இலங்கையருக்கு நிவாரணம் வழங்க இந்திய வரவு செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபா ஒதுக்கீடு

இலங் கையின் வடக்கில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளோருக்கு நிவாரணம் வழங்கவென இந்திய வரவு செலவுத் திட்டத்தில்  500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் 2009-2010 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இந்தியப் பாராளுமன்றத்தில் நேற்று சமர்பிக்கப்பட்டது.

இந்த வரவு- செலவுத் திட்டத்தை இந்திய நிதியமைச்சர் பிரணாப் முக்கர்ஜி சமர்ப்பித்தார். இந்த நிதி வடக்கில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கும் மக்களின் சேமலாப நலனுக்கும் பயன்படுத்தப்படுமெனவும் நிதியமைச்சர் பிரணாப் முக்கர்ஜி தெரிவித்துள்ளார்.

நலன்புரி நிலையங்களிலுள்ள மூன்று இலட்சம் சிவிலியன்களை துரிதமாக மீளக்குடியமர்த்த இலங்கை அரசாங்கம் எடுத்து வரும் நிகழ்ச்சித் திட்டத்தை இந்திய அரசாங்கம் பாராட்டியுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *