முந்தைய சேத விபரங்களை மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்கிறது ஐ.நா.

110709gordon.jpgஇலங் கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் வன்னியில் கடமையாற்றிய மருத்துவர்களின் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கைகளுக்கு ஏற்றவாறு பொதுமக்கள் சேதம் தொடர்பில் தாம் வெளியிட்டிருந்த விபரங்களில் மாற்றம் செய்யப்போவதில்லை என இலங்கையில் உள்ள ஐ.நா. பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

வன்னிக் களமுனையில் யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயங்கள் குறித்த தமது தகவல்களில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாதென என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் கோர்டன் வைஸ் வலியுறுத்தியுள்ளார்..

புலிகளின் அழுத்தம் காரணமாகவே தாம் சர்வதேச ஊடகங்களுக்கு மிகைப்படுத்திய தகவல்களை வழங்கியதாக வன்னி மருத்துவர்கள் அண்மையில் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டிருந்தனர்.

தவிர, லண்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் பத்திரிகையில், போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான வவுனியா நிவாரண முகாம்களில் ஒரு வாரத்துக்கு 1400 பேர்கள் இறக்கிறார்கள் என்ற மதிப்பீட்டுடன் தாங்கள் உடன்படவில்லை என்றும் கோர்டன் வைஸ் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply to rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

18 Comments

  • sanath ekanayake
    sanath ekanayake

    Earlier our crime was ignorance of human rights and gross negligence on human life. Now we are commiting an additional crime for threatning witness and making a mocker at civilisation and legal system.

    Reply
  • rony
    rony

    ஐ.நா.என்ற தூய்மையான ஒரு அமைப்பு என்றோ அஸ்த்தமனமாகிவிட்டது. பூட்டோஸ்காலி என்பவரின் தலைமைக்குப்பின்னர் ஐ.நா.தனது தகுதியை இழந்து அமெரிக்காவின் செருப்பாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் பணம். அமெரிக்காதான் உலகபொலிஸாக வெண்டுமென்றால் ஐ.நா தனது கைக்குள் இருக்கவேண்டும். அதை பணத்தால் சாதித்துவிட்டது. தற்பொழுது இலங்கை விடயத்தில் அமெரிக்கா எதிராக செயல்படுவதால் அது சொல்வதைத்தானே ஐ.நாவும் சொல்லும். எப்படியோ உண்மைகள் வெளிவந்த போதிலும், ஐ.நா மறுக்கப்போவதில்லை. மறுத்து மறு அறிக்கை விட்டால் மறுபடியும் பணம் கிடைக்காதல்லவா. இதிலிருந்து தெரிகின்றது இது ஐ.நா.வல்ல–“பொய்.நா.”– வெகுவிரைவில் ஐ.நா இரண்டாக உடைந்து பிளவு படுவதை கடவுளாலும் தடுக்க முடியாது. இது சதாமின் சாபம்.

    Reply
  • msri
    msri

    டாக்டர்களை பலவந்தப்படுத்தி சொல்ல வைத்த>அரசின் “பயமுறத்தல் கலை” உலகறிந்த ஒன்றே!ஒரு பொதுமகனுக்கம் காயம் எற்படாத வகையிலேயே> புலிகளுக்கு எதிராக யுத்தம் நடாத்திய “மக்கள் அரசல்லவோ”?

    Reply
  • Saambanaar Sugumugam
    Saambanaar Sugumugam

    There are conflicting claims by the GOSL on one hand and UNHCR and INGOS on the other. We hear whispers from the west that ‘we don’t want to be part of unacceptable practices by the GOSL’. The outcome of this tension is that adequate help is not reaching the people. They are suffeering in the camps.

    Experince tells us to doubt both: GOSL and the west (Including the INGOS). In the case of IDPs GOSL may be lying and the west may not be saying somthing they know! It may be that the GOSL intends to trap these people in the camps for may years until it gets its plan of ethnic cleansing of these areas underway.

    Otherwise, why is this secret? It is true that land mines have to be cleared, people have to be screened for LTTE connections and administrative infrastrutre has to be put in place. If these are genuine tasks before releasing the people from the camps why the need to be secret and deny access to free media, INGOS and Tamil politicians?

    Thesam net should invite GOSL to a meeting with concerned Tamils to tell the truth as it is and dispell suspicions.

