நோர்வேயில் கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட நோர்வேத் தமிழர்களுக்கு ஒஸ்லோ நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
யூலை 9ல் வழங்கப்பட்ட இத்தீர்ப்பில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட ஐவருக்கு 3 வருடங்கள் முதல் 14 வருடங்கள் வரை ஒவ்வொருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. பாரிய உடற்காயங்களை விளைவித்த மேலும் ஐவரும் குற்றவாளிகளாக இனம்காணப்பட்டு உள்ளனர். இந்த வன்முறைக் குழுக்கள் தமிழ் சமூகத்தினுள் பயப் பீதியை ஏற்படுத்தி உள்ளதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அப்போது நோர்வேயில் வெளியாகிய செய்திகளை அருகில் உள்ள இணைப்பில் காணலாம்.
http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=174946
http://www.vgtv.no/player/index.php?id=10749
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் உள்ள கல்பக்கன் எனும் இடத்தில் ஓகஸ்ட் 12 2007ல் இடம்பெற்ற குழு மோதலில் செலிக்கன் ரஞ்சன் என்ற 19 வயது இளைஞர் கொல்லப்பட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகி அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார். நேர்வேயில் தமிழ் சமூகத்திடையே இடம்பெற்ற மோசமான ஒரு மோதல் சம்பவமாக இது இருந்தது.
ரமணன் விவேகானந்தன் (20) என்பவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு 10க்கும் மேற்பட்டவர்கள் பல பாகங்களில் இருந்தும் ஒஸ்லோவின் கல்பக்கன் பகுதிக்கு கத்தி, வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் துப்பாக்கியும் தாங்கி வந்துள்ளனர். அனைவரும் ஒஸ்லோவில் கூடி கல்பக்கன் பகுதியில் இருந்த ரமணன் விவேகானந்தன் மீது பதுங்கி இருந்து தாக்கி உள்ளனர். அப்போது ரமணன் விவேகானந்தனுடன் ஐவர் இருந்துள்ளனர். ரமணன் விவேகானந்தனின் தலையிலும் உடலிலும் துப்பாக்கிச் சூடுபட்டு அவர் நிலத்தில் வீழ்ந்த போது அவருடைய தலையைத் துண்டிக்க முற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு வருடங்களாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த மோதலுக்கு காரணம் என்று தெரியவருகிறது.
இச்சம்பவத்தில் கண்ணன், குகன் ஆகிய இருவரும் சூட்டுக்காயம் மற்றும் வாள்வெட்டுக் காயங்களினால் எற்பட்ட அதிக இரத்தப் போக்குடன் மிக ஆபத்தான நிலையில் உளவல் பல்கலைக்கழக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
சம்பவம் இடம்பெற்ற மைதானப் பகுதியில் இருந்து ஒரு பிஸ்டலையும் ஒரு வாளையம் பொலிஸார் மீட்டனர். இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாகப் பலர் பின்நிறுத்தப்பட்டதாகவும் அவர்கள் ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து ஒஸ்லோவிற்கு இந்த நோக்கத்திற்காக வந்திருந்ததாகவும் ஒஸ்லோ நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இம்மோதலில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் எல்ரிரிஈ உடன் தொடர்புபட்டவர்கள் என்றும் ஒஸ்லோவில் உள்ள வியாபார நிறுவனம் ஒன்றின் உரிமம் தொடர்பில் எழுந்த சர்ச்சையே இந்தத் தாக்குதலைத் தூண்டியதாகவும் செய்திகள் அப்போது வெளியாகின. ஆனால் அப்போது நோர்வே பொறுப்பாளராக இருந்த பாலசிங்கம் யோகராஜா இக்குற்றச்சாட்டை முற்றாக மறுத்திருந்தார். எல்ரிரிஈக்கும் இச்சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென அவர் தெரிவித்திருந்தார்.
chandran,raja
அரசியல் தஞ்சம் கோரி புலம்பெயர்நாட்டுக்கு வந்த தமிழர்கள் இறுதியில் வந்தவர்களிடையே தஞ்சம் கோரவேண்டிய நிலை கூடுதலாக தமிழருக்கே ஏற்பட்டது. அதாவது தஞ்சம் கோரிய தமிழர். தஞ்சம் கொடுத்த தமிழர். இது நீண்ட காலமாகவே இருந்து முடிவுக்கு வந்தாலும் இன்னும் முடிந்த முடிவாக இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்பார்கலாம்.
கற்பழிப்பு கொலை மர்மக்கொலை கோவில்களுக்கு பொரிச்ச எண்னை ஊற்றுவது. முட்டை எறிவது. புத்தகோவில் யன்னல் கண்ணாடிகளை அடித்துடைப்பது. பொதுகாரியங்களுக்கு அனுமதி எடுப்பது… கொடுப்பது கடந்து போய்…இனி
மலேசியா தாய்லாந்திலிருந்து ஐரோப்பா அமெரிக்காகவுக்கு கொலைசெய்யவருவார்களா? அல்லது ஐரோப்பா அமெரிக்காவிலிருந்து மலேசியா
தாய்லாந்துக்கு கொலைசெய்யப்போவார்களா? என்பதையே எதிர்பார்கலாம். நுhறும் ஆயிரமாக இருந்த தொகை மில்லியன் தொகையாக வளரலாம்.
சுமங்களா
லண்டன் பரிசில் நடைபெற்றது போல நோர்வேயிலும் நடைபெற்றுள்ளது. இது தமிழர் இன்னும் வன்முறையாளர்கள் என்பதைத்தான் சொல்கிறது.
