அண்மைக் காலமாக ஐபிசி அரசியல் ஆய்வாளர்கள் புதிய அரசியல் கண்டுபிடிப்பொன்றைச் செய்துள்ளனர். அதுதான் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் போர் மூளப் போகிறதாம். இந்தப் போரைத் தடுப்பதாயின் இந்தியா இலங்கைத் தமிழரோடு நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம். ஏதோ இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்துவிட்டதாகவும் இதை ஈழத் தமிழர்களே தடுக்க முடியும் என்பது போல ஓர் புரளியை கிளப்பிய வண்ணம் உள்ளனர்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது இந்த உடன்படிக்கை இந்திய நலன்சார்ந்த ஒன்று என்றும் இதில் ஈழத் தமிழர்களின் நலன் முற்றாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது என்றும் இவர்கள் போன்ற புலி ஆய்வாளர்கள் அன்று கூறினார்கள். அதில் ஓரளவு உண்மையும் உண்டு. அப்படியானால் தமிழ் மக்களுக்கு அதனிலும் சிறந்த தீர்வை வென்றெடுக்கும் அரசியல் தகுதி புலிகளிடம் இருந்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக சிறிலங்கா நீதிமன்றம் முடிவெடுத்து விட்டது என்று இதே புலி ஆய்வாளர்கள் ஒப்பாரி வைத்தார்கள். இலங்கை நீதிமன்றம் வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு வடக்கு கிழக்கை யார் இணைத்தது?
1987ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தமே வடக்கு கிழக்கு இணைவுக்கு வழி அமைத்தது. இதே ஒப்பந்தத்தைத்தானே ஈழத்தமிழருக்கு ஒன்றுமில்லாத ஒப்பந்தம் என்று அன்று சொன்னார்கள். இன்று அதே ஆய்வாளர்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூழப்போகிறது என்று புதுக்கதை விடுகிறார்கள்.
13 ஆண்டுகளுக்கு முன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த நேபாள மாவோயிஸ்ட்டுக்கள் கடந்த ஆண்டு ஆட்சியையும் கைப்பற்றி நாட்டையே ஆட்சி செய்தார்கள். அதில் அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக இன்னும் போராடுகிறார்கள். வேறுபட்ட வழிகளில். அவர்களுடைய போராட்டத்திற்கு அமெரிக்க – இந்திய – சீன ஆகிய நாடுகளின் நலன்கள் தடையாக இருக்கவில்லையா? ஈழப்போராட்டத்திற்கு மட்டும் தான் இவைகள் எல்லாம் தடைகளா? அல்லது நேபாளம் என்ன அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலா இருக்கின்றது?
கொலம்பியாவில் எத்தனை ஆண்டுகள் FARC எனும் கொரில்லா அமைப்பு அந்த அரசுக்கு எதிராக போராடி வருகின்றது. அவர்களை ஏன் எந்த ஏகாதிபத்தியமும் அழிக்க முடியவில்லை. கடந்த ஆண்டு அந்த அமைப்பின் பிரதித் தலைவரை கொலம்பிய இராணுவம் எல்லை கடந்து சென்று பொலிவிய மண்ணில் வைத்துக் கொலை செய்த போது தென் அமெரிக்கப் பிராந்தியமே கொலம்பிய நாட்டுக்கு எதிராக அணி திரண்டதைப் பார்க்கவில்லையா? அதற்கு என்ன காரணம்?
புலிகளின் உண்மையான அரசியல் வங்குரோத்தை மூடிமறைத்தக் கொண்டு ஈழத்தமிழர்களின் போராட்டம் தோற்றுப் போனதற்கு ஏதோ வல்லரசுகளின் சதி என்றும் பிராந்திய நலன்சார்ந்த அரசியல் பொருளாதார காரணிகளே காரணம் என்றும் இன்றும் கூட உண்மையை மறைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஈழத்திற்காகப் போராடுகிறோம் என்று சொல்லி இந்திய மண்ணில் கால் பதித்த போதே பிரபாகரனும் உமாமகேஸ்வரனும் அவர்களுக்கு பின்னால் நின்றவர்களும் ஒருவரை ஒருவர் துரத்தி துரத்தி சுட்டுக்கொண்டு தான் அந்த மண்ணுக்கு அறிமுகமானார்கள். அன்றே எம்முடைய அரசியல் உலகுக்கு தெரியவந்துவிட்டது. அன்றே எமது உரிமைப் போர் காட்டிக்கொடுக்கப்பட்டு விட்டது. அத்துடன் ஈழத்தமிழர்களுடைய அரசியல் வங்குரோத்து வெளிச்சத்திற்கு வந்தது. அன்றிலிருந்து வெள்ளை முள்ளிவாய்க்கால் வரை ஒன்றா இரண்டா எத்தனை சகோதரப் படுகொலைகளும் துரோகங்களும் இந்தப் போராட்டத்தில் நடந்தேறின. எதிரியால் அல்லவே.
