கண்டி உதவி இந்திய தூதுவராலயத்தில் மத்திய மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு எதிர்வரும் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறும்.
சிறுவர்களுக்கு பயன்தரும் நூல்கள் அடங்கிய தொகுதி இந்நிகழ்வில் வழங்கப்படவுள்ளது. காலை 10.30 மணிக்கு இடம்பெறும் இந்நிகழ்வில் நூல்களைப் பெறும் பாடசாலைகளுக்கு இவ்விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் அல்லது பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஆசிரியர் வருகை தந்து நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.