திருகோணமலை மாவட்டத்தின் கல்வி வரலாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு ஆவணமாக்கப்பட வேண்டும்

trincomalee-district.jpgதிருகோண மலை மாவட்டத்தின் கல்வி வரலாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு ஆவணமாக்கப்பட வேண்டும். இப்பணியில் திருகோணமலைக் கல்வி வலயத்தின் ஆக்கத்திறன் ஆவணப்படுத்தல் தகவல் பிரிவு முழுமையாக ஈடுபட வேண்டும் என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் சி.தண்டாயுதபாணி வேண்டுகோள் விடுத்தார்.

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தினால் வலயப் பாடசாலைகளுக்கான 2009 புத்தாக்கக் கண்காட்சியின் நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாகப் பணிப்பாளர் தண்டாயுதபாணி கலந்துகொண்டு பேசினார். திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இக் கண்காட்சி நடத்தப்பட்டது.

“திருகோணமலையில் அறிஞர்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் சேவையாற்றியுள்ளனர். ஆனால், அவை தொகுக்கப்பட வேண்டும். இத்துறையில் விடப்பட்டிருக்கின்ற இடைவெளியை நிரப்ப வேண்டும். மாவட்டத்தின் கல்வி வரலாறு ஒன்றைத் தேடிக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தின் கல்வி வரலாறு, புதிய கண்டுபிடிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட வேண்டும். அது அவசியமாக செய்யப்பட வேண்டும். எங்களுக்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததிக்கும் இதனைச் செய்து கொடுக்க வேண்டியது எமது கடமையாகும். இப்பணியை திருகோணமலை கல்வி வலய அலுவலகத்தின் ஆக்கத்திறன் மற்றும் ஆவணப்படுத்தல் தகவல் பிரிவு மேற்கொள்ள வேண்டும் என்று வலயக் கல்விப் பணிப்பாளரைக் கேட்டுள்ளேன்’ என்றும் பணிப்பாளர் தண்டாயுதபாணி தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *