லை. ஆனால் மனிதம் ஏதோ ஒரு வகையில் இருக்கிறது என்கிறார் வலபொல தேரர்.

    சிங்களம் தெரிந்தோர் அவரது வெசாக் தின பேச்சை கேட்கலாம்.
    http://www.radio.ajeevan.com/

    மேலத் தேசத்தவர்கள் பேச்சு வார்த்தைகள் மூலம் ஒவ்வோரு அடி முன் நகர்வார்கள். நாமோ பேச்சு வார்த்தைகள் மூலம் மட்டுமல்ல நடைமுறையிலும் ஒவ்வொரு அடி பின் நகர்ந்தே செல்ல முனைவது நமது இனத்துக்கு மட்டுமல்ல, நமது தேசத்துக்கும் ஆபத்தாகவே அமைகிறது. இப்போதைய தேவை ஒன்றுபட்ட இன நல்லிணக்கத்துடனான அமைதி வாழ்வே தவிர, மற்றோரு புரட்சிப் போக்கல்ல. குலம் அவர்களின் கட்டுரை புலிகளின் பலவீனங்களை சொல்லி புதியதொரு போராட்டத்துக்கு மக்களை தயார் பண்ணுவதாக தெரிகிறது.

    போராட்டங்கள் என்பவை இன்றைய கால கட்டத்தில் அங்கு தேவையற்றது. அந்த சக்தி அந்த மக்களிடம் இல்லை. அவர்கள் களைத்து உள்ளனர். இந்நிலையில் இன்னொரு புரட்சி என்பதெல்லாம் மரத்தால் விழுந்தவனை மாடு குத்த வைப்பதற்கே வழி செய்யும். இன்றைய தேவையாக இருப்பது இலங்கையில் வாழும் அனைத்து தமிழரும் – இஸ்லாமியரும் – சிங்களவரும் – பறங்கியரும் – ஏனைய இனத்தவரும் நிரந்தரமான அமைதியோடு வாழும் சூழலும், அவர்களது கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடுமேயாகும். இவை நாளைய உலகில் அனைத்து இலங்கையரையும் தலை நிமிர்ந்து மகிழ்வாய் வாழ வழி செய்யும்.

    நன்றி

    Reply
  • Kulan
    Kulan

    குமரன்! முழுக்கட்டுரையையும் வாசிக்காமல் கருத்தெழுதுவது தகுமா? நீங்கள் ஐக்கிய இலங்கை என்கிறீர்கள். இதைத் தீர்மானிக்க வேண்டியது நாங்கள் அல்ல. அங்குள்ள தமிழர்களே. எம்மக்களுக்குச் சரியான தீர்வும் கெளரவமும் கொடுக்கப்படாத பட்சத்தில் மீண்டும் ஒரு போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது. இதுதான் உலகின் வாழ்வியல். இன்று நாம் எதிர்பார்ப்பது அரசின அடுத்தபடியான நடவடிக்கையை. இதை அரசு உடன் செய்யாது காரணம் தேர்தல் எதிர்பார்ப்புக்கள் எதிர்வு கூறல்கள். இக்காலகட்டத்தில் நாம் செய்யப்கூடிய ஒன்றே ஒன்று தோல்விக்கான காரணங்கள் என்ன? நடந்தது சரியான போராட்டமா? எப்படி மனிதஅழிவுகளை தவிர்த்திருக்கலாம். வெளிநாடுகளில் படித்தவர்கள் இதை நன்கு உணர்வர். ஒரு புரொயெக்ரைச் செய்து வெற்றி கண்டாலும் அதைபற்றிய மீளாய்வை வெள்ளையர்கள் செய்வதுண்டு. அதுபோன்றதே இதுவும். எம்மண்ணில் பெரும் மனிதப்பேரழிவு நடந்திருக்கிறது. அப்படியிருந்தும் அதுபற்றிய மீழாய்வென்றைச் செய்ய வேண்டாம் என்கிறீர்களா? எம்மக்களின் புதைகுழிகளுக்கு மேல் டிஸ்கோ கட்டி ஆடுவதன் மூலம் இனவெறி உருவேற்றப்பட்ட உதிரத்தைக் எந்தப்பம்பை வைத்து உறிஞ்சி எறியமுடியும். புலிகள் மேலான முழுமையான சரணாகதியின் விளைவுதானே இன்றைய எம்மக்களின் அழிவு. இதே பிழையை உண்மையற்ற நம்பிக்கையற்ற அரசின மேலான சரணாகதி எம்மக்களை அடிமையாக்கவே வழிவகுக்கும் என்பது என்கருத்து. ஐக்கிய இலங்கையை நான் வெறுக்கவில்லை அங்கேயும் எம்மக்கள் சிங்களமக்கள் போல் சமமாக புத்த தர்மப்படியாவது கெளரவமாக நடத்தப்பட வேண்டும் என்பதே என் அங்கலாய்ப்பு.

