இலங்கை ரயில்வே சேவையில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்காக விசேட அனர்த்த நிவாரணக் கொடுப்பனவு ஒன்றை வழங்க போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும நடவடிக்கை எடுத்துள்ளார்.
எமது நாட்டில் செயற்திறன்மிக்க ரயில்வே சேவையை ஏற்படுத்தும் நோக்கத்திற்காகவும் மற்றும் ரயில்வே ஊழியர்களின் சேவையைப் பாராட்டும் வகையிலும் இந்த விசேட அனர்த்த நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.