இலட்சக்கணக்காண இந்திய இராணுவம் நிலைகொண்டுள்ள இந்திய மண்ணில் இன்றும் எத்தனை போராடுகின்ற அமைப்புகள் ஆயுதப் போரட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அழிக்க முடியாத இந்திய அரசும் அந்த இராணுவ இயந்திரமும் கடல் கடந்து வந்து ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழித்து விட்டதாம். இது இந்திய பலத்தைக் காட்டுகிறதா? அல்லது புலிகளின் அரசியல் வங்குரோத்தைக் காட்டுகிறதா?
கொலை செய்வதும் பணம் சேர்ப்பதும் தான் போராட்டம் என்றும் உண்மையான போராட்டத்தை வியாபார மயப்படுத்தி (பல போராளிகளைப் பலிகொடுத்து நிலங்களைப் பிடிப்பதும். பின் தேர்தல் காலங்களில் கொழும்பு பண மூட்டைக்காக பிடித்த நிலத்தை இராணுவத்திடம் விட்டுக்கொடுப்பதும் நாம் அறியாத ஒன்றல்ல.) கடந்த 30 ஆண்டுகாலம் தர்பார் ஆட்சி நடத்திய புலிகளையும் அவர்கள் செய்து முடித்த விட்டுச்சென்றுள்ள வெற்றிடத்தின் உண்மையான காரணங்களையும் கண்டறியாது மீண்டும் மீண்டும் ஆய்வாளர் அரசியல் நிபுணர் என்று ஏதேதோ பெயர்களை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இவர்களையும் இந்த ஊடகங்களையும் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தவது உண்மையாக மக்களை நேசிப்பவர்களுடைய கடமையாகும்.
எந்தவொரு நாடும் குறிப்பாக வல்லரசுகள் தமது நலன்சார்ந்த அரசியலையே முன்னெடுக்கிறார்கள் என்பதை அறிய அரசியல் வல்லுனராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜோர்ஜியா மீது ரஸ்யா படையெடுத்ததும் பின் சவுத் ஒசெற்றியா அப்ஹாசியாவை தனி நாடாக அங்கிகரித்ததும் அந்த இரு நாட்டு மக்களின் நலன்சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல. மேற்கு நாடுகள் கொசோவோவை தனிநாடாக அங்கிகரிக்க முடிவெடுக்கப்பட்டதும் கொசோவோவின் நலன்சார்ந்து அல்ல. (ஆனால் அங்கு சவுத் ஒசெற்றியா, அப்ஹாசியா, கொசோவோ மக்கள் நலன் பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மை.)
சீனாவினுடைய பொருளாதார விஸ்தரிப்பு வாதம் இந்திய பொருளாதாரத்தில் ஆளுமையுள்ள அமெரிக்காவையே விழுங்கிவிடுவது போன்று நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்காக இந்தியாவும் சீனாவும் இந்து சமுத்திரத்தில் போர் தொடுக்கப் போகிறார்கள் என்று ஆய்வுசெய்வது சரியான ரூமச். இலங்கையிலே உருவாகி உள்ள சீனாவினுடைய ஆளுமை இந்திய நலனுக்கு ஆபத்தாக இருந்தால் அதை இந்தியாவும் றோவும் பார்த்துக் கொள்ளட்டும். தங்களது சொந்த மக்களையும் புலிகளின் தலைமையையும் ஆய்வு செய்தே கொன்றொழித்த இந்த ஐபிசி ஆய்வாளர்கள் இந்தியாவிற்காக ஆய்வு செய்து இந்தியாவை அழித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. புலிகளின் புலனாய்வு அளவிற்கு றோவை குறைத்து மதிப்பிட முடியாது. நடந்த சம்பவங்கள் அப்படி இருக்கிறது.
எத்தினை பெரிய தியாகங்களைச் செய்து வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டத்தை காப்பாற்ற வக்கில்லாத புலிகளுக்கும் புலி ஆய்வாளர்களுக்கும் இந்திய நலன்களை எப்படிக் காப்பாற்றுவது என்று ராஜதந்திரம் தெரித்திருக்கிறது என்றால் அது எவ்வளவு நகைப்பிற்குரியது. இதற்குள் இந்திய ஆட்சியாளர்களுக்கு ஐபிசியில் அட்வைஸ் வேறு. புலிகளிடமும் இந்த ஆய்வாளர்களிடமும் ஒரு தடவை இந்தியாவை ஆட்சி செய்யுங்கள் என்று ஆட்சியை ஒப்படைத்திருந்தால் ஆறு மாதத்தில் அந்த மண்ணில் சிறுபான்மை இனங்களே இருந்திராது. அத்தனை சிறுபான்மையினரும் சீனாவில் அரசியல் தஞ்சம் கோரி இருப்பார்கள். முஸ்லிம்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கும் பங்களாதேசுக்கும் விரட்டி அடிக்கப்பட்டு இருப்பார்கள். இதற்குள் ராஜதந்திர ஆய்வு செய்கிறார்கள்.
