புலிகளின் தலைவர் பிரபாகரனை சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன் என்றும், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி விரைவில் கலையும் என்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறிய சோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சட்டமூலம் மீதான விவகாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:- பிரபல சோதிடர் ஒருவர் பிரபாகரனை அரசு கொல்லவில்லை. சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன் என்றும், மஹிந்தவின் அரசு விரைவில் கவிழும் என்றும் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் கூறியிருக்கின்றார். அச்சோதிடர் ஜனாதிபதியை கொலை செய்யத் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பார்த்திபன்
அப்போ இந்தச் சோதிடர் இப்போ நாலாம் மாடிக்குப் போக யார் சூனியம் செய்தது?? இது தெரியாவிட்டால் விட்டால் விக்கிரமாதித்தன் போல் எனக்கும் தலை சிதறி விடும்…..
accu
இவர் சோதிடர் இல்லை பைத்தியம். இவரையெல்லாம் கைது செய்வது அதைவிட பைத்தியக்காரத்தனம்.
msri
“பிரபாகரனை கொலை செய்த> ஐனாதிபதியை கொலை செய்யத் திட்டம்தீட்டிய”> இந்த சோதிடப் பயித்தியத்தை விடுதலை செய்ய> இந்திய ஆலோசனை தேவைப்படுமோ? சிவசங்க மேனன் வந்தாலும வரலாம்!