    Reply
  • Kulan
    Kulan

    திவா! உங்களுடைய கருத்துக்கு தலைவணங்குகிறேன். புத்தகம் அடிப்பதற்கு நேரம் பணம் என்பன ஒரு காரணியாக அமைகிறது. ஒரு செயற்திட்டம் வெற்றியாகவோ தோல்வியாகவே அமைந்தாலும் அதுபற்றிய மீழாய்வு என்பது என்றும் அவசியம். இது ஒரினத்தின் வரலாறுமட்டுமல்ல அழிவுமாய் அமைந்தவிடயம் இதை மீழாய்வு செய்யாமல் எப்படியிருக்க முடியும். புத்தகமாய் வெளியிடும் எண்ணம் இருந்ததில்லை. இன்றைய தேவை என்ற கணிப்பில்தான் இதை எழுதினேன். உங்களின் பின்னோட்டத்தின் பின்தான் புத்தகவிடயம் என் சிறுமூளையில் தட்டுப்பட்டது. நீங்களும் உங்களிடமுள்ள மின்னஞசல் முகவரிகளுக்கு இதை கொப்பி பண்ணி அனுப்புவதுடன் லிங்கையும் கொடுத்து விடலாம். தேசத்துக்கும் வாசகர்கள் அதிகரித்ததாக இருக்குமல்லவா. ஒருகல்லில் இருமாங்காய். நன்றி திவா

    Reply
  • Nackeera
    Nackeera

    /லங்காபுரியில் (சிறீலங்காவில்) யக்ஷர், நாகர், தேவர் மற்றும் அசுரர் என நான்கு இனங்கள் இருந்ததாகவும், இந்த நான்கு (சிவ்)இனங்களையும் சேர்ந்தவர்கள் வாழும் தேசத்தை சிவ்ஹெல/அஜீவன்

    இது இராமாயண மித்துக்களாகம். இயற்கையை வணங்கியர்கள் இயக்கர்கள் என்றும் நாகங்களை வணங்கியவர்கள் நாகர்கள் என்றும் வகுக்கப்பட்டார்கள். இந்த நாகவணக்கம் தென்கிழக்காசியாவில் புத்தமத்தின் பரம்பலுக்கு முன்னரே பரவியுள்ளது. கிழக்குகளில் புத்தர் நாகமெத்தையில் படுத்திருப்பது போன்றும் நாகமெத்தையில் தியானிப்பது போன்ற சிலைகளை விகாரைகளில் காணலாம்.

    /மேலே உள்ள நயினாதீவை சிங்கள மக்கள் நாகதீப எனவும், புத்த பெருமானார் வந்த இடம் என்றும் கடந்த காலங்களில் நம்பி வணங்கி வந்துள்ளனர். இருந்தாலும் புத்த பெருமான் வந்த உண்மையான நாகதீப எனும் இடம் மையங்கனையில் இருந்து பிபிலை நோக்கிச் செல்லும் போது நாகதீப என்றே இருக்கிறது. இதை முக்கியமான பெளத்த துறவிகளே இன்று ஏற்றுக் கொண்டுள்ளனர்/

    இக்கூற்று உண்மையாயினும் இன்னுமொரு தகவலை இங்கே தருகிறேன். நாகர் இலங்கை முழுவதும் பரிவ வாழ்ந்தாலும் வடபகுதியிலேயே செறிந்து வாழ்ந்தார்கள். புத்தர் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு வந்தபோது மகோதன்; குலோதரன் எனும் இருநாக அரசர்கள் இரத்தின சிம்மாசனத்துக்காக சண்டையிட்டுக் கொண்டனர். மகோதன் நாகதீவின் அரசநாகவும் மருமகனான குலோதரன் கந்தமாதனத்தில் அரசனாகவும் இருந்தனர். இவர்கள் படைகள் சங்காரத்துக்குத் தயாராக இருந்தபோது புத்தர் அவர்களைச் சமாதானம் செய்துவைத்தார். அதனால் அவ்வரசர்கள் தம்சிமானத்தை புத்தருக்கே அழித்தனர் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொண்டுள்ளது. இப்பிரசனை தமிழின் ஐம்பெரும் காப்பியங்கில் ஒன்றான மணிமேகலையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தரின் காலப்பகுதியில் நாகர்கள் புத்தமதத்தைக் தழுவியிருந்தார்கள் என்பதையும் வடபகுதியில் மட்டுமல்ல தென்பகுதியான களனியாவரை பரவிவாழ்ந்தார்கள் என்பதை முன்னையமகாவம்சம் ஒப்புக்கொண்டிருந்தது. இலக்கிய பண்டைய தேசப்படமான தொலமியின் சான்றில் நாகர்கள் தேவிநுவர> நாகர்கோயில்;திருக்கோவில்; நனிகிரி; தென்கிழக்கில் நாகதும்; நயினாதீவு எனும் மணிபல்லவம்; மகாவிலாட்சி எனும் மதவாச்சி; ஐம்புகோள் எனும் காங்கேசந்துறை;வல்லிபுரம் நாகர்கோயில்; குருந்தன் குளம்; மிகுந்தலைப்பகுதி (இங்கேதான் பிற்பகுதியில் இயக்கர்கள் பெளத்தத்தைத் தொடர்ந்தார்கள்); நாகசதுக்கம்; கதிரமலை எனும் கந்தரோடை; கரியாலை நாகபடுவான்;மாந்தை எனும் மகாதீர்த்தம் இப்பகுதிகளில் நாகர் மிகமிகச் செறிவாக வாழ்ந்தனர். ஆதராங்கள் மணிமேகலை; மகாவம்சம்; கலாநித குணராசாவின் கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்டன. அன்புடன் நோர்வே நக்கீரா

    /திராவிடர் என்பதில் தமிழர், கன்னடர், தெலுங்கர் மற்றும் மலையாளிகள் அடங்குவது போல சிங்ஹல என்பது நான்கு இனங்கைளக் கொண்ட நாடாக இருந்துள்ளது/
    அஜீவன்! இவை தமிழ் எனும் செம்மொழியில் இருந்து வடமொழிக்கப்பில் மாற்றமடைந்து மொழிகளாகும். இவற்றுடன் இன்னுமொரு மொழி உண்டு அதுவே துலு. இதை மனோன்மணியத்தில் தமிழன்னை வாழ்த்தில் பார்க்கலாம்.

