யாழ் குடாநாட்டுக்கு ஏ9 வீதியூடான பேரூந்து சேவைகள் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார் என்றும் அந்த அமைச்சின் ஊடகத்துறை விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டு மக்கள் தரைவழிப் போக்குவரத்தின்றி எதிர்நோக்கியுள்ள பிரயாண கஸ்டங்களைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக ஒன்றுவிட்ட ஒரு தினம் ஐந்து சொகுசு பஸ் வண்டிகள் கொழும்பிலிருந்தும், வவுனியாவில் இருந்தும் ஒரே நேரத்தில் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது யாழ் குடாநாட்டுக்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்து விமானம் மூலமாகவும் கப்பல் மூலமாகவுமே நடைபெறுகின்றன என்பதும், இதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களையும் பெருந்தொகைப் பணச் செலவினையும் மக்கள் எதிர்நோக்கி வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
vanthijathevan
உங்கள் அரசியலின் கடைசி அஸ்தமனத்தின் இறுதிப் பணியாக இது இருக்கக் கூடும்.
msri
தேவன் ஏன் இப்படிச் சொல்கின்றீர்!
டக்கிளசிற்கு இப்போதான் “வடக்கின் வசந்திறகான திருமணமே” நடைபெற்றுள்ளது! “தேர்தல் தேன்நிலவு” நடைபெறும் இவ்வேளையில்> நீர் ஏன் இப்படிச் சபிக்கின்றீர்! அவர் பல்லாணடு வாழ்ந்து> மகிந்தாவிற்கும்> மகிந்தப் பேரினவாதத்திற்கும் தொழுதுண்டு சேவை செய்யவேண்டும்!
mano
ஒரு புரட்சிகர இயக்கத்தின் பொறுப்பிலிருந்த போராளி இந்தளவு தூரம் தமிழ் மக்களின் நலனுக்காக இறங்கி வருவது பாராட்டத்தக்கது. இதே தமிழ் மக்கள் ஏற்றி விடுவார்கள் என நம்புகிறார் போலிருக்கிறது.
vanthijathevan
நேரத்திற்கு நேரம் தனது நிலைப்பாட்டை மாற்றி மாற்றி முடிவு சொல்கின்ற மகிந்தவை நம்பி இந்த தோழர் தேர்தலில் வைத்துள்ள கூட்டு தமிழ் மக்களின் மனங்களில் சினத்தை கிளப்பியுள்ளது. முன்பு தான் புலியை சொல்லி அரசின் பக்கம் நின்றதை பொறுத்துக் கொண்டோம். இப்ப தான் புலி இல்லையே. ஏன் அரசோடு ஒட்டியிருக்க வேண்டும்? ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு சாட்டு சொல்லி கொண்டிருக்கப் போகின்றீர்களா?
chandran,raja
// ஏன் அரசோடு ஒட்டியிருக்க வேண்டும்?// வந்தியதேவன்.
அரசு என்பது ஒரு இனத்திற்கு உரியதுதல்ல. இலங்கை மக்களுக்குயுரியது தான். அது இல்லாததாக தெரிந்தால் உள்ளதாக செய்வதே அரசியல்.இதற்கு நிதானமும் பொறுமையும் அவசியம். அரசியலை நாம் இழந்து நின்றதாலேயே சினப்பட்டுசினப்பட்ட நிர்கதியாக வந்து நிற்கிறோம். தமிழ்மக்கள் சினப்படுவதாக தெரிந்தால் கடந்தகாலத்தை வாசித்து காட்டி பொறுமை காக்க சொல்லி அறிவுறுத்தவும் அதுதான் நொந்துபோன தமிழ்மக்களுக்கு நீங்கள் செய்யும் சேவையாகும். ஐரோப்பாவிலே அமெரிக்காவிலேயே இருந்து சிந்திக்காமல் இலங்கைமக்களுடைய அரசியல் நிலமைகளை இலங்கையிலிருந்தே சிந்திக்க வேண்டும். இதுவே எம்இனத்திற்கு நாம் செய்யும் தொண்டாகும்.
vanthijathevan
“அரசு என்பது ஒரு இனத்திற்கு உரியதுதல்ல. இலங்கை மக்களுக்குயுரியது தான்”
ஒன்றரைக் கோடி மக்களில் மூன்று லட்சத்தை மட்டும் ஏன் முகாமில் அடைத்து வைத்து துன்பத்தை கொடுக்க வேண்டும்? புலியை பழி வாங்கவா?
“அது இல்லாததாக தெரிந்தால் உள்ளதாக செய்வதே அரசியல்.”
வெறும் பேச்சினால் உள்ளதாக செய்து விட முடியுமா? இலங்கை அரசு இந்த உலகத்தில் உள்ள மனித விழுமியங்களை எல்லாம் தன்னகத்தே கொண்டு இயங்குகிறது. சொன்னவுடன் கேட்டு எல்லாம் தந்து விடும்.
மாயா
//vanthijathevan on July 9, 2009 11:45 am “அரசு என்பது ஒரு இனத்திற்கு உரியதுதல்ல. இலங்கை மக்களுக்குயுரியது தான்”
ஒன்றரைக் கோடி மக்களில் மூன்று லட்சத்தை மட்டும் ஏன் முகாமில் அடைத்து வைத்து துன்பத்தை கொடுக்க வேண்டும்? புலியை பழி வாங்கவா?
“அது இல்லாததாக தெரிந்தால் உள்ளதாக செய்வதே அரசியல்.”
