மறைமுக நோக்கங்களற்ற வன்னி மக்களுக்கான போராட்டங்கள் அவசியம்! த ஜெயபாலன்

Veddaiyadu Vilayaduஇன்று (யூன் 24 2009) மாலை நான்கு மணி முதல் மாலை ஆறு மணிவரை லண்டனில் உள்ள கொமன்வெல்த் அலுவலகத்திற்கு முன்பாக வன்னியில் உள்ள இடம்பெயர்வு முகாம்களை உடனடியாக மூடி மக்களை மீளக் குடியேற்றும்படி கோரி போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இலங்கைக்கு வழங்கப்படும் சர்வதே நிதியுதவிகளுக்கு என்ன நடக்கின்றது என்றும் இப்போராட்டம் கேள்வி எழுப்பி உள்ளது. ரமிழ் சொலிடாரிற்றி என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டமே புலிகளின் அரசியல் நலன்களுக்கு வெளியே வன்னி மக்களின் நலனில் அக்கறையுடன் நடத்தப்படுகின்ற போராட்டமாகும். ஸ்ரொப் தி ஸ்லோட்டர் ஒப் ரமில்ஸ் என்ற போராட்டத்தை முன்னெடுத்தவர்களே தற்போது முகாமில் உள்ள மக்களை வெளியேற்றும்படி கோரும் இப்போராட்டத்தை ரமிழ் சொலிடாரிற்றி என்பதன் கீழ் முன்னெடுக்கின்றனர். இப்போராட்டங்களில் மட்டுமே தமிழரல்லாத பிற சமூகங்களும் இணைந்து தமிழ் மக்களுக்கான ஆதரவினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வகையான போராட்டம் பிராஸ்ஸில் உள்ள இடதுசாரி அமைப்புகளின் கூட்டான சமூகப் பாதுகாப்பு அமைப்பினால் Comité de Défense Social முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யூன் 20ல் சர்வதேச அகதிகள் தினம். கடந்த ஆண்டு முடிவு வரை 42 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டு உள்ளதாக யுஎன்எச்சிஆர் குறிப்பிடுகின்றது. இவர்களில் 26 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த நாடுகளினுள்ளேயே தமது வாழ்விடங்களில் இருந்து வேரறுக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 80 வீதமானவர்கள் வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளிலேயே வாழ்கின்றனர். ஏனையவர்கள் அகதிகளாகவும் அரசியல் தஞ்சம் கோரியும் வேறு நாடுகளில் வாழ்கின்றனரர். 2008 முடிவில் 504 800 பேர் இடம்பெயர்க்கப்பட்டு வாழ்ந்தனர். இவர்களில் வன்னி மக்கள் 300 000 பேர்வரை தற்போது வடக்கு கிழக்கில் உள்ள 20 முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் 20 ஆண்டுகளுக்கு முன் 1990 ஒக்ரோபர் 20ல் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் இருந்தும் ஏனைய வடக்கு மாவட்டங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட் முஸ்லீம் மக்கள் இன்னமும் புத்தளத்திலும் கிழக்கிலும் வாழ்கின்றனர்.

மே 18ல் பிரபாகரனின் மரணத்துடன் முடிவுக்கு வந்த இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் மிகப்பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியது. இலங்கை அரசு சர்வதேச யுத்த விதிகளை மீறி தனது சொந்த மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தும் அந்த மக்கள் செறிந்திருந்த பகுதிகள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதை சர்வதேச உரிமை அமைப்புகள் அனைத்துமே சுட்டிக்காட்டி உள்ளன. சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் ஊடகங்கள் எவற்றையும் அனுமதிக்காமல் சாட்சியமற்ற யுத்தத்தை மனிதப்படுகொலைகளை நிகழ்தியதாக அவை சரியாகவே சுட்டிக்காட்டி உள்ளன.