Kannan
அதில் முக்கிய குற்றவாளியாக இருக்கிற அன்ரன் …………………………………. இந்தக் கலவரம் கோயிலிலைதான் தொடங்கினதுங்கோ. நாக்கொட்டிக்காதான் முக்கிய வியாபாரமுங்கோ.
Kusumbo
பாலசிங்கம் யோகராசா (பாஸ்கரன்) ஒரு முழுப்புலிப்பினாமி. இப்ப கேபி எண்டு கேள்வி
வன்முறையாளர்களையும் கொலைஞர்களையும் விட இவற்றை ஆதரிக்கும் புலிவாலுகளுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்.
Kovai
நீதிமன்றம் அவசர பட்டு வேறு ஒரு பதிலை சொல்லி இருக்கு மாதிரி எனக்கு தெரியுது. புலிக்கு முழுக்கு போட நோர்வே அரசு முடிவு எடுத்திட்டுது போல கிடக்கு.
rohan
//நீதிமன்றம் அவசர பட்டு வேறு ஒரு பதிலை சொல்லி இருக்கு மாதிரி எனக்கு தெரியுது. புலிக்கு முழுக்கு போட நோர்வே அரசு முடிவு எடுத்திட்டுது போல கிடக்கு.//
நோர்வே அரசின் முடிவுக்கும் நீதிமன்றத் தீர்ப்பிற்கும் என்ன தொடுப்பு?
மகுடி
கெதியில ப(பு)லிகள் அல்- கய்தா போல சர்வதேச அரங்கில ஏதாவது செய்வினம் போல கிடக்கு. புலத்தில இருக்கிற தமிழருக்கு ஆப்புதான்.
மாயா
நோர்வேயில் நேற்று (10.07.2009) பிற்பகல் 5 மணிக்கு விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவினரின் மத்திய குழுக் கூட்டம், புலிகளின் நோர்வே தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. தமிழீழ மக்கள் பேரவை என்ற பெயரில் பற்றிமாகரன் என்பவரை தலைமையாக கொண்டு இயங்கிவரும் புலிகளின் முன்னணி அமைப்பின் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
கே.பி க்கு எதிரான நெடியவன், ரி.ஆர்.ஓ ரெஜி ஆகியோரது பிரிவினர் இங்கு பங்கு கொண்டுள்ளதுடன் தாமும் தொடர்ந்து தமிழீழ மக்கள் பேரவையின் கீழ் இயங்குவதென முடிவெடுத்துள்ளனர்.
அதே நேரம் நேற்றயதினம் கே.பி குழு வினரின் செயற் குழு கூட்டம் நோர்வேயில் இடம்பெற்றுள்ளதுடன், இக்கூட்டத்தின் போது நோர்வேயில் இயங்குகின்ற அன்னை பூபதி பாடசாலையின் நிர்வாகப் பொறுப்பை கே.பி குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளாக தெரியவருகின்றது. இப்பாடசாலை நெடியவன் தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கு இப்பாடசாலையின் பொறுப்பாளராக இருந்துவந்த யோகராஜா பாலசிங்கம் என்பவர் கடந்த சில நாட்களாக நோர்வேக்கு வெளியே சென்றுள்ள நிலையில் இவ்விடயம் இடம்பெற்றுள்ளது. அவர் கே.பி குழுவின் அச்சுறுத்துலக்கு அஞ்சி அல்லது எதிர்காலத்தில் கே.பி குழுவுடன் இணையும் நோக்கில் நெடியவன் தரப்பினருக்கு கம்பி நீட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. – இலங்கை நெற் செய்தி
தமிழ் தலிபான்கள்
//நீதிமன்றம் அவசர பட்டு வேறு ஒரு பதிலை சொல்லி இருக்கு மாதிரி எனக்கு தெரியுது. புலிக்கு முழுக்கு போட நோர்வே அரசு முடிவு எடுத்திட்டுது போல கிடக்கு.//
நோர்வே அரசின் முடிவுக்கும் நீதிமன்றத் தீர்ப்பிற்கும் என்ன தொடுப்பு?
நல்ல கேள்வி – நோர்வே நாட்டின் அனைத்து செற்பாடும் அதாவது ஒரு கடையில் ஒரு இனிப்பு வாங்குவமாக இருந்தால் அதற்குள்ளும் பொலிசாரின் கட்டுபாடு இருக்கு. நோர்வே அரசு ஒரு அமைப்பை தமது வாயால் அடக்காது அதற்கு பதிலாக ஊடகம் பொலிஸ் இரண்டையும் வைத்து உயிரில்லாத பிணமாக்கி முடிக்கும்.
இதுதான் அல்கைடா என்றாலும் சரி தமிழ் தலிபான்கள் என்றாலும் சரி நோர்வெயின் எழுதப்படாத முறை.
Kannan
எல்லாரும் ஏதோ நோவேயைப் படிச்சுக் குடிச்சவங்கள் மாதிரிக் கிளிக்கிறானுங்கள். சுத்துறவங்கள் சுத்திக்கொண்டுதான் இருக்கிறானுகளுங்கள். தான் எவ்வளவு சுத்தியதெண்டு எழுதினவனுக்கே தெரியும்தான்.
Nitharsan
மாயாவின் பின்நோட்டப்படி நோர்வேயில் குழுமோதல் இருக்கு எண்டு சொல்லுறியள். வெட்டுத்தள்ளின பொடியளையும் வெளியிலை விட்டால் இன்னும் சுகமாய் இருக்கும்