சீனாவில் உள்ள யுன்னன் பிராந்தியம், தென்மேற்கு சீனா ஆகிய இடங்களில் நேற்று இரவு ஆறு தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6 ரிச்டர் அளவில் ஏற்பட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனரென சீனா அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகியதுடன் 75 ஆயிரம் வீடுகள் சேதமடைந்ததாக ஷிங்குவா செய்திச் சேவை தெரிவித்தது.
நிலநடுக்கத்தின் பின்னர் 9 தடவைகள் சிறு அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இது மூன்று தொடக்கம் 4.1 ரிச்டர் அளவீடாக இருந்த தென அமெரிக்க பூகற்பவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இடம்பெயர்ந்தோரை தங்கவைக்கவென 5000 கூடாரங்கள் அவசியமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4000 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் சுமார் 1000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட யுன்னன் பிரதேசம் மலைப்பாங்கான தென்பதால் சுமார் 4 இலட்சம் பேரை அங்கிருந்து அகற்றி வேறு இடங்களில் தங்கவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு சிக்பொன் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 90 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். மேலும் 3 இலட்சத்து 75 ஆயிரம் பேர் காயமடைந்திருந்தனர்.