அமெரிக்கா சத்தம் போடாமல் இருக்கவே ஒபாமாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய புலிகளும் அவர்களின் பக்த கோடிகளும் ஒரு பேச்சுக்கு தமிழீழத்துக்கு நாங்கள் ஆதரவு என்று யாராவது ஒரு அமெரிக்க அதிகாரி சொல்லியிருந்தாலே அமெரிக்கா போலந்திலும் செக்குடியரசிலும் நிறுவவுள்ள ஏவுகணை எதிர்ப்பு ராடர்கருவிகளை காங்கேசந்துறையில் பூட்டி இந்தியாவை மட்டுமல்ல அதற்கு மேலேயள்ள சீனாவையும் ஒரு கை பாருங்கள் என்று வெள்ளைத் தாளில் கையொப்பமிட்டு கொடுத்திருப்பார்கள். இந்த லட்சணத்தில் இவர்களுடைய ஆய்வும் ஆவியும்.
பார்த்திபன்
என்ன செய்வது பேனா பிடித்து நாலு எழுத்து எழுதத் தெரிந்தால் அவர் அரசியல் ஆய்வாளராம், கவிதை என்ற பெயரில் சும்மா கிறுக்கியவரெல்லாம் புவிசார் அரசியல், இராணுவ ஆய்வாளராம். இந்த இலட்சணத்தில் இவர்களின் ஆய்வுகள் எப்படியிருககும் என்று சொல்லவும் வேண்டமா?? இது தான் இலங்கைத் தமிழரின் தலைவிதியோ??
இவர்களில் பலபேர் தம்மை புத்திஜீவிகள் எனறு கூறிக்கொண்டு GTV,Deepam போன்ற தொலைக்காட்சிகளில் செய்யும் அளப்புகள் சொல்லி மாளாது. நேற்றும் ஒருவர் Deepa TVயில் வந்து பிளந்து கட்டினார். சிலரின் இடக்கு முடக்கான கேள்விகளுக்கு கோபம் கொண்டார்.
சிலவருடங்கள் முன்பு மகிந்த சகோதரர்களை அமெரிக்காவில் கூண்டில் ஏற்றி உள்ளே தள்ளுகின்றோமென்றும் பணம் சேர்த்தார்கள். பின்பு வணங்காமண் புலூடாவைக் காட்டி பணம் சேர்த்தார்கள். இப்போ நாடு கடந்த தமீழீழ அரசை அமைப்பதாக புலூடா விடத் தொடங்கியுள்ளார்கள். தெரியாமல்த் தான் கேட்கிறேன் இவர்களின் இந்த சுத்துமாத்துகளை இனம் கண்டு, இவையொன்றும் நடைமுறைக்கு சரிவராதவையென்று சரியாகக் கணித்துக் கூறியவர்கள் புத்திஜீவிகளா?? அல்லது என்றும் மக்களை ஏமாற்றியே பிழைக்கலாமென்று என்று தொடர்ந்து ஆய்வுகள் நடத்தும் இவர்கள் புத்திஜீவிகளா??
DEMOCRACY
இந்தக் கட்டுரையில் உள்ள பல விஷயங்களை ஏற்றுக்கொள்ளலாம்!, புலன் பெயர்ந்த தமிழர்களை(இலங்கை)எண்ணி “கோ” வென்று அழுவதத் தவிர வேறு வழியில்லை!.அமெரிக்கா, சீனா, இந்தியா, ………. என்று “லார்ட் லபுகுதாஸ்” மாதிரி பேசாமல், ஒரு “ஜென்டில்மேன்?!” மாதிரி பேச வேண்டுமென்றால்!, என்னைப்பொறுத்த வரை, விடுதலைப்புலிகள் தீவிரமாக சண்டைப் போட்ட போது, “சிங்களவர்களை நான் சகோதரர்களாக நினைத்து” எழுதியிருதேன், ஆனால் இப்போது(தோல்வியடைந்தபோது) நான் அப்படி நினைக்கவில்லை. உதய சூரியன் சின்னத்தை தேர்ந்தெடுத்தது கலைஞர் கருணாநிதிதான்!, சூரிய ஒளி படுவதால்தான் மனிதத் தோலில், நிற வேறுபாடுகள் ஏற்படுகின்றன, அதிக சூரிய ஒளி, கருத்த நிறமுடைய மக்கள், கருணாநிதியின் “தியரி” சரி!, ஆனால் கருணாநிதியின் இரத்தத்தில் ஊறியிருப்பது பச்சோந்தித்தனம், நிற வேறுபாடுகளை கடப்பவர் அவர். கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதை விட, பொய்ப் பிரச்சாரங்கள் ஒழிக்கப்பட வேண்டும்…..
