“புலிகளின் குரல்” வானொலி ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பம்

“புலிகளின் குரல்” வானொலியின் இணையத்தள ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் யூலை 5ஆம் நாள் கரும்புலிகள் நினைவு தினத்தன்று இணயத்தள ஒலிபரப்பினை புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 1990ம் ஆண்டு  யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட “புலிகளின் குரல்” வானொலிச் சேவை உலக வரலாற்றில் எந்தவொரு வானொலியும் சந்திக்காத இன்னல்களைச் சந்தித்த போதிலும் துவண்டு விடாது நிமிர்ந்து நின்றது.

“புலிகளின் குரல்” வானொலியை இலக்கு வைத்து 23 தடவைகள் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்த போதிலும் தாக்குதல் இடம்பெற்ற சில நிமிடங்களில் அந்த வானொலிச் சேவை மீண்டும் வானலைகளில் தவழ்ந்திருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வன்னியில் மிக மோசமானதாக்குதல் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போதும், தனது ஒலிபரப்பை தொடர்ந்து நடத்தி வந்த இந்த வானொலி கடந்த மே மாதம் 16ம் திகதி  தனது   ஒலிபரப்பையும் நிறுத்திக்கொண்டது. தற்பொழுது இணையத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் சேவை, பின்னர் செய்கோள் ஒலிபரப்பாக விரிவாக்கம் பெறும் என, “புலிகளின் குரல்” வானொலி நிலைய கலையகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply to kavi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • shantha
    shantha

    மக்களிடம் பறித்த பணத்தின் கணக்கு காட்ட புலி பினாமிகள் மீண்டும் புலியை உயிர்பிக்கிறார்கள்!!!

    Reply
  • Keevalam
    Keevalam

    ஆரால் எங்கிருந்து ஆருக்காக எதுவரை ? பதில் தரமுடியுமா?

    Reply
  • kavi
    kavi

    திரும்பத் திரும்ப ஏதாவது செய்து இருக்கும் இலங்கைத் தமிழர்களை பிரச்சனையில்மாட்டிவிட்டு கொள்ளையடித்த பணத்தை பங்கு போடும் திட்டம், எனவே அனைத்து மக்களும் கவனமாக இருக்கவும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இது எப்படி புலிகளின் குரலாக இருக்க முடியும். வேண்டுமென்றால் எலிகளின் குரலாக இருக்கலாம். அல்லது எலிகள், புலிகளின் குரலை மிமிக்கிரி செய்யப் போகினமோ??

    Reply
  • chandran.raja
    chandran.raja

    “புலியின் குரல்” புலம்பெயர்மக்கள் மத்தியில் புகழ் பெற்றது. தமிழகத்து திரைப்படம் பாடல்கள் கற்பனைபண்னி கண்ணீர் விடக்கூடிய தொடர்நாடகங்களை பார்த்து மகிழ்கிற புலம்பெயர் தொழிலாளர் மத்தியில் ஆதரவைப்பெறும். நித்திரைக்கு போகுமுன் மனதிற்கு இதமான செய்திகளை கேட்கவேண்டும். இருபது சிங்கள இராணுவம் புலிகளின் அதிரடித் தாக்குதலில் பலி. புலிகள் வகுத்த வியூகத்தில் இரண்டாயிரம் சிங்கள இராணுவம் சிக்கியது.சிங்கள இராணுவத்திடம் களமாடிய புலிகள் அவர்களை தும்சம்செய்து விட்டு அவர்களின் ஆயுதங்களையும்
    கைப்பற்றிக்கொண்டு தமது பாசறை திரும்பினார்கள். அத்துடன் தேசியத்தலைவரின் தீர்கதரிசன வார்த்தை. ஈழத்தின் தேசியகீதம். இதுவே காலை தொழிலிக்கு போவதற்கான ஊட்டச்சத்து. விடுவார்களா? இந்த லும்பன்கள். நான் சொல்வதின் அர்த்தத்தில் வேறுஒருபாணியில் ஒலிபரப்பப்பம்.
    புலிப்பிணாமிகள் தொழில்விஷயங்களில் சமார்த்தியசாலிகள்.

    Reply
  • palli
    palli

    சந்திரா ஒரு நிமிடம் திகைத்து விட்டேன்; உங்கள் செய்தி இன்றோ நேற்றோ நடந்திருக்குமோ என எண்ணி, பின்புதான் பார்த்தேன் இது பளய
    பேப்பர் சங்கதிஎன; ஆனாலும் இந்த தலையின் நேரடி பார்வை என ஏப்பம் விட்டார்களே அது என்னவாய் இருக்கும்; வீடியோதானே????

    Reply
  • nsk
    nsk

    If you want go an start another radio why criticise LTTE. You all are capable of doing that as we all are from the same community.

    PULI PINAMI- LUMBAN

    Grow up…… They are gone why don’t you form a credible organisations…….

    Reply
  • aappu
    aappu

    அப்படி இனிமேல் ஒரு வானொலி தொடங்கினால், அது புலிகளின் வானொலியாக இருக்காது.அது கடப்…புளிகளின் வானொலியாகவே இருக்கும். ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
    “திருடர்கள்-ஜாக்கிரதை”.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //அது கடப்…புளிகளின் வானொலியாகவே இருக்கும்.- aappu //

    சரியாகச் சொன்னீர்கள்.

    Reply