வெளி விவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சீனாவுக்கான நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று பயணமானார். சீன வெளிவிவகார அமைச்சர் யங் ஜெச்சியின் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் அமைச்சர் சீனாவின் உதவிப் பிரதமர் வின்சட் சீவ்வைச் சந்தித்து இரு நாடுகளினதும் சம கால விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவார்.
”இலங்கையின் கடந்த கால நெருக்கடியும் எதிர்கால நடவடிக்கைகளும்” என்ற தலைப்பில் சீனாவின் சர்வதேச கல்விக்கூடத்தில் அமைச்சர் உரையாற்றுவார். சீனாவின் வர்த்தக சமூகத்தினரையும் சீனாவில் வாழும் இலங்கையர்களையும் அமைச்சர் போகொல்லாகம் சந்தித்து உரையாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.