vadakkan aatham
கட்டுரையாளருக்கும் பின்னூட்டம் விடும் அதிகமான நண்பர்களுக்கும்
உங்களது விமர்சனங்களில் பெரும்பகுதியை நான் ஏற்றுக் கொண்டாலும் நானும் நீங்களும் கிட்டத்தட்ட முப்பது வருடஙகளாக புலிப்பினாமிகள், புலி வியாபாரிகள், புலிப்பயங்கரவாதிகள் இவர்களுக்கெதிராக கதைத்தோம், கதைத்துக் கொண்டே இருக்கிறோம். எங்களால் தமிழ் மக்களில் பெரும்பகுதியை (உங்கள் எங்கள் உறவினர்கள், நண்பர்கள், ஊரவர், ஏன் சொந்த சகோதரர்கள்) வென்றெடுக்க முடியவில்லை. ஏன்? எங்களுக்குள்ளேயே வினாவிக் கொள்வோம்.
இவர்களில் சிறுபகுதியினர்- வியாபாரிகள், பிரமுகர்கள் ஆவதற்காக நிற்பவர்கள், உங்களுக்கு எனன தோன்றுகிறதோ அவ்வளவு பட்டங்களையும் போட்டு கொள்ளுங்கள். பெரும் பகுதியினர் சாதாரண அப்பாவிகள். தமிழ் பேசும் சிறுபான்மையினரான அவர்களின் பிரச்சனைக்கு எம்மால் ஒரு நம்பிக்கையான தீர்வுக்குரிய வழியையோ அல்லது தலைமையையோ கொடுக்க முடியாததே பெரும்பான்மையான அப்பாவிகள் புலிக்கு ஆதரவு தெரிவிக்க காரணமாகும்.
அரசுடன் சேர்ந்தோ அல்லது வேறு முறையிலோ அவர்களின் அடிப்படைப் பிரச்சனைக்குரிய தீர்வு முறைகளை கொடுப்பதன் மூலம் அவர்களை எமது பக்கம் இழுப்பதே சாலச் சிறந்தது. இலங்கை வாழ் எல்லா இன மக்களின் முன்னேற்றத்திற்கும் வழி சமைக்கும். இப்பொழுதும் ரைற்றில் பிரச்சனையே தலைதூக்கி நிற்கிறது. மேலும் இலங்கை அரசின் தற்போதைய இராணுவ தந்திரோபாய முன்னெடுப்புக்களை உற்று நோக்கும் போது அவர்கள் எதிர்காலத்திலும் தமிழ் பேசும் மக்கள் ஆயுதப் போராட்டம் மேற்கொள்வார்கள் என்று அதீதமாக நம்புவிறார்கள் போலவே உள்ளது. இதன் மறுதலை புலிகளாலும், அரச படைகளாலும் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களின் புண்ணிற்கு அவர்கள் மருந்து தடவுவது போல தெரியவில்லை.
இங்கு பலர் விட்டுக் கொடுத்து வாழப் பழக வேண்டும் என எழுதுகிறார்கள். பொதுவாகவே பெரும்பான்மையினரே விட்டுக் கொடுக்க பழக வேண்டும். அந்த அடிப்படையில் புலிப்பினாமிகளால் அனுப்பட்ட வணங்கா மண் (தோற்ற புலிகள் அதை வணங்கும மண் எனவே போட்டிருக்க வேண்டும்) கப்பலை இலங்கை அரசு தாய் மனப்பான்மையுடன் ஏற்றிருக்க வேண்டும். அல்லது அவர்களின் கருத்திற்கு முரணாக இருப்பின் திருப்பி அனுப்பியவர்கள் அதை ஏன் இந்தியா சொல்லி திரும்ப ஏற்க வேண்டும்? இதில் இருந்து இரு பகுதியும் விட்டுக் கொடுப்பு சகிப்புத்தன்மை சகோதரத்துவம்….. போன்றவற்றை ஒரு போதும் பேணவில்லை என்றே தோன்றுகிறது.
தொடர்ந்து மக்கள் நலன் பேண உழைப்போம்!
வடக்கான் ஆதம்.
நண்பன்
// இங்கு பலர் விட்டுக் கொடுத்து வாழப் பழக வேண்டும் என எழுதுகிறார்கள். பொதுவாகவே பெரும்பான்மையினரே விட்டுக் கொடுக்க பழக வேண்டும். அந்த அடிப்படையில் புலிப்பினாமிகளால் அனுப்பட்ட வணங்கா மண் (தோற்ற புலிகள் அதை வணங்கும மண் எனவே போட்டிருக்க வேண்டும்) கப்பலை இலங்கை அரசு தாய் மனப்பான்மையுடன் ஏற்றிருக்க வேண்டும். அல்லது அவர்களின் கருத்திற்கு முரணாக இருப்பின் திருப்பி அனுப்பியவர்கள் அதை ஏன் இந்தியா சொல்லி திரும்ப ஏற்க வேண்டும்? இதில் இருந்து இரு பகுதியும் விட்டுக் கொடுப்பு சகிப்புத்தன்மை சகோதரத்துவம்….. போன்றவற்றை ஒரு போதும் பேணவில்லை என்றே தோன்றுகிறது.