    Reply
  • Kulan
    Kulan

    அஜீவன், நீங்கள் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள். ஏதிலியாய் ஒப்புக்கொண்டு அடிமையாக வாழ்வதை விட சமஉரிமையுடன் இலங்கையராக வாழக்கூடிய நிலை எமக்குப் புலிகள் காலத்தில் கிடைக்கப்பெற்றும் அதை ஊதாசீனம் செய்து அடிமை உணர்வேற்று விட்டுச்சென்றிருக்கிறார்கள் எம் அரசியல்வாதிகளும் போராளிகளும். ஐக்கிய இலங்கைக்குள் எம்மக்கள் கெளரவமாக வாழ்வார்கள் ஆனால் அதை வரவேற்றுக் கொண்டாட யார் தயாராக இல்லை. ஆனால் அரசின் போக்கு ஐக்கிய இலங்கையை வலியுறுத்தினாலும் தமிழர்க்கு உரிமை என்று வரும்போது ஏன் இழுத்தடிப்பு. சரி இன்று அகதிகள் முகாமில் நடப்பது என்ன? சுயமாக வாழத்துடிப்பவர்களை விட்டுவிடுங்களேன். என்கட்டுரை போருக்கான தயார்படுத்தல்ல ஒருமீழாய்வம் எதிர்காலத்துக்கான எச்சரிக்கையுமே. எச்சரிப்பு எதுவுமில்லாமல்; கவனத்தில் கொள்ளாமல் முழுநம்பிக்கைச் சரணாகதியால் நடந்து முடிந்ததை தான் நாம் எம்கண்களால் கண்டோமே. போதாதா. எதிர்வு கூறுகிறேன் கேளுங்கள் இனத்துவேசம் பண்டாவில் இருந்து இன்றுவரை இரத்தத்தில் ஊற்றி வளர்க்கப்பட்டுள்ளது. இதைக் களைவதற்கான செயற்திட்டங்கள் நடைமுறைகள் இல்லாமல் வெறும் ஐக்கிய இலங்கை என்று கதைப்பதனூடாக மீண்டும் ஒருபோருக்கே சிங்களஅரசு வித்திடுகிறது என்பதை கூறிவைக்க ஆசைப்படுகிறேன். தமிழர்களின் மனங்களை வெல்லாதவரை அரசின போராட்டும் தோல்வியானதே. இதன் விளைவு இப்போ தெரியாவிட்டாலும் எமது சந்ததி எதிர்கொள்ளும். சிங்கள அரசிடமான முழுமையாக சரணாகதி தமிழ்மக்களின் அடிமைவாழ்வுக்கே வித்திடும். விழிப்பாக இருக்கவேண்டிய காலம் இதுவே.

    Reply
  • amorelova
    amorelova

    if you know everything right. then why you didnt try to save the tamils… from LTTE & the srilankan genocide army? you have a simple answer dont you? LTTE didnt let to function others…. isnt it? so why dont you understand the same theory to LTTE? how many obstacle they had….. how do they overcame from it and form the tamil’s self homeland. if the globalism get to the minority land result is this….. please undersatnd it. or give me example who overcome from it? LTTE didnt die by its self…. when a big bomb destroy a small part which is happen to them. if tamils are LTTE. then if Tamils not there LTTE not there either. this is the basic theory the destroyer had and destroyed tamils. if tamils is not there what the point LTTE being there?

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    நன்றி நக்கீரன். மேலதிக தகவல் தெளிவைத் தருகிறது. விபரமாக எழுதியுள்ளீர்கள்.
    …………………….

    குலன் , உங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் கட்டுரையில் நல்ல பல விடயங்கள் உள்ளன. நடந்ததை எழுதுகிறீர்கள். நடக்கப் போவதை? யுத்தத்தால் இலங்கையில் தமிழர்கள் மட்டுமல்ல, அனைத்து இனத்தவரும் சொல்லோண்ணாத் துன்பத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அது வெளியே தெரிவதில்லை. இதுவே உண்மை. தமிழன் மட்டும் சாகவில்லை. சிங்கவனும் செத்தான். இஸ்லாமியனும் செத்தான்.

    யுத்தம் தமிழர்களை அழித்தது போல, சிங்கள – இஸ்லாமிய மற்றும் ஏனைய இனத்தவரது அடி மடியில் ஏதோ ஒரு விதத்தில் அடித்தே உள்ளது. அனைத்து இனத்திலும் யுத்தம் மரணத்தை உண்டு பண்ணியுள்ளது. யுத்தம் நடந்த பகுதி மக்களைப் போலவே, யுத்தம் காரணமாக அச்சத்தோடு வாழ்ந்த மக்களும் மனநோய்க்கு ஆளாகியுள்ளார்கள். மன அழுத்தத்துக்கும் ஆளாகி உள்ளார்கள்.

