சொகுசு வாகனங்கள் மற்றும் அரைச்சொகுசு வாகனங்களுக்கான வரி அறவீட்டை பிரதேச செயலகங்கள் ஊடாக அறவிடுவது குறித்து ஆராய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட வரி தனியார் காப்புறுதி நிறுவனங்களாலேயே அறவிடப்பட்டு வந்தது. இதனை வருடாந்த வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது பிரதேச செயலகங்கள் மூலம் அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆராய குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் டளஸ் அலகப்பெரும இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.