தொடர்ந்து மக்கள் நலன் பேண உழைப்போம்!
வடக்கான் ஆதம்.//
விட்டுக் கொடுக்கும் இடமும் உண்டு. விட்டுக் கொடாத இடமும் உண்டு. இந்த மண் விழுந்த கப்பலை இலங்கை நேரடியாக ஏற்றிருந்தால் , புலத்தில் உள்ள அனைவரது வாயிலும் மீண்டும் மண் விழுந்திருக்கும். அதை ஆதமால் உணர முடியவில்லையா? மீண்டும் இதை வைத்தே பல கப்பல்கள் வாங்கிற அளவுக்கு கறந்திருப்பார்கள்.
உதவி செய்ய வேண்டியிருந்தால் எத்தனையோ உதவி நிறுவனங்கள் வழி ஈழத் தமிழர்கள் உதவி செய்யலாம். கடவுச் சீட்டைப் புதுப்பிக்கவும் , குழந்தைகளது பெயர்களை இலங்கையராக பதிவதற்கும் சிறீலங்கா தூதரகத்துக்குப் போக பலரால் முடிகிறது. அப்போது புலிகள் எலிகளாகவே போகின்றனர். அதே போல உதவிகளையும் தூதரகம் வழி அனுப்ப முடியாதா?
முடியும். ஆனால் , இந்தக் கப்பல் வன்னிக்கு போக வேண்டிய கப்பலே தவிர , கொழும்புக்கு போக வேண்டிய கப்பல் அல்ல. தவிரவும் அதில் சென்ற உதவிகள், புலிகளால் துரோகிகள் எனச் அவமானப்படுத்தப்பட்ட இராணுவத்தினரிடம் சரணடைந்த மக்களுக்கு இவர்கள் மனமுவந்து அனுப்பவேயில்லை. அன்று அந்த மக்கள் துரோகிகள். இன்று தலைவர்கள் சரணடைந்து செத்த பிறகு, அவர்கள் முகாமில் வாடும் தமது மக்களாம்? சிரிப்பதா? அழுவதா?
இப்போது புலிகளது ஊடகங்கள் மற்றும் இணையங்களில் வரும் கதைகள், இந்திய புலி ஆதரவாளர்களால் எழுதப்படும் அம்புலி மாமா கதைகள். தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும், காஷ்மீராகும் எனக் கனவு கண்ட பலர், தமிழகத்தில் அவை நடக்காததால் சாங் சூங் சீங் என கனவை விஸ்தரித்துள்ளனர். நல்ல காலம் சீனனுக்கு தமிழ் தெரியாது. இதை சிறுபிள்ளைகளுக்கும் , இலங்கை குறித்த அறிவற்ற மந்தைகளுக்கும் , இந்திய முட்டாள்களுக்கும் பைபிளாகலாம். என்னைப் பொறுத்தவரை பேப்பர் வெயிட்டுக்குப் போடக் கூட லாயக்கில்லாதவை.
மாயா
இதுதான் அந்த ஐபீசீ புலி ஆய்வு
“சீனாவின் முற்றுகையில் இந்தியா” புத்தகம் பற்றி:
முத்துக்குமார் நண்பர்கள் இயக்கத்தால் வெளியிடப்படும் முதல் ஆய்வு நூல் இது. இந்தியாவை அச்சுறுத்தும் அந்நிய உளவு நிறுவனங்கள் குறித்து தமிழில் இதுவரை இதுபோன்ற புத்தகங்கள் வந்தது இல்லை என்றே சொல்லலாம். பிரச்சினைகளைத் தெளிவாக விளக்கும் வரைபடங்கள் மற்றும் நிழற்படங்களுடன் தகவல்கள் முன்வைக்கப் பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் தனிச் சிறப்பு.
2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரையுள்ள கால கட்டத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டு எல்லையை சீன மற்றும் அதன் கூட்டு நாடுகளின் உளவு நிறுவனங்கள் எவ்வாறு கைப்பற்றியுள்ளன என்பதை சுமார் 321 ஆதாரங்களுடன் விளக்கும் 144 பக்க நூல் இது. இந்த சதிச் செயலை வெற்றிபெறச் செய்ய மஹிந்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு எவ்வாறு ஈடு பட்டது என்பதை இந்த நூல் தக்க ஆதாரங்களுடன் விளக்குகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய தேசிய கூடணி அரசு இந்த சதித் திட்டத்தைத் தவிர்க்கத் தவறியதற்கான காரணங்களையும் இந்த நூல் முன்வைக்கிறது.