    60 வருட பிரச்சனையை 60 நாட்களில் தீர்க்க முடியாது? ஐக்கிய இலங்கை என்று பேசாமல் ஐக்கியத்தை நோக்கி ஒரு அடி கூட வைக்க முடியாது. முதலில் தங்கள் கருத்துகள் முன் வைக்கப்பட வேண்டும், அக் கருத்துகளின் பேரில் விவாதம் நடைபெற வேண்டும். அதன் நன்மை தீமைகள் கண்டறியப்பட்டு, நடைமுறைச் சாத்தியமானவை செயல்படுத்தப்பட வேண்டும். நாம் கூட என்ன செய்கிறோம். அது நடக்காது என்பதில் விடாப்பிடியாகத்தானே இருக்கிறோம்? ஐக்கியத்துக்காக பேசும் குரல்களை விட, ஐக்கிய முறிவை ஏற்படுத்தப் பேசும் குரல்கள்தானே அதிகம்?

    என்னதான் ஆடினாலும், இலங்கையில், இனி ஒரு போர் நிகழும் என்பது சாத்தியமில்லை. அதற்கான ஆட்களும் இல்லை பலமும் இல்லை. இதுவே யதார்த்தம். அப்படி யாராவது துணிந்தால் அது அவர்களது முட்டாள்தனமேயன்றி வேறில்லை.

    சிங்கள இளைஞர்களைக் கொண்ட ஜேவீபியே ஆயுதப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க நினைக்கவே அஞ்சுகிற நிலையில் தமிழர்களையோ அல்லது இஸ்லாமியர்களையோ மீண்டும் ஆயுதம் தூக்கவைக்க வேண்டும் என்பது போன்ற அறிவில்லாத செயல் வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

    தமிழர் மனங்களை வெல்வது என்பதை விட, ஒட்டு மொத்த இலங்கை மக்களை ஐக்கியப்படுத்துவதற்கான சிந்தனைகளை செயல்படுத்துவதே தற்போது சாலச் சிறந்தது. ஒரு இனத்தின் மனதை வெல்வதற்காக இன்னொரு இனத்தை எரிச்சல் அடைய வைப்பதை விட, இன ரீதியான பிரச்சனைகள் நாளைய சந்திதியை நடு ஆற்றில் விடும் அரசியலாகி விடும், அல்லது நாட்டை குட்டிச் சுவராக்கிவிடும் எனும் கருத்துகளை மக்களுக்கு தெளிவு படுத்தினாலே, மக்கள் விழிப்புறுவர். ஐக்கியம் குறித்து சிந்திப்பர். அந்த சிந்தனையும்,விழிப்பும் உலக அரங்கில் நம் நாடு நடைபயில வேண்டும் எனும் ஆதங்கமும் நாம் இலங்கையர் என்ற கருத்தை மனதில் பதிய வைக்கும்.

    நமக்குள் சந்தேகம் என்ற ஒன்று இருந்தால் போதும், அதுவே அடுத்தவனை பேச விடாது தடுத்து விடும். சிறு பிள்ளைகளை பேய் இருக்கிறது என பயமுறுத்துவது போல, தமிழருக்கு இனி அடிமைத் தனம்தான் என்ற அச்சத்தை உருவாக்க முயல்வது நமது முன்னேற்றத்தைத்தான் தடுக்குமே தவிர, அடுத்தவர் முன்னேற்றத்தை தடுக்காது.

    மலையக தமிழரை பாருங்கள் தமிழராலும் ஒதுக்கப்பட்டு, சிங்களவர்களாலும் ஒதுக்கப்பட்டு கல்வி கற்க முடியாத சூழலில் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்ந்தவர்கள். இன்று ஆயுதம் தாங்காமல் தமிழனுக்காக குரல் கொடுக்கும் நிலைக்கு வந்து இருக்கிறான்? கல்விமான்களாகியும் உள்ளனர். அடுத்து வியாபாரத்தை மட்டுமே தொழிலாகக் கொண்ட இஸ்லாமியன் இரு மொழி வல்லுனர்களாக சகஜமாக நம்மை விட வெகு உயர வளர்ந்து இருக்கிறான்? இது அவர்களது நம்பிக்கை. அவர்களது போராட்டம் ஆயுதம் தாங்கியதல்ல.

    நமது அரசியல்வாதிகள் இந்தியாவின் தனிநாட்டு தமிழ்நாட்டு கொள்கையை பின்பற்றி தனிநாடு கேட்டு அரசியல் மேடைப் பேச்சை பேசினார்களே தவிர அவர்களிடம் நம் நாட்டு புவியியல் குறித்த எந்த அறிவும் இருந்ததில்லை. தனிநாடு கேட்ட தமிழ்நாடே இன்று டில்லியோடு அரசியல் செய்யும் போது, நம்மவர்கள் அதே நிலைக்கு வர முடியாது என்று நினைப்பதெல்லாம் தாழ்வு மனப்பான்மையே தவிர வேறு ஒன்றுமில்லை. உண்மையான அரசியல் ரீதியாக பேசக் கூடிய அறிவு ஜீவிகளை அழித்து விட்டு சுயநலவாதிகளை அரசியல்வாதிகளாக அங்கீகரித்தது யார் தப்பு? சற்று சிந்திப்போமா?

