இருபது வருடங்களில் அழித்ததை இரு வருடங்களில் கட்டியெழுப்புவோம் – அமைச்சர் டக்ளஸ்

21deva.jpgகடந்த இருபது வருடங்களில் அழிவடைந்த எமது பிரதேசத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து இரு வருடங்களில் கட்டியெழுப்புவோமென யாழ். வர்த்தகர்களுடன் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் புதன் மாலை யாழ். வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக சமூகப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பொது சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏறக்குறைய ஐநூறிற்கும் மேற்பட்ட யாழ். வர்த்தகர்கள் பங்குகொண்ட இச்சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘நாங்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆள்வதற்காக அல்ல, மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும் வர்த்தகர்களாகிய நீங்கள் சுதந்திர மாகவும் நிம்மதியாகவும் தொழில் செய்வதற்குமே ஆகும்.

இதன் அடிப்படையிலேயே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தீர்மானத்தை நாம் ஏற்றிருக்கின்றோம். மகிழ்ச்சி தரும் மாற்றங்களையே நாம் விரும்புகின்றோம்.

இதில் ஏமாற்றங்கள் நிகழுமாயின் அதற்கான அனைத்து பொறுப்பையும் நாமே ஏற்றுக்கொண்டு எமது தீர்மானங்களைத் திருத்தி எழுதவும் நாம் என்றும் தயாராக இருப்போம். ஆனாலும், நாம் எடுத்திருக்கும் இந்தத் தீர்மானம் ஒரு போதும் தோற்றுப் போகாது’ என்றும் தெரிவித்தார்.

ஈ. பி. டி. பி. யினராகிய நாம் தமிழ் பேசும் மக்களுக்கான ஒரேயொரு தனித்துவமான அரசியல் கட்சி என்ற ரீதியில் எமது தனித்துவங்களோடு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போடு தோழமை கட்சியாக இணைந்து எமது மக்களின் இலட்சியக் கனவுகளை விரைவாகவும், இலகுவாகவும் எட்டுவதற்காக இந்தத் தீர்மானத்தை ஒரு பரீட்சார்த்த முயற்சியாக எடுத்திருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து யாழ். வர்த்தகர்களினால் கேட்கப்பட்ட கேள்விகள், சந்தேகங்கள் அனைத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரிவாக விளக்கமளித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 Comments

  • R.M.V
    R.M.V

    நல்ல முடிவு

    Reply
  • தலையாட்டி
    தலையாட்டி

    விழுந்தும் மீசையில மண் ஒட்டேல்லை?

    கட்சிச் சின்னத்தில் போட்டியிடக் கூடத் திராணியில்லை.

    Reply
  • தலையாட்டி
    தலையாட்டி

    ஆட்டிவித்தால் யார் ஒருவர் ஆடாதவர்தான் கண்ணா?
    முதலமைச்சர் பதவியே முக்கியமென எண்ணும் காலமொன்று எட்டாம்

    Reply
  • accu
    accu

    வாழ்த்துக்கள் தோழர்! நாய்கள் குரைக்கலாம் ஆனால் ஒட்டகங்கள் தமது பாதையில் முன்னேறும்.

    Reply
  • thaya
    thaya

    புலிகள் தம்மை பாதுகாக்கவே திராணியில்லை. மக்களை பாதுகாக்கவும் திராணியில்லை என்ற அளவிற்கு தமிழ் மக்களுக்கு துண்டு நிலம் கூட விட்டு வைக்காமல் போய்ச்சேர்ததை விட டக்ளஸ் மேல். ஆடுகிற மாட்டை ஆடித்தான் கறக்க வேணும் என்றால் அதுதான் வழி!
    சும்மா இருந்து கொண்டு புலிப்புராணம் பாடுவதை கைவிட்டு நியாமன அரசியல் விமர்சனங்களுக்கு முன்வாருங்கள். ஈ.பி.டி.பியையும் நேர்மையான விமர்சனப் பார்வையோடு விமர்சியுங்கள். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று எவரும் இல்லை. புலிகள் செய்த தூரோகத்தனங்களால்தான் சக இயக்கங்கள் அரசாங்கத்தோடு கைகுலுக்க வேண்டி வந்தது. தமிழர்களின் அனைத்து பலத்தையும் தட்டிப்பறித்து தாம் மட்டும் வைத்திருந்துவிட்டு அதை கரை முள்ளிவாய்க்காலில் கொட்டிச்சரித்த காரணத்தால்தான் இன்று இந்த நிலை.