இந்தியாவின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கும் இந்த சதிவலையை அழிக்க என்ன செய்யலாம் என்பதற்கான கருத்துக்களையும் இந்த நூல் முன் மொழிகிறது.
புத்தகத்தைப் பெறத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
சமூக விழிப்புணர்வு பதிப்பகம்,
புதிய எண் – 68/15, எல்டாம்ஸ் சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600 018
தொலைபேசி: 044-2435 4142
புத்தக விலை: ரூ.75 + தபால் செலவு
– முத்துக்குமார் நண்பர்கள் இயக்கம்
chandran.raja
சகோதரர்-ஆதாம்!
“மக்கள் நலம் பேண உழைப்போம்” என்ற ஒருகருத்தைத் தவிர வேறு ஒன்றையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்று சகாப்தற்கு மேலாக தமிழ் மக்களின் வாழ்வில் வக்கிரபுத்தியுடன் விளையாடிய புலிகளை சாதாரணமாக ஒதிக்கி வைத்துவிட்டு எந்தப்பிரச்சனையும் முழுமையாகப் பார்கமுடியாது. தமிழ்மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய தலைமைகள் அனைத்தையும் புலித்தலைமை தான் அழித்தொழித்தை நீங்கள் கண்டுகொள்ளாதது போல் விலத்திப் போகிறீர்கள். விட்டுக்கொடுப்பை பெரும்பான்மைதான் முதலில் நிறைவேற்ற வேண்டும் என்பது நீங்கள் எங்கு படித்தபாடம்? விட்டுக்கொடுப்புக்கே அர்த்தம் இல்லாமல் அல்லவா? செய்கிறீர்கள் நீங்கள்.
வணங்ககாமண்-கப்டன் அலி பூர்வீகம் தெரியாதவர் அல்ல தாங்கள். ஒரு அதிபரோ ஆசிரியரோ ஒருமாணவனை தண்டிக்கும் போது அந்த மாணவனின் வாழ்வை சீர்அழிப்பதற்காக நடந்துகொள்வதில்லை அவனை நல்லவழி ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதற்காகவே! வணங்கா மண்ணை வழிநடத்திய பிரமுகர்கள் எந்த சர்வதேசவிதிகளை கடைப்பிடித்தார்கள்? திறந்த வீட்டிற்குள் புகுந்து போகுற நடவடிக்கைகளில் அல்லவா ஈடுபட்டார்கள் அதுவே இந்த சமுத்திர அலைச்சல். இறுதியாக-தமிழ்மக்களுக்கு இவ்வளவுகால துன்பத்திற்கும் புலிகள் பெரும்பங்கு வகித்தார்கள் என்ற உண்மையைத் தாங்கள் ஏற்றுக்கொண்டால் நீங்கள் எதிர்பார்கிற சகிப்புதன்மை சகோதரத்துவம் வளர்வதற்கு வாய்ப்புண்டு. இல்லையேல் விரக்தியின் வெளிப்பாடே உங்கள் கருத்தும்.
vanthijathevan
ஆமாம் சந்திரன் ராஜா, ஐம்பத்தாறாம் ஆண்டிலும் புலிகள் இருந்தார்கள். புலிகளால் தான் அப்போது இனக்கலவரம் வந்தது. சிங்களவர்களின் சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுப்பு என்பவற்றிற்கு மற்றைய இனங்கள் பிச்சை வாங்க வேண்டும்.
palli.
தேவன் உங்கள் கருத்து கணிப்பு சரியானதாக பல்லிக்குபடவில்லை; புலியை மட்டுமே விமர்சிக்கவோ அல்லது கருத்து சொல்லவோ தேசம் என்ன பரபரப்பா? இன்று பாருங்கள் மக்கல் ஜக்ச்சன் பற்றி கூட விவாதிக்கிறோம்; கட்டுரையாளர்கள் தரும் விடயம் எதுவானாலும் தேசத்தில் இதுவரை விமர்சனத்தில் தப்பியதாக பல்லி கருதவில்லை; அதேபோல் புலி எமது இனத்தின் அனைத்து(இதுவரை)நிர்வாகத்தையும் சர்வாதிகாரமாகவும் அடங்கா தமிழனாயும் தானே தனக்கு பொறுப்பு கொடுத்து அதை கெடுத்து நிர்வகித்ததால் புலி பற்றி அதிக கட்டுரைகள் வந்தன; புலி எம்மீது செய்யும் ஆக்கிரமிப்புகழுக்கு நாம் புஸ்ஸையோ அல்லது பின்லாடனையோ விமர்சிப்பது நல்லாவா இருக்கும்; ஆக இறந்தகாலம் நிகழ்காலம் (இதுவரை) புலி எம்மீது சவாரி செய்ததால் அந்த கனமே எமக்கு சற்று அதிகமாக இருந்தது; ஆனால் அந்த சுமை இப்போது குறைந்ததால் சவாரி செய்ய நினைக்கும் சிலைரையும் திரைக்கு கொண்டு வருகிறோம்;
சரி பட்டம் ஜயா நிங்கள் கொடுக்காத பட்டமா? ஒரு அமைப்பின் தலைவன் கூட ஒரு பத்திரிகை பேட்டியில் ஒட்டுகுழு என்னும் சொல்பதத்தை பாவித்ததை சில இந்திய பத்திரிகைகள் அந்த தலைவரின் நாகரிகதன்மையை கிண்டல் அடித்ததை தங்கள் கவனிக்கவில்லையா,? நீங்கள் அம்மான் என்பதை நாம் மாமா என சொல்லுகிறோம்; தரமான கட்டுரையை எழுதி தேசத்தில் விடுங்கள் உங்கள் ஆசை நிவர்த்தியாகும்; அதைவிட்டு முடிஉள்ளவன் சீப்பு தேடலாம் தப்பே இல்லை; அதுக்காக சீப்பு இருக்கிறது என்பதுக்காக முடியை தேடலாமா???
