இலங்கைக்கு வருகை தந்துள்ள பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி டிபு மொனி இன்று பிற்பகல் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் எமது இணையத்துக்குக் கருத்துத் தெரிவிக்கையில், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்குமிடையிலான இச்சந்திப்பு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
கொழும்பில் நடைபெறும் சார்க்நாடுகளின் சிறுவர் தொடர்பான மாநாட்டில் பங்குபற்றுவதற்காகவே பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் எனக் கூறினார்.