நாட்டின் பல பாகங்களிலும் இன்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்ததுடன் பல இடங்களில் பலத்த காற்றும் வீசியுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும் மத்திய மலை நாட்டின் சில பிரதேசங்களிலும் இன்று மழை பெய்துள்ளதுடன் காலி, மாத்தறை, அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழைக்காலத்தில் காற்றும் வீசத் தொடங்கியுள்ளதால் நாட்டின் காலநிலையில் கடந்த புதன்கிழமை இரவு முதல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வளி மண்டலவியல் திணைக்களம், இந்நிலைமை தொடருமாக இருந்தால் நாட்டின் காரையோரப்பகுதிளிலும் மத்திய மலை நாட்டின் சில இடங்களிலும் கடும் காற்று வீசலாம் என எச்சரித்துள்ளது.