    புலத்தில் இருந்து களத்தை பார்த்ததற்கும், களத்தில் இருந்து புலத்தை பார்த்ததற்கும் இருந்த வித்தியாசத்தை இப்போது நாம் உணர்ந்துள்ளோம். அதே போல் நாளைய மாற்றம் குறித்தும் நம்மவர் மனங்களில் இருக்கும் சந்தேகங்கள் மாறும் சாத்தியங்கள் அங்கே தெரிகின்றன. 30 வருடங்கள் போராடி விட்டோம். அது நமக்கு காலம் கடந்ததாகப் புரியவில்லை. ஆனால் இந்த 180 நாட்கள்தான் நமக்கு சுமையாக இருக்கிறது? சரி, சற்றுப் பொறுத்தால் என்ன?

    இனத் துவேசம் பண்டாவில் அல்ல தமிழன் என்று மலையக இந்திய தமிழனது வாக்குரிமையை பறித்தானோ அன்றே இனத் துவேசம் தொடங்கி விட்டது. அது இந்தியத் தமிழன், இலங்கை தமிழன் என்று……..இது பண்டாவுக்கு முன்னர் நடந்தது? அதுவே பண்டாவை சிந்திக்க வைத்தது? தமிழனுக்கே இந்தக் கதியென்றால், சிங்களவனான நமக்கு என்ன கதி என அவர்கள் நினைத்தார்களாம்? விதை யார் போட்டது? தமிழன்தான். இலங்கை வாழ் தமிழர் குறித்துப் பேச திம்பு சென்றவர்கள் இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் என சொன்ன ஒரு இஸ்லாமியனையோ அல்லது ஒரு மலையக தமிழனையோ அழைத்துச் செல்லவில்லை? ஏன்? ஆனால் தமிழீத்துக்கான தேர்தலில் நீங்கள் தமிழ் பேசும் மக்கள் என்றுதானே வாக்கு கேட்டு வெற்றி பெற்று எதிர்க்கட்சியானீர்கள்? அவர்களோடு நாம் ஐக்கியம் என்பதை பேணினோமா? யார் விட்ட தவறு?

    நாம் சுயநலமாகவே இருந்து செயல்பட்டுள்ளோம். நாமும் இன ஐக்கியத்துக்காக ஒரு அடி கூட முன்னால் நகரவில்லையே? அடுத்தவனை பற்றியும் சிந்திக்கவே இல்லையே? நம்மோடு ஒரு வேற்று இனத்தவனையாவது வைத்துக் கொள்ள வேண்டும் என்ற மனசு கூட நமக்கு வரவில்லையே? நாம் முதலில் முன் மாதிரியாக இருந்து காட்டினால் என்ன? அவன்தான் முன் மாதிரியாக இருந்து காட்ட வேண்டுமா என்ன? நம்மை நாம் ஏன் கேள்வி கேட்கக் கூடாது? நாம் ஏன் திருந்தக் கூடாது?

    – அஜீவன்

    Reply
  • BC
    BC

    //அஜீவன்- கட்டுரை புலிகளின் பலவீனங்களை சொல்லி புதியதொரு போராட்டத்துக்கு மக்களை தயார் பண்ணுவதாக தெரிகிறது.//

    எனக்கும் அதே எண்ணம் தான் ஏற்பட்டது. இந்நிலையில் இன்னொரு புரட்சி என்பதெல்லாம் மரத்தால் விழுந்தவனை மாடு குத்த வைப்பதற்கே வழி செய்யும் என்று அஜீவன் சொன்னது உண்மையே.

    Reply
  • Kulan
    Kulan

    பி.சி : புரட்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. முக்கியமாக அரசியல்புரட்சி; பொருளாதாரப்புரட்சி; சமூகப்புரட்சி எனப் பலபுரட்சிகள் உள்ளன. அதற்காக ஆயுதம்தாங்கித்தான் போராடவேண்டிய அவசியம் கிடையாது. என் எண்ணப்படி இலங்கைப் பொருளாதாரம் சீரமைக்கப்படாத பட்சத்தில் சிங்களமக்களிடையே ஏற்படப்போகும் ஒரு தொழிலாளர் புரட்சியை யாராலும் தடுக்க முடியாது.

    அஜீவன்!
    ஐக்கிய இலங்கை எனும் பொழுது ஐக்கியத்துக்கான வழிமுறைகள் முன்னெடுப்புக்கள் செய்யப்படவேண்டும். அதுமட்டுமல்ல காலங்காலமாக வளர்க்கப்பட்ட துவேசம் களைவதற்கான வேலைத்திட்டங்கள் தீட்டப்படவேண்டும். போராட்டம் என்பதை தமிழர்கள் புரிந்தவிதம் பிழையாக இருக்கலாம். ஆயுதப்போராட்டம் மட்டுமல்ல போராட்டம். ஜேவிபின் போராட்டம் ஏன் தோல்வியுற்றது ஆனால் அதேபோன்ற சேயின் போராட்டம் ஏன் வெற்றிபெற்றது. போராட்டக் கட்டமைப்பே காரணம். தொழிலாளவர்க்கம் தயார்படுத்துப்பட்டதா? மக்கள் பங்குபற்றினார்களா? அது வெறும் இராணுவகூட்டு மாதிரியல்லவா நடக்கமுயன்றது. சரி இப்போராட்டம் 1972ல் தோல்வியடைந்தது. ஆனால் தமிழ்மக்கள் எழுற்சி 1977-1980 உருவாகிவிட்டதே. எத்தனை வருடகால இடைவெளி கூறுங்கள்.

