இலங்கைக்கு இந்திய இராணுவத்தினர் உதவி – இந்திய வெளியுறவுச் செயலாளர தகவல்

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களிலில் உள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதற்காக இந்திய இராணுவத்தினரின் உதவியை வழங்க உள்ளதாக  இந்திய வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். நிலக்கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் செயற்பாட்டிற்கும் அவற்றை செயலிழக்க வைக்கும் நடவடிக்கைகளுக்கும் இந்திய இராணுவக் குழுவினர்ää இலங்கை அதிகாரிகளுக்கு உதவிகளை வழங்குவார்கள் எனவும் அவர் ஊடகவியலாளர்களிடம் நேற்று தெரிவித்துள்ளார்.

கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இந்திய இராணுவ வல்லுனர்களையும் இராணுவ உபகரணங்களையும் இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளோம். இங்கு இராணுவ வல்லுனர்களை அனுப்பும் விடயமானது சாத்தியமாகவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய மருத்துவ குழுவினர் மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *