யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைகளுக்காக ஏழு அரசியல் கட்சிகளும் ஐந்து சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இதேவேளை யாழ். மாநகர சபைக்கான வேட்பு மனுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினதும், சுயேச்சைக் குழுவொன்றினதும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வவுனியா ந. சபைக்கான வேட்பு மனுவில் தமிழர் விடுதலைக் கூட்டணியினது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க யாழ். மாநகர சபைத் தேர்தலுக்காக நான்கு அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
சுயேட்சைக் குழுக்கள் இரண்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதுடன் மற்றுமொரு சுயேச்சைக் குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளராக அதன் தலைவர் வீ. ஆனந்தசங்கரி வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளதுடன் சுயேட்சைக் குழு இலக்கம் ஒன்றிற்கு கப்பல் சின்னமும் இரண்டாம் குழுவிற்குப் பூட்டுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாநகர சபைக்கு 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sooriasegaram, Mylvaganam
no elections for
Chavakachcheri Urban Council
Point Pedro Urban Council
Valvettithurai Urban Council
please someone explain me
பார்த்திபன்
சூரியசேகரம்,
உங்க கேள்வியை விட மிகமுக்கியமான கேள்வியொன்று என்னிடமுண்டு. அதாவது கிழக்கு மாகாணத்தில் முன்பு இதே மாநகராட்சித் தேர்தல்கள் நடந்தபோது, இதே கூத்தமைப்பினர் தேர்தலைப் புறக்கணித்தனர். காரணம் கேட்டபோது வடக்குக் கிழக்கு இணைப்பில்லாமல் நாம் தேர்தலில் பங்கு பற்ற மாட்டோமென்று அறிக்கை விட்டனர். இப்ப தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கினமெண்டால், வடக்கு கிழக்கை அரசாங்கம் திரும்ப இணைத்து விட்டனரா?? அட அரசாங்கம் கூட இதுபற்றி மூச்சு விடவில்லையே??
Vannikkumaran
தமிழரின் ஜனநாயக ரீதியாக 1977 ல் அதன் கொள்கைக்காக தமிழர்களால் அங்கீகரிக்கப் பட்ட கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியை
அதன் கொள்கைகளை விட்டு தாங்கள் கொள்ளையடிப்பதற்காக தமிழரை கொலை செய்யத் துணைபோகும் செயல்களில் ஈடுபடும் ஆனந்த சங்கரி போன்றவர்களை அக்கட்சியில் இருந்து தடை செய்ய வேண்டும். அல்லது அது சாத்தியமாகதவிடத்து அக்கட்சியை தடைசெய்ய வழி செய்ய வேண்டும். காரணம் ஆனந்த சங்கரி ஒரு சமூகத்தின் விடிவிற்காக ஏற்படுத்தப்பட்ட கட்சியை பயன்படுத்தி தன் குடும்ப லாபத்துக்காக தன்இனத்தையே அழிக்கும் செயல்களில் ஈடுபட்டது போர்க் குற்றத்தை விட மோசமானதாகும். இந்த கால கட்டத்தில் தமிழர்கள் அனைவரும் இதை கருத்திலெடுக்க வேண்டும்
நன்றி
வன்னிக்குமரன்