    மகிந்த மனம் விரும்பி கொடுத்தால் மட்டும் சரி. இல்லை என்றால் எதுவும் இல்லை.
    அரசாங்கத்துடன் பகைத்து சிலு சிலப்பு அரசியல் நடத்தி எதையும் சாதிக்க முடியாது.

    Reply
  • மாயா
    மாயா

    //தலையாட்டி on June 26, 2009 9:19 am விழுந்தும் மீசையில மண் ஒட்டேல்லை?
    கட்சிச் சின்னத்தில் போட்டியிடக் கூடத் திராணியில்லை.//

    தலையாட்டித் தம் மக்களுக்கு சேவை செய்வது உத்தமம்.
    தலையையே கோடாலிக்கு கொத்த வைப்பது முட்டாள்தனம்.

    Reply
  • palli.
    palli.

    //நாய்கள் குரைக்கலாம் //
    வீட்டுநாய்கள் குலைக்கும் போது குலைத்து விட்டு போகட்டும் என தூங்கலாமா?நாய்கள் குலைப்பது கூட ஒரு தவறுதல் நடபதை தடுக்கும்
    அறிகுறிதான்; ஜந்து அறிவு நாய்களே தவறை தடுக்க குலைக்கும் போது மனிதராகிய நாம் தவறுகளை சுட்டி காட்டினால் எட்டி மிதிக்கலாமா அக்கு;

    Reply
  • thevi
    thevi

    எது தவறென்று சொல்லுகிறீர்கள்? தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு டக்ளஸா காரணம்? தமிழ் மக்களை நம்ப வைத்து துரோகம் செய்து விட்டு போனது யார்? இனி என்ன செய்ய சொல்லுகிறீர்கள்? இன்னொரு ஆயுதப் போராட்டமா நீங்கள் கோருவது?

    Reply
  • நண்பன்
    நண்பன்

    ஒரு வணங்காமண்ணை வைத்துக் கொண்டு படுற பாடு எல்லோரையும் சந்தி சிரிக்க வைக்குது. அதுக்குள்ள வியாக்கியானம் வேற? அதை மகிந்தவின் காலை பிடிக்காது போனால் கடல்லதான் கொட்ட வேணும். ரோசமா கதைக்கிறவை அதைத்தான் செய்ய வேணும்? முடிஞ்சா மகிந்த அரசாங்கம் வழி செய்யாம கொண்டு போய் வன்னி மக்களுக்கு கொடுங்கோ….பார்ப்பம்?

    Reply
  • accu
    accu

    //ஜந்து அறிவு நாய்களே தவறை தடுக்க குலைக்கும் போது மனிதராகிய நாம் தவறுகளை சுட்டி காட்டினால் எட்டி மிதிக்கலாமா அக்கு;// பல்லி. நிச்சயமான உண்மை. ஆனால் வேண்டாப் பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்பது போல் எழுந்தமானதுக்கு எதையுமே ஆய்ந்தாராயாமல் விழுந்த பாட்டுக்கு குறி சுடுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை. தோழரே கூறியிருந்தார் பரீட்சார்த்தமாக சில முடிவுகள் மக்களுக்கு நன்மை பயக்குமெனில் எடுக்கலாம் என்று. //மகிழ்ச்சி தரும் மாற்றங்களையே நாம் விரும்புகின்றோம்.
    இதில் ஏமாற்றங்கள் நிகழுமாயின் அதற்கான அனைத்து பொறுப்பையும் நாமே ஏற்றுக்கொண்டு எமது தீர்மானங்களைத் திருத்தி எழுதவும் நாம் என்றும் தயாராக இருப்போம். ஆனாலும், நாம் எடுத்திருக்கும் இந்தத் தீர்மானம் ஒரு போதும் தோற்றுப் போகாது’// தோழர். மூன்று தசாப்தமாக வீரம் பேசி எல்லாவற்றையும் அழித்தோம் இழந்தோம். டக்கிளஸ் போன்றவர்களுக்கு குறுகிய அவகாசமாவது கொடுக்க வேண்டாமா? எம் மக்களின் இன்றைய நிலையில் சில விட்டுக்கொடுப்புகள் கூட தவறாகாது. இல்லையா பல்லி?

