பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் மறைவைத் தாங்க முடியாமல், இதுவரை உலகம் முழுவதும் 12 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனராம். மேலும், ஏராளமான ரசிகர்கள் தற்கொலை எண்ணத்திலிருந்து வெளிவர உதவுமாறு அதற்கான ஹாட்லைன் வசதியைத் தொடர்பு கொண்டபடி உள்ளனராம். இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உதவி கோரி தொடர்பு கொண்டுள்ளதாக மன நல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
லண்டனைச் சேர்ந்த ஜாக்சனின் ரசிகரான கேரி டெய்லர் என்பவர் ஜாக்சனுக்கான இன்டர்நெட் ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார். அவர் கூறுகையில், இதுவரை 12 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது மிகவும் கவலைகரமானது. மைக்கேல் ஜாக்சன் இதுபோன்ற மரணத்தை விரும்ப மாட்டார். அதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே ஜாக்சனின் விருப்பம் என்றார்.
ஜாக்சனின் மரணத்தால் அவரது பல ரசிகர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனராம். இதுபோன்ற பிரபலங்கள் மரணமடையும்போது அது மனதளவில் பலரையும் வெகுவாக பாதித்து விடுகிறது என்கிறார் லைப்லைன் என்கிற மன நல ஆலோசனை அமைப்பின் தலைமை செயலதிகாரி டான் ஓ நீல்.
இதற்கிடையே, ஜாக்சனின் குடும்ப நண்பரான ஜெசி ஜாக்சன் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், யாரும் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளக் கூடாது. இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது.
ஜாக்சனின் மரணம் பெரும் வலிதான். ஆனால் ஜாக்சனின் வாழ்க்கையை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். அதுதான் ஜாக்சனுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்றார்.
மாயா
கொலையும் , தற்கொலையும் தேவையற்றவை. ஆனால்……
மைக்கலுக்காக 12 பேர் தற்கொலை. தேசியத் தலைவருக்காக எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்? ஒரு மெழுகுவர்த்தி ஏத்த எத்தனை பேர்? இவை சொல்வதென்ன? தலைவர் சொன்னதால் தற்கொலை செய்தவர்கள் அதிகம். (இல்லை நடந்திருப்பது அதுதான்) தலைவருக்காக தற்கொலை செய்து கொண்டவர்கள் பூஜ்ஜியம்?
kumarathasan
thalaivar vala ninaitha thelepani sagach sonnavaram.
raj
parba still alive. why you worry . One day he will come again and leade us including you.
kumarathasan
we heard enough of this raj, he could have save every one including himself, if he listen to mathivathani, this man killed his own childrens. please dont taik about him. that man responsible many of us dead. please dont taik about him, he is gone.