    புலிகளின் மேல் வைத்த சரணாகதி பிரபாகரனின் அழிவுடன் நாம் மீண்டுகொண்டோம். ஆனால் சிங்கள பெளத்த ஏகாதிபத்திபத்தின் வலுவேறிய இக்கணத்தில் நாம் கொள்ளும் சரணாகதி சிங்கள இனமொன்று வாழும் வரை எமக்கு மீட்சியின்றி போய்விடும். எமது ஒவ்வொரு சுவடுகளையும் நாம் மிக அவதானமாகவே வைக்கவேண்டியுள்ளது. இன்றும் அரசு தன்பிழைகளை நியாப்படுத்துவதுடன் தீர்வை வைக்கத் தயங்குவது ஏன்? புலி புலி என்றார்கள், புலிகள் அழிந்துவிட்டார்கள் தீர்வு எங்கே? அகதிகளைத் திறந்து விடுங்கள். அரசு சாரா உதவிநிறுவனங்களை உள்ளே விடுங்கள். தான்பிறந்த மண்ணில் தன்வீட்டுக்குப்போக அனுமதி கொடுக்காது முகாமுக்குள் அடைத்து வைத்திருக்கும் அரசா உங்களது சுயநிர்ணய உரிமையையும் கெளரவமான வாழ்க்கையையும் தரப்போகிறது. என்கட்டுரை திசைமாறிவிடக் கூடாது என்பதற்காக இத்துடன் நிறுத்துகிறேன்.

    Reply
  • Kulan
    Kulan

    அஜீவன்! பூகோளரீதியாக ஈழம் பிரிவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. அப்படிப்பிரிவதானால் ஆனையிறவுடன் சரி. ஈழமில்லை என்றால் போராட்டம் இல்லையென்று ஆகாது. இனியொரு போராட்டம் இல்லாமல் இருக்கவேண்டுமானால் அரசு வைக்கும் தீர்வில் மட்டுமல்ல நடைமுறைப்படுத்துவதிலும் ஐக்கிய இலங்கைக்கான முன்னெடுப்பிலுமே தங்கியுள்ளது. மதம் எந்தநாட்டில் மதம்பிடித்து எழும்புகிறதோ அன்நாடு அழிவை நோக்கியே பயணிக்கும்.

    நீங்கள் மலையக மக்களைப்பற்றியும் முஸ்லீம் மக்களைப்பற்றியும் கூறினீர்கள். நீங்கள் அவர்களின் மேல்மட்டத்தைப் பார்க்கிறீர்களே தவிர அடிமட்ட மக்களின் வாழ்வியலை கொஞ்சம் தேடிப்பாருங்கள். போராடியிருக்க வேண்டியவர்களே அவர்கள் தான். தமிழர்களால் மட்டுமல்ல சிங்களவர்களாலும் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வாழ்ந்தார்கள் வாழ்கிறார்கள். மக்களின் கண் ஈழப்போராட்டம் நோக்கி திருப்பப்பட்டதால் அடிமட்ட சிங்கள: முஸ்லீம்: மலையகமக்களின் உரிமைகள் தேவைகள் மறைக்கப்பட்டன: ஈழப்பூதம் புலிப்பேய் என்று அடிமட்ட மக்கள் பேய்க்காட்டப்பட்டார்கள் மாறி மாறி வந்த பேரினவாத அரசுகள் புலியைக்காட்டியே அரசியல் பிழைப்பைச் செய்தன. இனி என்னத்தைச் சொல்லப்போகிறார்கள் என்று பார்ப்போம். திட்டவட்டமாகச் சொல்கிறேன் சீனாவில் இருக்கும் உய்குர் இனத்தவர்கள் போன்று தமிழர்கள் தம்பகுதியில் சிறுபான்மையாக்கப்பட்டு வாக்குரிமை இருந்தும் செல்வாமல் போகும் நிலை உருவாகும். எச்சரிக்கையுடன் இருப்பது என்றும் தவறில்லையே. மலையகமக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது; அவர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப கைச்சாத்திட்டது தமிழர்கள்தான். சிங்கள அரசியல்வாதிகளுக்குப் பங்கில்லை என்கிறீர்களா? நிதானமாக திருப்பிப்பாருங்கள். மலையகமக்களின் வாக்குரிமையைப் பறித்தது யார்? ஒரு சிறுபான்மையால் இன்னுமொரு சிறுபான்மையின் வாக்குரிமையை எப்படிப் பறிக்க முடியும்? நிதானமாக பாருங்கள் டிஎஸ் டட்லி இவர்கள் காலத்தை விட தமிழ் இன மொழி அழிப்பு யார்காலத்தில் உருவானது. மலையகமக்களின் வாக்குரிமை மறுப்பை பிரேரித்து அனுமதித்தவர்கள் யார்? இப்போ சொல்லுங்கள் சிங்கள பெளத்த ஏகாதிபத்தியத்துடன் புனையப்பட்ட மகாவம்சத்தையும் ஏற்றுக் கொண்டு சரணாகதியடைவோமா? எனது வேண்டுகோள் என்னவென்றால் ஒவ்வொரு சுவடுகளையும் நிதானமாக வையுங்கள் என்பது தான். என்கட்டுரை திசைமாறிப்போகிறது.