    Reply
  • palli.
    palli.

    சங்கரியர் ஏன் தனது சின்னத்தில் போட்டி இடுகிறார்? தோழர் ஏன் இரவல் சின்னத்தில் போட்டி இடுகிறார்? இது இரண்டுக்கும் மாயாவும் அக்குவும் விடை காணுங்கள் பல்லி என்ன சொல்கிறதென புரியும்; தோழர் எனது நீண்ட நாள் நண்பர் ஆனால் அதுக்காக இன்னொரு மெ த கு ஆக அவரை அனுமதிக்க முடியாது; எதிரியை விமர்சிப்பதை விட நண்பனைதான் அதிகம் விமர்சிக்க வேண்டும்; காரணம் எதிரி எப்படி தவறு செய்கிறான் என்பது எமக்கு தெரியாது ஆனால் நண்பன் செய்யும் தவறு எமக்கு தெரிய வாய்ப்பு அதிகம்; அதை அனுமதித்தால் அவரும் எமக்கு எதிரியாகி விடுவார், இதைதான் நீர் வருமுன் அனை கட்டுவது என்பதா???

    Reply
  • thaya
    thaya

    தோழருக்கு நண்பராக இருக்கும் நீங்கள் தொழருடன் கதைக்கும் போது இந்த விமர்சனங்களை வைத்திருக்கலாமே. அல்லது நான்தான் பல்லி என்ற பெயரில் தேசம் நெற்றில் எழுதுவதாக சொல்லியிருக்லாமே. அரசியலில் தோழர் வெளிப்படையாக செயற்படுவது ஆராக்கியமான விடயம். அவர் இரட்டை வேடம் போடவில்லை.

    Reply
  • Kumaran
    Kumaran

    Many Tamils believed without solidarity with Singhalese and Muslims, we cannot achieve anything but LTTE destroyed everything through their weapons and dirty propaganda. Right now Tamils in Srilanka need peace, reconciliation; development and Revert back to their normal life, which has been destroyed by LTTE for more than twenty years. The only way we can achieve this is by working together with Tamils, Singhalese and Muslims. My request to Tamil Diaspora is that LTTE to keep the mouth shut or trying access to all other media and obtain an unbiased view of the problem.

    Reply
  • மாயா
    மாயா

    பல்லிக்கு விளங்காதது மாயாவுக்கு விளங்குது. தோழரை எனக்கும் தெரியும். ஆனால் உங்களைப் போல நெருக்கமில்லை……………ஆனால் டக்ளஸ் என்ற மனிதன் சில நல்லதுகள் நாட்டில் நடக்க தலை வணங்கி போறார். அதில இதுவும் ஒன்று.

    மகிந்தவோட ஆசை என்ன தெரியுமா? இனவாதக் கட்சிகள் என்று இனி இலங்கையில் எதுவுமே இருக்கக் கூடாது என்பது. அடுத்தது தமது கட்சியும் ஐதேகட்சி போல ஒரு இனவாதமற்ற பெயர் கொண்ட கட்சியாக மட்டுமல்ல , இனவாதமேயற்ற கட்சியாக மாற வேணும் என்பது. அதுக்கான நகர்வுதான் மகிந்த கட்சியின் வெற்றிலை சமாச்சாரம். தமிழர்களில இனவாதம் இல்லாததை காட்டி சிங்கள இனவாத கட்சிகளை மகிந்தவால் இல்லாமல் பண்ண முடியும். தமிழ் இனவாத பெயர்க் கட்சிகளை வைத்துக் கொண்டு சிங்கள இனவாதிகளை அடக்க மகிந்தவுக்கு சற்று சிரமம். அவர்கள், எங்களுக்கு சொல்ல முன்ன அவர்களுக்கு சொல் என்பார்கள்?

