வன்னியில் 80% பகுதிகளில் கண்ணிவெடிகள் இல்லை; மீள்குடியேற்றத்தை உடனடியாக மேற்கொள்ள முடியும்: த.தே.கூட்டமைப்பு

வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் தாமதமடைவது இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களை அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீள்க்குடியேற்றுவதை தாமதிக்கச் செய்யும் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மீள்குடியேற்றத்தை பிற்போடுவதற்கான சாட்டாக கண்ணிவெடி அகற்றும் விடயம் அமையுமென அண்மையில் இந்திய அரசாங்கத்துடனான தமது சந்திப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

80 வீதமான பகுதிகள் கண்ணிவெடிகளற்றவையாக உள்ளன. அதனால் வன்னி யுத்தவலயப் பகுதிகளில் அனேகமான இடம்பெயர்ந்த மக்களை அரசாங்கம் மீளக்குடியமர்த்த வேண்டும் என்று யாழ். மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.உ. சுரேஸ் பிரேமச்சந்திரன் த இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்கு கூறியுள்ளார்.

இதேவேளை வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இந்திய கண்ணிவெடி அகற்றும் குழுவை அனுப்பி வைக்குமாறு கொழும்பு விடுத்த கோரிக்கை தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன. இந்திய இராணுவத்திலிருந்து 500 பேர் கொண்ட கண்ணிவெடி அகற்றும் குழுவினரை இலங்கைக்கு இந்தியா அனுப்புமென கடந்த புதன்கிழமை கூட்டுப்படைத தலைமை அதிகாரி சரத் பொன்சேகா கூறியிருந்தார். இலங்கையில் ஏற்கனவே இந்திய கண்ணிவெடி அகற்றும் குழுவினர் உள்ளனர். சர்வார்த்தா கொரிகோன் ஆகிய இந்தக் குழுக்கள் ஓய்வுபெற்ற இராணுவத்தினரை உள்ளடக்கியதாகும். மன்னார் மாவட்டத்தமில் அவர்க்ள பணியாற்றுவதாக நம்பப்படுகிறது.

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • மகுடி
    மகுடி

    இதிலிருந்தே புலிகள் எவ்வளவு கண்ணி வெடிகளை புதைத்திருக்கின்றனர் என்பது முதல் புலிகளது செயல்பாடுகள் கூத்தமைப்புக்கு நல்லா தெரியும் என்று விழங்குது. இவர்களையும் கூட்டுக்குள் போட வேணும். அப்பதான் பிரச்சனை தீரும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    “…இதிலிருந்தே புலிகள் எவ்வளவு கண்ணி வெடிகளை புதைத்திருக்கின்றனர் என்பது முதல் புலிகளது செயல்பாடுகள் கூத்தமைப்புக்கு நல்லா தெரியும் என்று விழங்குது….. ‘/மகுடி

    பிரச்சினையில்லை. அவர்களைக் கேளுங்கள். கேட்டு எங்கே கண்ணி வெடி இருக்கிறது (20%) மிகுதி இடங்களில் மக்களைக் குடியேற விடுங்கள். ஏன் கதையை திசை திருப்புகிறீர்கள். அத்துடன் வன்னி ‘நலன்புரி முகாம்’ களில் இருக்கும் பல மக்கள் யாழ் வாசிகள். அவர்களை யாழுக்கு திரும்ப அனுமதிக்கலாம் தானே. அது சரி 1995 இல் மக்களில் அக்கறையோடு ”கண்ணி வெடி’ காரனமாக வேலியிடப்பட்ட ‘உயர் பாதுகாப்பு வலயம்’ இன்னும் கண்ணி வெடி அகற்ரப்படவில்லை. வன்னி என்ன வன்னி!

    ’…இவர்களையும் கூட்டுக்குள் போட வேணும். அப்பதான் பிரச்சனை தீரும்…’
    என்னப்பா பிரபாகரன் செத்தால் பிரச்சினை தீரும் எண்டியள் . இப்ப கூடு..குருவி என்க்கிறியள்? உங்களிட்ட திட்டம் இருந்தால் தானே. சும்மா கதைதான்………..

    Reply
  • msri
    msri

    கிலாரி கிளின்டனுக்கு தெரியவேணும்!
    வன்னியில் கண்ணிவெடி மீள்குடியேற்றம் சமப்பந்தமான விபரங்கள் இனி கிலாரி கிளின்டனுக்கல்லோ தெரியப்படுத்த வேணடும்! அப்பத்தான் மகிந்த மன்னன் கேட்ட கடன் கொடுபடும்!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இருபது வீதம் கண்ணிவெடி புதைப்புக்கும் பிரேமச்சந்திரனின் குருட்டுதனமான அரசியலும் ஒரு காரணம். கண்ணுக்கு தெரியத்தக்கதாகவா? புதைத்து வைத்திருக்கிறார்கள். 100 வீதத்தில் 20 வீதமும் அடக்கம் என்பது இந்த பாராளுமன்ற உறுப்பினர்ருக்கு எப்படி? தெரியாமல் போனது. குடிமகன் அதில் சிக்குப்பட்டால் அரசைஎதிர்கிற அரசியலை தெடர்ந்து வளர்கலாம் என்ற நப்பாசையா?

    Reply
  • மகுடி
    மகுடி

    சாந்தன் 20 வீதம் கண்ணிவெடிகள் முள்ளிவாய்க்காலில் மட்டும் இருப்பதாக நினைத்துக் கொண்டீர்கள் போல? கண்ணிவெடி மட்டுமா நீர்மூழ்கி கப்பல்களுமில்ல வெளிய வருது? இன்னம் என்னென்ன வருமோ? ஆயுதங்களுக்குள்ள ஆட்களை விட்டா உருப்பட்ட மாதிரிதான்?

    அது சரி, புலிகயோட இருந்த சனம் தினமும் 100 – 200 என்று செத்த போது இல்லாத கரிசனை, ஆட்கள் சாகாத இப்போது ஏன் உங்களுக்கு வருகுது?

    Reply
  • mike
    mike

    வன்னியில் மக்களை குடியேற்றவேண்டுமென்று எதற்காக கூத்தமைப்பு அவதிப்படுகின்றது. அகதிகளாக முகாம்களில் இருக்கும் மக்களோடு இன்னும் தப்பிவந்த புலிகளும் மறைந்திருக்கிறார்கள் என்பது தினமும் நடக்கும் கைதுகளில் தெளிவாகின்றது. அதே சமயத்தில் வன்னியில் பெரும்தொகையில் ஆயுதங்களும் கைப்பற்றப்படுகின்றன. இவற்றை ஆராயுமிடத்து மக்களைக் குடியேற்ற இன்னும் தக்கசமயம் வரவில்லையெனவே தெரிகிறது. மக்கள் நடுவேயுள்ள புலிகள் களையப்பட்டு மறுவாழ்வளிக்கப்பட வேண்டும், அதைவிட வன்னிப்பரப்பிலுள்ள ஆயுதங்களும் கண்ணிவெடிகளும் அகற்றப்பட வேண்டும். அதன் பின்புதான் மக்கள் அப்பகுதிகளில் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழமுடியும். இதை விளங்கிக்கொள்ளாத கூத்தாடிகளுக்கு அரசியல் எதற்கு? மீண்டும் பதவிக்கு வரலாம் என்ற நப்பாசையா. மக்கள் என்ன இன்னும் மக்குகளா? காலம் பதில் சொல்லும் வெகு விரைவில்.

    Reply