    Reply
  • appu
    appu

    msri, டாக்டர்களை பலவந்தப்படுத்தி சொல்லவைத்த அரசின் பயமுறுத்தல் கலை உலகறிந்த உண்மையென்ற தங்களது கருத்து உண்மையெனில், புலிகளின் இரும்புப்பிடியிலும் துப்பாக்கி முனையிலும் கடமையாற்றிய டாக்டர்களை புலிகள் பலவந்தப்படுத்தி, அரசை உலக அரங்கில் அசிங்கப்படுத்தும் நோக்குடனேயே இழப்புகளை அதிகப்படுத்தியும், உண்மையற்ற செய்திகளையும் புலிகளே சொல்ல வைத்தார்கள் என்று சாட்சிகளோடு வெளியிடுவது மட்டும் “பயமுறுத்தல் கலை” இல்லை என்று உறுதிப்படுத்த முனைகின்றீர்களா? எத்தனையோ பொதுமக்கள் காயப்
    பட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆனால் இராணுவத்தினரிடம் புலிகள் சரண் அடையும்போது ஒரு காயப்பட்ட புலிகூட இல்லையே. அப்படியென்றால் இறுதிவரை காயப்பட்டிருந்த புலிகளனைவருக்கும் என்ன நடந்தது. அவர்களையும் இராணுவம் கொன்றதாக கைதாகிய புலிகள் இதுவரை கூறவில்லையே. அப்படியென்றால் ……
    யாருக்கு எதிராக புலிகள் யுத்தம் நடத்தினார்கள்?…புரியவில்லையே சிறி.

    Reply
  • Nitharsan
    Nitharsan

    புலிகள் போனத்துக்குப் பிறகு இனி என்னசொன்னாலும் நாங்கள் கேட்கத்தானே வேணும் தேசத்தில் வரும் சில பின்னோட்டங்களைப்போல். ஐ.நா என்பது ஐயோகிய நாடுகளா? ஐயமில்லா நாடுகளா? ஐயோகிய நாக்குகளா?

    Reply
  • msri
    msri

    அப்பு!
    வன்னியில் சாட்சியமில்லா மனிதப் படுகொலைகளுக்கு> மனிதப் பேரவலத்திற்கு> பிரபாகரப் புலியும் மகிந்தப் புலியுமே பிரதான காரண கர்த்தாக்கள்! உங்கள் மகிந்தப் புலி சொல்கிறார் “ஒரு பொதுமகனுக்கும் காயம் ஏற்படாத வகையில் புலிகளுக்கு எதிராக யுத்தம் நடத்தினேன் என்று! இதைப்பற்றி அப்புவின் அபிப்பிராயம் என்னவோ? செப்புங்கள் பார்ப்போம்!

    Reply
  • SMITH
    SMITH

    Guys mind your words you or your children will still have to come to UK or America for higher studies. If you do not want us send your kids to China, Pakistan or India if you think these countries are your friends and they give good advice. Soon Sri Lankan leaders will realise their grave mistakes.

    Reply
  • Saambanaar Sugumugam
    Saambanaar Sugumugam

    Proving if GOSL or LTTE told lies and misrepresented facts is not the need of the hour. People are trapped in the camps against their will. GOSL does not care as to what anyone else think. It is not easy for anyone to engage with GOSL at present. There is no water or clean water, sanitation and drainage is bad, children accidently fall through in the toilet pits, in some camps women are taken away in the nights and returned in the mornings, families are split in different camps, there is no one to talk to people about the pain the are in, those with connections with political groups are buying their freedom while the others remain behind, de-mining work does not appear to be happening, forest clearance work seem to be happening and it is not clear what for.

    There is disregard to people’s plight on part of the SL government. It is clear that the GOSL’s motive is political and to break the will of the people in the camps and those outside and concerned.

    The other day I head from someone who visited the camps that nothing can be done by he diaspora. I do not believe this.

    Intelligent readers of Thesamanet have to get creative in tacking this complex problem.

    Reply
  • rohan
    rohan

    //எத்தனையோ பொதுமக்கள் காயப்பட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. //

    முகாம்களில் இருக்கும் மக்க்ளிடம் பேசிப் பாருங்கள். வருகின்ற பாதைகளில் காயப் பட்டு காப்பாற்றுங்கள் பரிதாபமாகக் கெஞ்சிய எத்த்னை பேரைக் கனத்த மனத்துடன் தாண்டி அவர்கள் உயிர்களை கையில் பிடித்தபடி வந்தார்கள் என்று கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தபடி சொல்வார்கள்!