    எல்லாரும் கட்சியும் தொடங்கி கொடியும் தூக்கலாம். ஆனால் நிலைத்து ஏதாவது செய்ய வேணுமே? ஐரோப்பாவோடு சேர மாட்டம் என்று பண பலம் கொண்ட சுவிஸும் முண்டு பிடிச்சு , கடைசியில ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது.

    இந்தியாவை எதிர்த்த புலிகளுக்கு என்ன நடந்தது? உலகத்துக்கு பாடம் படிப்பிக்க முயன்ற புலிகளுக்கு என்ன நடந்தது? உலகம் தெரியாத மகிந்தவை கொண்டு வந்த புலிகளுக்கு என்ன நடந்தது? குழியென்றா மெதுவாப் போக வேணும் , மலையென்றா சுத்தி போகவேணும் , அரசியல் என்றாலும் குடும்பம் என்றாலும் அனுசரிச்சுப் போக வேண்டும்.

    மலையை நகர்த்த விரும்புகிறவன் முதலில் கற்களை நகர்த்த பழகிக் கொள்ள வேண்டும்.

    Reply
  • msri
    msri

    தமிழ்மக்கள் பிரச்சினை என்பது> மகிநதாவிற்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பதும்>தண்டவாளம் போட நினைப்பதும்! துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு புல்லு வெட்டுறதும் அல்ல! இவையெல்லாம் ஓர் மாநகரசபையுpன் ஆணையாளரே செய்வார்! செய்தும்உள்ளார்கள்! டக்கிளசு நெடுக 13-வது வாய்ப்பாடே பாடமாக்கிக் கொண்டிருகின்றார்! இதில் வடகிழக்கு (தமிழ் மக்களிண் பாரம்பரிய பிரதேசம்) பிரிக்கப்பட்டு அதன்பிரதான சாரம் இல்லாதாக்கப் பட்டுள்ளது! 13-வது திருத்தத்தை முன்புள்ளதுபோல் (தோழர்+தோழுர் மகிந்தாவோடு கதைத்து பரீட்சாத்தமாகவேனும்) நடைமுறைப்படுத்தட்டும்! அதனபின் தோழரே தமிழ்மக்களின் ஏக்ப்பிரதிநிதி! செய்வாரா? நடக்குமா?

    Reply
  • santhanam
    santhanam

    //சங்கரியர் ஏன் தனது சின்னத்தில் போட்டி இடுகிறார்? தோழர் ஏன் இரவல் சின்னத்தில் // ஆயுதம் ஏந்திய அனைத்து தரப்பினரும் தமது இயக்கபெயரில் போட்டியிடமுடியாது என அரசதரப்பும் இந்தியாவும் வலியுறுத்தியுள்ளது அதற்கமைய தோழர் மகிந்தாவிடம்சரண்டர். அதன் பிற்பாடுதான் ஆனந்தசங்கரியார் சித்தர் சிறிதரன் இனைந்து போட்டியிடுகிறார்கள் ஒரு விடயத்தை விளங்கிகொள்ளுங்கள் ஆயுதம்எடுத்த அனைவரும் அழிக்கபட்டு 25வருடங்கள் பின்தள்ளபடுகிறார்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    //ஆயுதம்எடுத்த அனைவரும் அழிக்கபட்டு 25வருடங்கள் பின்தள்ளபடுகிறார்கள்.- santhanam //
    இன்னம் கொஞ்ச காலம் இருந்திருந்தால் குவேனி காலத்துக்கு தள்ளியிருப்பார்கள்.

    Reply
  • palli.
    palli.

    //ஆயுதம் ஏந்திய அனைத்து தரப்பினரும் தமது இயக்கபெயரில் போட்டியிடமுடியாது//
    அப்படியாயின் புளொட் நங்கூர சின்னத்தில் போட்டியிடுகிறதே;அது ஆயுதம் ஏந்தாத அமைப்பா.? அல்லது அதையும் மகிந்தாதான் மலிவு விலையில் வேண்டி கொடுதாரா? ஆடதெரியத அம்பலம் மேடை ஆடுகுது என அஙலாய்த்தானாம்:

    Reply