“கப்டன் அலி’ தொடர்பாக ஐ.நா. எதுவும் செய்யாது – ஜோன் ஹோம்ஸ்

ships000.jpgஐ.நா. இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கென ஐரோப்பாவில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் வந்த “எம்.வி.கப்டன் அலி’ கப்பல் தற்போது சென்னைத் துறைமுகத்துக்கு அப்பால் 5 கடல்மைல் தொலைவில் நங்கூரமிட்டிருக்கும் நிலையில் அக்கப்பல் விவகாரம் தொடர்பாக ஐ.நா. வோ அல்லது ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரத்திற்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகமான தானோ எதுவும் செய்வதற்கு இல்லை என்று ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. வின் தலைமையகத்தில் பாதுகாப்புச்சபைக் கூட்டம் முடிவடைந்த பின் வெளியே வந்த ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸிடம் இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸின் நிருபர் மத்தியூ ரஸல்லீ தனது செய்தி ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • நண்பன்
    நண்பன்

    இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் நிச்சயம் கை விரிக்கும். இல்லையென்றால் புலிகளின் பினாமிகள் ICRC என்று இலங்கை சிங்கள இனவாத அரசியல்வாதிகளின் வசைபாடுகளுக்கும் தேவையில்லா பிரச்சனைகளுக்கும் செஞ்சிலுவைச் சங்கம் முகம் கொடுக்க நேரிடும்.

    ஏற்கனவே அந்த பெயர் ICRCக்கு உள்ளதோடு , ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கல்வீச்சுகளுக்கும் வசைகளுக்கும் ICRC கடந்த காலங்களில் முகம் கொடுத்தே உள்ளது. இன்னொருமுறை கைகொடுக்கப் போய் தலை கொடுக்கிற விடயம் இது. என்னைப் பொறுத்தவரை கப்பலோடு அதையும் ஆழ்கடலில் அமிழவிடலாம். உடைக்க கொண்டு போன கப்பல்தானே? உடைஞ்சா என்ன? அமிழ்ந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். இல்லையென்றால் இதைவைத்தே உள்ள தமிழரையும் அழித்துப் போடுவார்கள். கஞ்சியைக் குடித்துக் கொண்டாவது அந்த மக்கள் குண்டுப் பயமில்லாமல் இருக்கிறார்கள். இது தொடர அந்த ஆண்டவனை வேண்டுகிறேன். புலத்து தமிழர்களது பணத்துக்கு இனி காரண்டி. இனியும் கொடுக்கிறவன் …….. வேண்டாம். இனியும் இது மாதிரி கனவிலும் மக்கள் சோதனைகள் அனுபவிக்க வேண்டாம்.

    புலத்து புலிப் புண்ணாக்குகளும் , தமிழ் நாட்டு லூஸ் பினாமிகளும் காகிதத்தில் வேணுமானால் கப்பல் செய்து விடட்டும். சொத்து சண்டைகளையும் நீங்களே செய்யுங்கோ….. அந்த அப்பாவிகள் உயிரோடு விளையாடதீங்கோ.பிளீஸ்?

    “புலிகளின் தாகம் தமிழரில்லாத தாயகம்” கோஸம் புலிகளது ஆத்மாவோடு சாந்தியடையட்டும்.

    Reply
  • msri
    msri

    நாடு கடந்த தமிழ் அரசு அமைக்க புறப்பட்டுள்ளவர்களும்>வணங்காமண் மாதிரி நடுக்கடலில்தான் நிற்பார்கள்! அதுசரி நாடு கடந்த அரசமைப்புக்கு> “டாக்டர்” சேரனும் கொள்கைவகுப்பு > அரசியல் ஆலோசகர் ஆகிவிட்டார் போலுள்ளது! உது சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கின்ற வேலை!

    Reply