    அந்த வகையில் தெருவில் காயப் பட்டுக் கிடந்த எந்த மக்களும் பேரழிவின் இறுதிநாட்களில் மீட்கப்பட்டதாகச் செய்திகள் இல்லை. எத்த்னை பேர் காய்பபட்டனர் என்பது உலகு அறிந்த உண்மை என்பது பொய்!!!

    //ஆனால் இராணுவத்தினரிடம் புலிகள் சரண் அடையும்போது ஒரு காயப்பட்ட புலிகூட இல்லையே. அப்படியென்றால் இறுதிவரை காயப்பட்டிருந்த புலிகளனைவருக்கும் என்ன நடந்தது. அவர்களையும் இராணுவம் கொன்றதாக கைதாகிய புலிகள் இதுவரை கூறவில்லையே. அப்படியென்றால் ……//

    கைதாகிய எத்த்னை புலிகள் பேசிய விடயஙகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன?
    காயப்பட்ட வய்து தாண்டிய மக்களே மீளவில்லை என்றால், இளவல்கள் எப்படி வந்து சேர்ந்திருப்பர்? அரசும் இராணுவமும் பொய் சொல்லா என்று சாதிப்பவர்களுக்கு என்ன சொல்லி விளக்க முடியும்?

    //யாருக்கு எதிராக புலிகள் யுத்தம் நடத்தினார்கள்?…புரியவில்லையே சிறி.//
    இக் கேள்வியின் பொருள் தான் என்ன?

    மகிந்த அரசும் அவர் இராணுவமும் செய்த சேவைக்கும் காட்டிய அன்புக்கும் தான் மக்க்ள் மகிந்தவின் மகனுக்குத் தாமரை மலர்களை வீசி நன்றி செலுத்தியிருக்கிறார்கள்.

    இத்தனை கெடுபிடிகளின் மத்தியிலும் மக்கள் தம் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப் பட்டிருக்க வேண்டும்!

    முகாமுக்குள் பல இளைஞர்களுக்குக் கைகள் முறிக்கப்படும் – கால்கள் முடமாக்கப்படும் – ஏன் உயிர்களே பிடுங்கப்படும். நாளைய செய்திகளில் புலிகளின் கடுமையான ஆதரவாளர்கள் தான் சனாதிபதியின் மகனுக்கு சகதி வீசினர் இவற்றையெல்லாம் செய்தனர் என்று செய்தி வரும். அச் செய்திகளைப் பார்த்து புலி வசையாளர்கள் மீண்டும் செத்த புலி அடிப்பர்.

    Reply
  • msri
    msri

    றோகன்!
    நீங்களும்> உங்களைப் போன்ற சில மகிந்த ரசிகர்களும்> மகிந்த சோமபானம் அருந்திவிட்ட நிலையில் > ஏதோ ஏதோ சம்பந்த சம்பந்தமில்லால் எழுதுறீர்கள்! நான் எழுதியதை வாசித்து விட்டு அதற்கு மட்டும் பதில் தாருங்கள்!

    Reply
  • Saambanaar Sugumugam
    Saambanaar Sugumugam

    Rohan should make himself clear. Cannot understand the thread of his thaught.

    Reply
  • rohan
    rohan

    மகிந்தவின் மகனுக்கு முகாமில் நடைபெற்ற சேறு வீசலைத் தான் பின்வருமாறு நான் விபரித்திருந்தேன்.

    //யாருக்கு எதிராக புலிகள் யுத்தம் நடத்தினார்கள்?…புரியவில்லையே சிறி.//
    இக் கேள்வியின் பொருள் தான் என்ன?

    மகிந்த அரசும் அவர் இராணுவமும் செய்த சேவைக்கும் காட்டிய அன்புக்கும் தான் மக்க்ள் மகிந்தவின் மகனுக்குத் தாமரை மலர்களை வீசி நன்றி செலுத்தியிருக்கிறார்கள்.

    இத்தனை கெடுபிடிகளின் மத்தியிலும் மக்கள் தம் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப் பட்டிருக்க வேண்டும்!

    முகாமுக்குள் பல இளைஞர்களுக்குக் கைகள் முறிக்கப்படும் – கால்கள் முடமாக்கப்படும் – ஏன் உயிர்களே பிடுங்கப்படும். நாளைய செய்திகளில் புலிகளின் கடுமையான ஆதரவாளர்கள் தான் சனாதிபதியின் மகனுக்கு சகதி வீசினர் இவற்றையெல்லாம் செய்தனர் என்று செய்தி வரும். அச் செய்திகளைப் பார்த்து புலி வசையாளர்கள் மீண்டும் செத்த புலி அடிப்பர்.

    அப்புவின் கருத்துக்குத் தான் நான் பதில் தந்திருந்தேன், msri

    Reply
  • jeveithan
    jeveithan

    ராஜபக்சவின் மகன் நாமல் படம் ஒன்றை வெட்டி, இனம் தெரியாத ஒரு படத்தின் மேல் செருகி ஒட்டியுள்ளனர். பின்னணிப் படத்தை மறைக்கவும், தமது மோசடித்தனமான ஒட்டுவேலை வெளித் தெரியாத வண்ணம் மூடிமறைக்கவும், நாமல் அல்லாத பின்னணிப் படத்தினை மங்கலாக்கியுள்ளனர். படம் பொய்யானது போலியானது. நாமல் தவிர்ந்த மற்றவை அனைத்தும் மங்கலானவை. உண்மையான படத்தில், அனைத்தும் ஒரு தரத்தில் இருக்கும்.

    உண்மையான மக்களின் வாழ்வை பொய்கள் மேல் கட்டியெழுப்பும் நிலைக்குள், புலத்து புலிகளின் அரசியல் வங்குரோத்து கேவலமானதாக உள்ளது. உண்மையில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தாலும் கூட, இது போன்ற போலியான நடத்தைகளால், அந்த மக்களின் போராட்டங்கள் தான் கொச்சைப்படுத்தப்படுகின்றது.

    புலத்து மக்களை இது போன்ற செயல்கள் மூலம் குசிப்படுத்தி தம் பின்னால் தக்கவைக்க முனைகின்றனர். இதன் மூலம் புலத்து சொத்துப் போராட்டத்தை, அகதி மக்கள் பெயரிலும் அரங்கேற்றுகின்றனர். இவை எவையும் மக்கள் நலன் சார்ந்தல்ல. மாறாக அவர்களுக்கு எதிரானது. தம் குறுகிய சொந்த நலனுடன், வக்கிரமாக இட்டுக்கட்டும் பிரச்சாரப் போரையே நடத்த முனைகின்றனர்.

    புலத்து புலிப்பினாமி இணையமான குளோபல் தமிழ் செய்தி இணையம் முதல் புலி சார்பு இணையங்கள் வரை, எந்த சுய பகுத்தறிவுமின்றி மக்களை ஏமாற்ற இந்தப் பொய் பித்தலாட்டத்தில் ஈடுபடுகின்றனர்

    Reply
  • நண்பன்
    நண்பன்

    நாமல் சேறு அடித்தும் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்றால் நாமல் புத்தர் அல்லவா?
    http://www.tamilcircle.net/images/stories/Namal_Rajapaksa/namal_rajapaksha.jpg

    http://www.tamilcircle.net/images/stories/Namal_Rajapaksa/namal_org.jpg
    வருடம்: 2007.01.22 எடுக்கப்பட்ட படம்.

    புலி வால்களது குரங்கு சேட்டைகளுக்கு அளவே இல்லை. அவர்களைப் போல 5 அறிவு என்று உலகத்தை நினைப்பது சிரிக்க வைக்கிறது.

    Reply
  • msri
    msri

    கூட்டிக் கழித்துப் பார்த்தால்> பிரபாகர+மகிந்தப் புலிகள் தமிழ் மக்களுக்கு ஏமாற்று வித்தைகளே காட்டுகின்றார்கள்> இவர்களின் “புலன் பெயர்வுகள்”> எவ்வித ஆய்வமினறி> வில்லுப்பாட்டுப் பாணியில் ஆமாம் போடுறார்கள்!

    Reply
  • BC
    BC

    புலி வால்களின் ஆசைகைள் நிறைவேறுவதேயில்லை.இப்படி சேறு வீசிய செய்திகளை தாங்களே தயாரித்து தாங்களே படித்து மகிழ வேண்டியது தான் .

    Reply
  • மாயா
    மாயா

    நெட் வழி செய்யும் திருகு தாளங்களில் திறமையாக இருக்கும் புலி வால்கள். லொஜிக்கில் அதிகமாக கோட்டை விடுகிறார்கள். பாவம்.

    தமிழக அதிகம் படித்த மொக்குகள் அதைவிட பாவம். எல்லாத்தையும் கள்ளச் சாமியார் காலில் விழுந்து கும்பிடுவது போல நம்பித் தொலைப்பதும் இல்லாமல், நமக்கும் சேர்த்து கதை விடுறதுதான் உடம்பை புல்லரிக் வைப்பதாக இருக்கிறது.

    Reply