யாழ். மாவட்டத்தில் இலங்கை முதலீட்டுச்சபை பணியகக்கிளை நிறுவப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டுச் சபையின் நிர்வாக நிறைவேற்றுப் பணிப்பாளர் டபிள்யூ.பியசேன தெரிவித்துள்ளார். யாழ்.செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் முதலீட்டுச் சபையின் தொழில்நுட்ப நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.பி.எல்.டி.சில்வா, தலைமைச் செயலகப் பணிப்பாளர் திருமதி ரேணுகா வீரக்கோன், சிவாணி பெஞ்ஜமின் ஆகியோரும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷம் கலந்துகொண்டனர்.
வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் சர்வதேசப் பாடசாலைகள், தனியார் வைத்தியசாலைகள், மருத்துவக் கல்லூரி, ஹோட்டல்கள், தொடர்மாடிக் குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கு முதலீட்டுச்சபை அங்கீகாரம் வழங்கவுள்ளது.