வெறும் பேச்சினால் உள்ளதாக செய்து விட முடியுமா? இலங்கை அரசு இந்த உலகத்தில் உள்ள மனித விழுமியங்களை எல்லாம் தன்னகத்தே கொண்டு இயங்குகிறது. சொன்னவுடன் கேட்டு எல்லாம் தந்து விடும்.//
அரசு என்பது மக்களை கொல்ல வழியாக இருக்க முடியாது. அது அப்பாவி பொது மக்களை காப்பதற்கு உத்தரவாதம் அழிக்க வேண்டும். 3 லட்சத்தை வெளியே விட்டு 19,742,439 மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்க முடியாது.
“தமிழர் என்றால் புலிகள் , புலிகள் என்றால் தமிழர்” என கோஸம் போட்டு அப்பாவிகளுக்கும் ( வயதானவர்கள் முதல் பள்ளிச் சிறுவர்கள் வரை) வலுக்கட்டாயமாக ஆயுத பயிற்சியளித்து பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தவர்கள் புலிகள்தானே தவிர அரசல்ல. அப்பாவிகளை பயங்கரவாதிகள் ஆக்கி விட்டு , இன்று வெளியே விடு என்பதில் என்ன நியாயமோ?
குற்றவாளிகளை மட்டுமல்ல குற்றவாளியாக சந்தேகிக்கப்படுவோரையும் ஒரு அரசால் கைது செய்யலாம். நிரபாராதிகள் விடுதலை அடைவர்கள். குற்றவாளிகள் தண்டனை அனுபவிப்பார்கள்.
புலிகளது கட்டுப்பாட்டில் இருந்து வந்தவர்கள் , முகாமுக்குள் இருப்பதால்தான் குண்டு வெடிப்புகளோ அல்லது பெரிதான அசம்பாவிதங்களோ நாட்டில் நடைபெறவில்லை. அனைவரையும் திறந்து விட்டிருந்தால் தினந்தோறும் நூற்றுக் கணக்கில் அப்பாவி பொது மக்கள் செத்திருப்பார்கள். வெளியே புலத்தில் வாழ்வோருக்கே அறிவு இல்லாத போது, புலியோடு வாழ்ந்த மக்களுக்கு அறிவு இருக்கும் என்று சொல்ல முடியாது? புலிகள் தமிழரை மடையராக்கி வைத்ததிலேயே பெரும் பங்கு வகித்துள்ளன.
அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும் பொதுவான அரசாகத்தான் சிறீலங்கா அரசு நடந்து கொண்டுள்ளது. அதனால்தான் வன்னி மக்களுக்கு புலிகளது கட்டுப்பாட்டில் இருந்த காலத்திலும் தொடர்ந்து அரச ஊழியர் ஊதியம், உணவு , மற்றும் மருந்துகளை இலவசமாக அனுப்பியது. அதையே எடுத்து தனது மக்களுக்கே விற்று வயிறு வளர்த்த கூட்டம் புலிக் கூட்டம். இலவசமாக கிடைத்த பொருட்களையே விலைக்கு விற்றது போன்ற கீழ்தரமான செயலில் புலிகள் இறங்கியது மட்டுமல்ல, அதற்கு எதிராக குரல் கொடுத்து போராடிய பல நூறு பொது மக்களை சுட்டு எரித்து கொலை செய்ததோடு நின்று விடாது, அதை இராணுவம் செய்தது என விளம்பரமும் செய்தது.
நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம்.
மகுடி
//vanthijathevan on July 9, 2009 8:18 am நேரத்திற்கு நேரம் தனது நிலைப்பாட்டை மாற்றி மாற்றி முடிவு சொல்கின்ற மகிந்தவை நம்பி இந்த தோழர் தேர்தலில் வைத்துள்ள கூட்டு தமிழ் மக்களின் மனங்களில் சினத்தை கிளப்பியுள்ளது. முன்பு தான் புலியை சொல்லி அரசின் பக்கம் நின்றதை பொறுத்துக் கொண்டோம். இப்ப தான் புலி இல்லையே. ஏன் அரசோடு ஒட்டியிருக்க வேண்டும்? ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு சாட்டு சொல்லி கொண்டிருக்கப் போகின்றீர்களா?//
அரசை எதிர்த்து ஒன்றும் கிழிக்க ஏலாது. இனத் துவேசத்தை மட்டும்தான் வளர்க்க ஏலும். அரசோடு இருந்து அந்த மக்களுக்கு தொடர்ந்து நல்லவை செய்ய ஏலும். இஸ்லாமிய கட்சிகளும் , மலையக கட்சிகளும் அரசோடு இணைந்து , தமிழர் விடுதலைக் கூட்டணியை விட அதிகம் சாதித்துள்ளன.
தமிழ் கட்சிகள் , கூத்தமைப்பு போன்றவை பேச்சில் மட்டுமே கிழித்துள்ளன. ஒன்றும் செய்யவில்லை. தமிழ் கட்சிகளால், கதைப்பதையும், அறிக்கை விடுவதையும், கொலைக் கலாச்சாரத்துக்கு ஒத்து ஊதியதையும் தவிர வேறு என்னவாவது நன்மை செய்திருந்தால் சொல்லுங்க பார்ப்பம்?
vanthijathevan
அரசு என்பது மக்களை கொல்ல வழியாக இருக்க முடியாது. அது அப்பாவி பொது மக்களை காப்பதற்கு உத்தரவாதம் அழிக்க வேண்டும். 3 லட்சத்தை வெளியே விட்டு 19 742 439 மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்க முடியாது”
மூன்று லட்சம் பேரும் புலிகளாம். உலகமே இதை காது கொடுத்து கேள்!