ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இம் மாதம் 29, 30 ம் திகதிகளில் சந்திக்கவுள்ளனர். தஜிகிஸ்தான் தலைநகர் டுஷான்பேயில் இச் சந்திப்பு இடம் பெறவுள்ளது.
எரிவாயு போக்குவரத்து, தொடர்பாடல், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்குடன் இத் தலைவர்கள் சந்திக்கவுள்ளதாக தஜிகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்ய ஜனாதிபதி மெத்விடில், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலிசர்தாரி, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் அல் கார்ஸாயி ஆகியோர் இரண்டு மாதங்க ளுக்கு முன்னர் ரஷ்யாவில் சந்தித்தனர். இதன் போது பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம் பற்றிப் பேசினர்.
இப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஏற்பட்டுள்ள முன் னேற்றங்கள் அதிலுள்ள தடைகள் பற்றியும் தஜிகிஸ் தான் மாநாட்டில் ஆரா யப்படவுள்ளது. சோவியத் ரஷ்யா உடைந்த பின்னர் தஜிகிஸ்தானும், ரஷ்யாவும் இறுக்கமான உறவுகளில் உள்ளன.
தஜிகிஸ்தானிலுள்ள மின்சார உற்பத்தித் திட்டங்கள் பலவற்றை ரஷ்யாவே நடாத்துகின்றது. இதனூடாக மத்தியாசியாவுக்கான மின்சாரத்தை விஸ்தரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப் படவுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஜனாதிப திகளும் இந்த மின்சாரத் திட்டங்களைப்பார்வையிடுவர். பல மில்லியன் ரூபா செலவில் இந்த மின்சாரம் ஏனைய நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.