சுமார் 65 ஆண்டுகள் கர்நாடக இசையில் கொடிகட்டிப் பறந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் தமது 90 ஆவது வயதில் இன்று சென்னையில் காலமானார் இவர் சிறிது காலம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். காஞ்சிபுரத்தில் பிறந்த இவர் அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் உட்பட உலக நாடுகள் பலவற்றில் கச்சேரிகள் நடத்தியுள்ளார். பல திரைப்படங்களில் பின்னணியும் பாடியுள்ளார். கமலஹாஸனின் ‘ஹே ராம்’ படத்தில் வைஷ்ணவ ஜனதோ பாடலை பாடியவர் இவரே.
இவரது சம கால கலைஞர்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் எம்.எல். வசந்தகுமாரி ஆகியோருக்கு மிகச்சிறந்த போட்டியாளராக இவர் திகழ்ந்தார். இந்திய அரசின் பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளையும், சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத சாகர ரத்னா விருது மற்றும் சங்கீத கலாநிதி விருதினையும் இவர் பெற்றார்; என்பது குறிப்பிடத்தக்கது
பார்த்திபன்
இந்திய தேசியகீதத்தை சமீபத்தில் பல மொழிப் பாடகர்களை வைத்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த போது டி.கே.பட்டம்மாள் அவர்களையும் பாட வைத்திருநதார். இவரை நினைக்கையில் கணீரென்ற அவரது குரல் தான் ஞாபகம் வரும். அன்னாருக்கு எனது இதயபூர்வமான அஞ்சலிகள். அன்னாரின் பேத்தி தான் தற்பொழுது பிரபலமாகவுள்ள கர்நாடக இசைக் கலைஞர் நித்தியஸ்ரீ அவர்கள்.
Kulan
இவர் காலத்தாலும் அழியாக காவியங்கள். இயற்கையின் கொடையான குரலை சரியாகப்பயன்படுத்திய மேதை
நண்பன்
டி.கே.பட்டம்மாள் அவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.