    இக்கட்டுரை எமது அரசியல் வரலாற்றிலும் புலிகளின் தோல்வியிலும் நாம் படித்தவை அனுபவித்தவை திருத்தப்பட்டிருக்க வேண்டியவை பற்றி ஒரு மீளாய்வே அன்றி முன்மொழிவல்ல. வந்தவழி அறியாதவன் தான் போறவழி எதென்று அறிவான்? நாம் விட்ட பிழைகளை திருத்தாது தொடர்ந்து போவோமானால் மீண்டும் மீண்டும் அதேபிழைகளை விட்டு சாண் ஏற முளம் சறுக்குவோம். இதுவே இவ்வளவு காலமும் நடந்தது.

    Reply
  • thiva
    thiva

    மதிப்புக்குரிய ஆசிரியர் குலன் அவர்களுக்கு நான் முன்வைத்த கோரிக்கையில் தங்களுக்கு உடன்பாடு உண்டாகுமானால். தாங்கள் விரும்பினால் என்னுடன் தேசம் ஊடாக தொடர்புகொள்ளவும்.
    நன்றி. திவா-

    Reply
  • மகுடி
    மகுடி

    //நாம் விட்ட பிழைகளை திருத்தாது தொடர்ந்து போவோமானால் மீண்டும் மீண்டும் அதேபிழைகளை விட்டு சாண் ஏற முளம் சறுக்குவோம். இதுவே இவ்வளவு காலமும் நடந்தது.- Kulan //

    குலன், இப்ப மட்டும் என்ன, அதுதானே நடக்குது. உலகம் ஒன்றாகுது, நாங்க வெளிநாடு வந்தும் தலித் நாடும், சுயநல தேசியமும், சிரிலங்காவுக்கு போய் இலக்ஸனில நிக்கிறதுக்கும் நினைக்கிறம். படிப்பறிவே இல்லாதவனுக்கு எல்லாம் தெரியும் என்று நம்பி 30 வருசமா உண்டியல்யா காசு போட்டவை? ஆகக் குறைச்சது புலத்தில பள்ளிகளுக்கு பொறுப்பாயிருக்கிறவன் வீடுவீடா போய் புலிக்கு காசு சேர்க்கிறான். காசு குடுக்காதவங்களை ஊரில பார்த்துக் கொள்ளுறன் எண்டு மரிட்டறான். இல்லையென்டா, பிள்ளைகளுக்கு பள்ளியில பிரச்சனையாவது குடுக்கிறான். ரவுடிகளால எல்லாம் குழந்தைகளுக்கு வழி காட்ட ஏலுமா? மாபியாக்கள் புலத்தில பள்ளி நடத்துகினம். தெரியாதோ? நாட்டில, வாத்திமார் இருந்தவைதானே? அவைக்கிட்ட படிச்சிருப்பியள்? அவை அடுத்தவனுக்கு தீங்கு செய்யாத எண்டவை. இங்க அடுத்தவையை விட்டு வைக்காத என்கிறவை. என்ன நடக்குது? புலத்தில உள்ள காட்டு மிராண்டிகளை திருத்த ஏதாவது செய்யுங்கோ? அது போதும். நாடு தானா திருந்தும்.

    கத்தியை தீட்டச் சொல்லுறவையின்ட, புத்தியை தீட்டச் சொல்லுங்கோ? அதை எழுதுங்கோ? நீங்க சாத்திரம் சொல்லுறவை போல கடந்த காலத்தை ஓரளவு சரியா கணிக்கிறியள். ஆனால் எதிர்காலத்தை பத்தி உங்கட எண்ணங்களை திணிக்கிறியள். இதையெல்லாம் புத்தகமாக அடிச்சு புண்ணாக்குகள் கையில குடுத்தாலும் படிக்காயினம். சொறி, அதுகளுக்கு எங்க படிக்க தெரியும்?

    Reply
  • Kulan
    Kulan

    நன்றி மகுடி! இன்றும் கூட காசு சேர்ப்பதில் கண்ணாக இருக்கிறார்களே தவிர வன்னியில் அடைபட்டுக்கிடக்கும் மக்களுக்காக புலத்தில் ஏன் போராட்டம் நடக்கவில்லை? பிரபாரகன் இறந்ததும் எம்மக்களின் உரிமைகள் கிடைத்ததா? இப்போது புரிகிறதா இதுவரை புலத்தில் நடத்திய போராட்டம் பிரபாகரன் எனும் தனிமனிதனுக்கே அன்றி தமிழ் மக்களுக்காக அல்ல என்று. பக்திவாதத்தில் வளர்ந்த சமூகம் இது. அதுமட்டுமல்ல 500வருடங்களுக்கு மேல் அன்னியன் காலடியில் கிடந்த இனம் உடனடியாக மாறும் என்பது சந்தேகத்துக்குரியதே. முயற்சிப்போம் எம்முயிருள்ளவரை. இதுபற்றி ஒரு கட்டுரை தேசத்துக்கு அனுப்பியுள்ளேன். அதாவது வன்னிமக்களுக்காக புலத்துக்கதவுகள் தட்டப்படுவதனூடாக வன்னியில் சிறைமுகாமாக இருக்கும் அகதிகள் முகாம் உடைக்கப்பட்பட்டு உதவிகள் உள்னுளைந்திருக்க வேண்டும். ஏன் ஒருபோராட்டம் கூட நடக்கவில்லை? போராட்டம் என்பது அவசியமாகிறது? போராடாத இனம் அதுமிருகங்கங்களானாலும் சரி அழிந்துவிடும்.

