வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள சிறுவர்களுக்கு அம்மை மற்றும் போலியோ அவசர தடுப்பூசிகளை வழங்குவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு மேலதிகமாக 5 இலட்சம் ஸ்ரேலிங் பவுண்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கையில் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் யுனிசெப் அமைப்புக்கு இந்நிதி கடந்த 29ஆம் திகதி கையளிக்கப்பட்டிருப்பதாக இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் டாக்டர் பீட்டர் ஹேயிஸ் தெரிவித்துள்ளார். நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக தங்கியிருக்கும் அனைத்து சிறுவர்களுக்கும் இத்தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கடந்த மாதம் நிவாரணக் கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ முகாமில் அன்றி இத்தடுப்பூசிகள் வழங்கும் செயற்திட்டம் வேறாக முன்னெடுக்கப்படுமெனவும் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை யில் பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் 12.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.