எகிப்து செல்வதற்காக தயாராகியிருந்த புலி பயங்கரவாதிகள் இருவரும் அவர்களுடன் இருந்த இன்னுமொருவரும் விசேட பொலிஸ் குழுவினரால் நேற்று (16) கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் எகிப்து நோக்கிப் பயணிப்பதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றுடனேயே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களுள் இருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்தும் மற்றையவர் கொழும்பில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். அணிசேரா நாடுகளின் 15வது உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்து சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏதேனும் வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்விருவரும் எகிப்து செல்ல ஏற்பாடு செய்திருக்க வேண்டுமெனவும் பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
கைது செய்யப்பட்டிருக்கும் மூவரும் வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதியில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களென்றும் இவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் பலாலி ஆகிய இடங்களை பிறப்பிடமாகக் கொண்டவர்களென்றும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்கயின் பணிப்புரையின் பேரில் மேல் மாகாண பாதுகாப்பு நடவடிக்கைப் பிரிவு இவர்களை கைது செய்துள்ளது.
Kusumbo
அப்ப புலிகள் இன்னும் முழுமையாக அழியவில்லை என்று சொல்கிறீர்கள். சும்மா மார்புதட்டுகிறீர்களா?
சாந்தன்
இப்பெல்லாம் வருமானம் படுத்திட்டுது. ஆளுக்கு $1500.00 குடுத்தால் விட்டு விடுவார்கள். அண்மையில் எனது நண்பனின் தம்பிக்கும் அவரது இரண்டு நண்பர்களுக்கும் கட்டுநாயக்காவில் இதேமாதிரி நடந்தது.
Kirupa
“மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏதேனும் வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே”
பூச்சுத்தின் உச்சம்
msri
கட்டுநாயக்காவில்> கொடுக்க வேண்டியதை கொடுத்திருந்தால்! உந்த புலி பூனைக் கதைகள்> மகிந்தாவிற்கு வழியில்எதாவது….உந்தக் கதைக்கே இடமிருந்திருக்காது!
மாயா
சுவிஸிலிருந்து எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் 3 நாட்களுக்கு முன் சென்றது. அவர்களுக்கு ஒரு பிரச்சனையுமில்லையே? அவர்களும் புலி ஆதரவாளர்கள்தான்.