    Reply
  • Kulan
    Kulan

    திவா அவர்கட்கு! உங்கள் கோரிக்கையை முழுமையாக ஏற்பதுடன் தேசத்துடனும் தொடர்புகொண்டு உங்களின் நல்லெண்ண முயற்சிக்கு உதவுமாறும் கேட்டுள்ளேன். அவர்களும் மனப்பூர்வமாக உதவி செய்வதாக உறுதியழித்துள்ளார்கள். நேரடியாக தாங்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைச் செய்யவும். எனக்கும் ஒரு பிரதியனுப்புவீர்களாயின் மகிழ்வுறுவேன்: அன்புடன் குலன்:

    Reply
  • tamil boy
    tamil boy

    கடந்த 30 வரடங்களாக புலிளின் பாசிச கொலைகளையும் மாற்றுக் கருத்தளர்கள் மீது செய்த வன்முறைகளையும் மறந்து இவர்கள் இதிலிருந்து விடுபட இன்னும் 5 வருடங்கள் என்றாலும் என்பதை எல்லாம் மறந்து குலன் இந்த கட்டுரையை புனைந்துள்ளார் சிலவேளை குலன் என்பவர் அதிக காலமாக வெளிநாட்டில் இருந்தாரோ ஆனபடியால் இந்த வலியை உணரமுடியாமல் உள்ளார் போலும் எம்மில் பலர் இன்னும் புலிகளின் இந்த கொடூர பாசிசத்தின் வலியிலிருந்து மீளமுடியாமல் உள்ளதை மறந்து எழுதுவதை தவிர்க்கவும் அல்லது மனதில் கொண்டு எழுதவும்.

    Reply
  • Kulan
    Kulan

    தமிழ்போய்! நான் எங்கும் என்றும் புலிகளை நியாப்படுத்தவில்லை. ஆரம்பகாலத்தில் இருந்தே நான் புலிகளுக்கு மாற்றுக்கருத்தாளனாகவே இருந்துவந்துள்ளேன். புலிகளின் போராட்டம் முழுக்க குருட்டுத்தனமானதே. முடிவும் குடுட்டுத்துனமாக வந்து நந்திக்கடலில் விழுந்து முடிந்திருக்கிறது. ஆயுதப்போராட்டத்தால் மட்டும் மக்கள் விடுதலையை வென்றெடுக்கலாம் என்று எண்ணும் புலிகளுக்கு என்றும் முரணானவன். என் எக்கட்டுரைகளிலும் புலிச்சாயல் இருக்காது. ஆனால் இன்றும் நம்புகிறேன். எம்மக்கள் போராடாது எதுவும் சிங்கள அரசால் தட்டம் தாம்பாளத்தில் வைத்து எமது உரிமைகள் தரப்படாது. எனக்கு இழப்புகளின் வலி நன்கு தெரியும். நான் புலியை எதிர்த்த காரணத்தால் உயிருடன் உள்ள என் சகோதரங்களே என்னை வெறுத்து இன்றும் ஒதுக்கியுள்ளார்கள். இறந்துபோனால் 6 மாதமோ ஒருவருடமே பின் நாளாந்த வாழ்வுக்குத் திரும்பிவிடுவோம். 1985ல் வெளிநாடு வந்தாலும் என்மக்கள் பால் என்றும் அக்கறையுடனேயே இருந்திருக்கிறேன். தயவுசெய்து கட்டுரையை முழுமையா வாசியுங்கள். புள்ளிவடிவத்தில் கூடப்பல விடயங்களை சொல்லியிருக்கிறேன். புலிகளின் முகத்தைக் கிழித்தெறிந்திருக்கிறேன். முழுமையாகக் கட்டுரையை வாசித்தபின் பின்னோட்டம் எழுதுவதுதான் சரியானது. இக்கட்டுரைக்குப் பின்நோட்டம் எழுதிய பலர் முழுக்கக் கட்டுரையை வாசிக்க வில்லை என்பது புலனாகிறது.

    Reply
  • வள்ளுவன்
    வள்ளுவன்

    குலன் உங்களுடைய கருத்துக்களை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். மக்களுடைய உரிமைப்போராட்டத்தில் எங்கள் கரமும் இணைந்தே நிற்கும். உங்களுடன் தேசம்நெற்றூடாக தொடர்புகொள்ள விரும்பகின்றேன். அதற்குக் காரணம் குலன் என்ற பெயரும்தான் காரணம். சிவகுமாரன் அவர்களது போராட்ட காலங்களில் குலன் என்பவரும் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகித்தவர். அந்த குலத்திற்கும் எனக்கும் இடையில் நெருக்கமான உறவு இருந்ததது. அந்த குலனாக இருக்கலாமா என்ற எண்ணத்திலேயே உங்களுடன் தொடர்ப கொள்ள விரும்புகின்றேன். ஏனெனில் வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்டபோது நீங்களும் உடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

    Reply
  • Kulan
    Kulan

    வள்ளுவனுக்கு வணக்கம்!
    உங்களுடன் தொடர்புடைய குலன் என்பது இயற்பெயரா? புனைபெயரா? வட்டுக்கோட்டை மாநாட்டில் என்பணி அதிகமாயினும் வயதில் மிக மிக இளையவனாகவே இருந்தேன். என்னுடன் தொர்பு கொள்வதானால் தேசம்நெற்றினூடாகத் தொடர்வு கொள்ளலாம். தேசம் என்றும் தயாராக உள்ளது
    அன்புடன் குலன்

    Reply