yoganathan
ஜபிசி – பிரிஎப் போன்ற அமைப்புக்கள் தமிழீழம் தமத சுய நல பணம் சேர்க்கும் தொழிலாகவே பார்த்தும் செயற்ப்பட்டும் வந்துள்ளனர். கடந்தகாலங்களில் புலிகளக்கு ஒத்தூதுலை விட இவர்களால் ஏதாவது பிரயோசனமாக புலிகளை விமர்சித்து அறிவுரைகள் கூறி யிருந்தார்களா? ஏன் இப்படி செய்ய விலடலை காரணம் இவர்களுக்கு விமர்சனத்தின் பக்குவம் அருமை தெரியாதவர்கள் தமது பணச் சேர்ப்புக்கு ஆபத்து வந்துவிடும் என்பதும்.
இன்றுவரையில் புலிகளுக்கு ஒத்தூதி 20000 பேர்களை கொலை செய்’ததில் ஜபிசி -பிரிஎப்- தீபம் முக்கிய பங்காற்றியுள்ளது அதைவிட புலிகளின் சொத்துக்களை சூறைடிக்கொண்டிருக்கும் தனி நபர்களை இன்று வரையில் இந்த ஊடகங்கள் விமர்சிக்கவில்லை
இலர்கள் வரலாற்றில் பாரிய தவறுகளை விட்டுள்ளனர். இது வரலாற்றுத் தவறாகும். வரலாறு இவர்களை மன்னிக்காது.
பிரிஎப் எல்லா தமிழ் அமைப்புக்களும் தம்மிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும் தாமே ஏகபோக பிரதிநிதிகள் என்ற தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதும் – பிரான்ஸ்ல் புலிகளின் அமைப்புக்கள் பற்றிய பல வகையான கதைகள் வரத் தொடங்கியுள்ளது
கனடாவில் 3000 குடும்பங்கள் புலிகளின் வரமானத்தில் குடும்பம் நடத்துபவர்கள் இன்று மிக முக்கியதான சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளதாக கதைகள் வர ஆரம்பித்துள்ளதது.
நண்பன்
புலிகளின் ஊடகங்கள் குறித்து கவலைப்படுவோர் , நிச்சயம் புலிகளின் தமிழ் மற்றும் நாட்டிய பாடசாலைகள் குறித்து நிச்சயம் கவனம் எடுக்க வேண்டும். இது வாழ்ந்து முடிந்தவர்கள் குறித்த கரிசனை அல்ல, நாளைய இளம்பராயத்தின் மேல் உள்ள கரிசனையாகும்.
புலம்பெயர் நாடுகளில் புலிகளால் காசுக்கு காசும், உணர்வோடு புலி பிரசாரமும் செய்து இளம் மொட்டுக்களின் மனங்களில் இனவாத நஞ்சுகளை ஊட்டும் , கல்வியை விற்கும் வியாபார தளங்கள் குறித்து கற்றவர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இணையத்தில் என்னதான் எழுதினாலும் புலி பயங்கரவாதம் புலம் பெயர் பள்ளியிலிருந்து உருவாகும் அபாயம் ஒன்று உண்டு. கடந்த காலங்களில் தெருவுக்கு புலிக் கொடியோடு அழைத்துச் சென்ற குழந்தைகளிடம் , இந்த மாமனிதர்கள் ஆயுதத்தை அல்லது குண்டு ஒன்றைக் கொடுத்து எமக்கு 20 நாடுகள் இணைந்து எமனாகின. அந் நாடுகளுக்கு நாம் எமனாக வேண்டும் என எதையாவது செய்வார்கள். இங்கே அனைத்தும் கல்வியோடு நின்று விடாது. நாளைய பயங்கரவாத முனைப்புகளுக்காக இந்த கல்வி நிலையங்கள் கூட , வழி செய்யும்.
