பாராளுமன்றத்தில் இரண்டாவது சபையின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தல்இலங்கை இந்திய உடன்படிக்கை மூலம் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று அமெரிக்காவின் புதிய உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேட் பிளேக் கூறியுள்ளார். வாஷிங்டனில் காங்கிரஸ்குழு முன் கடந்த வியாழக்கிழமை இதனை தெரிவித்துள்ள ரொபேர்ட் பிளேக், இலங்கையில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ளநிலையில், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியுமெனக் கூறியுள்ளார்.
13 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இரு தசாப்தகாலங்கள் கடந்து விட்டன. உயர் நீதிமன்றமும் இதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தது. ஆனால், 13 ஆவது திருத்தத்தின் ஒருபகுதியே அமுல்படுத்தப்படுகிறது. 13 ஆவது திருத்தத்திலும் குறைவானவற்றை பெரும்பான்மைச் சிங்களக்கட்சிகள் வலியுறுத்தும் அதேவேளை, தமிழ்க்கட்சிகள் 13 ஆவது திருத்தத்திலும் அதிகமானவற்றை வலியுறுத்துகின்றன.
அதேவேளை, இலங்கைப் பாராளுமன்றத்தில் இரண்டாவது சபையின் முக்கியத்துவம் குறித்தும் பிளேக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
மேல்சபையான இந்த இரண்டாவது சபையான மாகாணங்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டதாக இருப்பதற்கான யோசனையை உள்ளடக்கியதாகும். இந்த நடவடிக்கைகள் அரசியல் நல்லிணக்கத்தை வென்றெடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ற அபிப்பிராயத்தை பிளேக் வெளிப்படுத்தியுள்ளார்.