புலத்தில் பிறந்த குழந்தைகள் பாகிஸ்தானில் எப்படி ஆயுத பயிற்சி பெற்று இஸ்லாமியருக்கு எதிரான நாடுகளில் தாக்குதல்களை நடத்தினரோ, அதே போன்ற ஒரு நிலை நம் குழந்தைகளுக்கு புலிகள் செய்யாதிருப்பார்கள் என்று மெளனமாக இருக்க முடியாது. உதாரணத்துக்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து வன்னி போர் முனைகளில் சரணடைந்த சில இளையோர் வெளிநாடுகளின் குடியுரிமையுள்ள தமிழ் இளையோர்கள் என்பதை மறத்தல் ஆகாது. சில பெற்றோர்கள் தெரிந்தே அவர்களை அனுப்பியிருக்கின்றனர். இதற்கு பெற்றோர்களும் காரணம்தான். அவர்களுக்கும் இது தண்டனைதான்.
கடத்தல் மாபியா ஒருவனை தலைவனாகக் கொண்டு மீண்டும் துளிர் விட்டு ஜனநாயகம் பேச வரும் புலிகள் , இளையோர் மனதிலும் விஷம் விதைக்கார் என நம்ப முடியாது. சுவிஸில் சிறு குழந்தைகள் கைகளில் துப்பாக்கியோடு பாடல்பாடியது குறித்து சுவிஸ் பத்திரிகைகள் அதை விமர்சித்து கட்டுரை எழுதியிருந்தன. நாட்டிய மயில் , இசைக் குயில்…….என நிகழ்வுகளும் புலிகளுக்குள் இளையோரை இழுத்துக் கொண்டன.
தவிரவும் தமிழ் மொழி கற்கவும் , நாட்டியம் மற்றும் இசை கற்கவும் குழந்தைகளுக்கு புலி நிறுவனங்களை விட்டால் வேறு கதியில்லை என பலர் நினைக்கிறார்கள். இவை தொடருமா? தொடராதா என்பது பலரது கவலை? அது குறித்து பேசத் தலைப்பட்டுள்ளனர். அத்தோடு புலிகள் தொடர்ந்து பரீட்சைகளையும் நடத்தி சான்றிதழ்களும் வழங்கி வந்தனர். இருந்தாலும் இந்த பள்ளி பொறுப்பாளர்கள் பலர் கைநாட்டு போடுவோர் என்பது பலரும் அறிந்த பெற்றோர்கள் கண்டு கொள்ளாத உண்மை. பள்ளிக்கே போகாதவன் பள்ளி நடத்தும் கொடுமை புலி ஆட்சியில்தான் உண்டு.கடிதம் எழுதத் தெரியாதவர்கள் டீச்சர் மற்றும் மாஸ்டர். மாற்றுக் கருத்தாளர்களது அல்லது திறமையான பள்ளிகள் விரல் விட்டு எண்ணக் கூடியவைகளே.
வன்னியை மீட்க ஒன்றுமறியா பச்சைக் குழந்தைகள் கையில் புலிக் கொடியையும் , பிரபாகரனின் படத்தையும் கொடுத்து தெருவில் நிறுத்திய முட்டாள் பெற்றோர் புலத்தின் மரமண்டைகள்தான். தற்போது தமிழகத்தின் மேடையில் நாளைக்கு நாங்களும் போராளிகளாவோம் என குழந்தைகளை பேச வைக்கும் கொடுமையை நெடுமாறன் , வைகோ , ராமதாஸ் போன்றவர்கள் கைதட்டி வர வேற்கிறார்கள். தமிழக காச்சல் பன்றிக் காச்சல் போல் புலத்து குழந்தைகளுக்கு தொற்றாமல் தடுப்பு ஊசி போட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் ஏதாவது செய்யுங்கள்.
சிந்திக்கும் ஜனங்களே சிந்தியுங்கள்…… ஊடகங்கள் மட்டுமல்ல , இதுவும் புலி வாலைத் தூக்கக் கூடிய இடம்தான்.
பார்த்திபன்
நண்பன்,
தமிழ்க் கல்வி மற்றும் கலை வகுப்புகள் பற்றிய தங்கள் கருத்துடன் நான் முழுவதுமாக உடன்படுகின்றேன். முன்பு தகுதியான பலரால் நடாத்தப்பட்ட கலை வகுப்புகளை, புலிப்பினாமிகள் கட்டாயப்படுத்தி கையகப்படுத்தினார்கள். அதன் மூலம் விச விதைகளை அப்பிள்ளைகளின் நெஞ்சிலே விதைத்தது தான் மிச்சம். மீண்டும் தகுதியானவர்கள் தமிழ் மற்றும் கலைவகுப்புகளை நடாத்த முன்வந்து உண்மையான மொழிப்பற்றையும் கலையுணர்வையும் வளர்க்க முன்வந்தால் பலரும் உதவ முன் வருவார்கள். எனவே உடனடியாக இவ்விடயத்தில் ஆவன செய்ய வேண்டும்.