அதே சமயம் தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்களைப் பாதுகாப்பதற்காக மக்களை மனிதக் கேடயங்களாக்கி மக்கள் மத்தியில் இருந்தே தாக்குதலை நடத்தி மனித அவலம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்துள்ளனர். இதனை முழுமையாக அறிந்திருந்த பிரிஎப் ரிவைஓ மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த புலி ஆதரவு அமைப்புக்கள் வன்னி மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கும்படி கோராமல் வன்னி மக்களும் புலிகளும் ஒன்று, மக்கள் சுயவிருப்பிலேயே யுத்தப் பகுதிக்குள் இருக்கின்றனர் என பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டனர்.

20 000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு பிரிஎப் உம் பொறுப்புடையது என தீபம் தொலைக்காட்சியில் யூன் 19ல் இடம்பெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் ‘தேசம்நெற்’ சார்பிலும் ஏனைய நேயர்கள் சிலரும் கேள்வி எழுப்பிய போது பிரிஎப் சார்பில் கலந்துகொண்ட பத்மநாதன் விடுதலைப் ‘புலிகள் யார்? அவர்களும் எம்மவர்கள்தானே. அவர்களை விட்டுவிட்டு எப்படி மக்களை வெளியேறும்படி கேட்க முடியும்.’ என்று பதிலளித்தார். விடுதலைப் புலிகளுக்கு அந்த மக்களை கேடயங்களாக வைத்திருக்க பிரிஎப் உம் உடந்தையாக இருந்ததை அப்பதில் தெளிவாக்கி உள்ளது. அதே நிகழ்ச்சியில் பிரிஎப் போன்ற புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் வழங்கிய மிகைப்படுத்திய பொய்யான தகவல்களே இவ்வளவு மோசமான அழிவுக்கு இட்டுச்சென்றது அதற்கு பிரிஎப் வன்னி மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் போன்ற கேள்விகளுக்கு பத்மநாதனிடம் பதில் இருக்கவில்லை.

நடந்து முடிந்த மனித உரிமை மீறல்களுக்கும் படுகொலைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் சம பொறுப்புடையவர்கள் என்பது பரவலாக அனைத்து மனிதாபிமான மற்றும் உரிமை அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அப்படியான நிலையில் சிங்கங் கொடியையும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் படத்தையும் கொண்டுவந்து மனித உரிமை பற்றி பேசுவது எவ்வளவு கேலியானதோ அதே போல் புலிக்கொடியையும் அதன் தலைவர் பிரபாகரனது படத்தையும் கொண்டு வந்து மனித உரிமைப் போராட்டம் செய்வதும் கேலிக்குரியதே. வன்னி மக்களின் இரத்தத்தில் தோய்ந்த இவை எப்போதும் மனிதஉரிமைப் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாகவே அமையும்.

அந்த வகையில் வன்னி மக்களின் இரத்தக் கறைபடியாத ரமிழ் சொலிடாரிற்ரி போன்ற அமைப்புகளின் போராட்டங்களே மனித உரிமையை வென்றெடுக்க வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்காக குரல் எழுப்ப தகமையுடையன. இப்போராட்டங்களில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவினதாக இல்லாவிட்டாலும் அவர்களுடைய போராட்டத்தில் உள்ள நியாயம் கௌரவிக்கப்படும்.

யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் வன்னி முகாம்களில் உள்ள நிலைமைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஒரு முகாம் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையின் குறைந்தபட்ச விடயங்கள் கூட இன்னமும் முகாம்களில் பிரச்சினையாகவே உள்ளது. சர்வதேச உதவி அமைப்புகளைக் கூட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அவர்கள் பணியாற்றுவதைத் தடுக்கின்றது. அரசு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிய நிலையில் வன்னி முகாம்களை பரமரிப்பதில் நிதித் தட்டுப்பாட்டினைக் கொண்டுள்ளது. ஆனாலும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளையும் பணியில் ஈடுபடுத்த அனுமதிக்கவில்லை. இவை இலங்கையரசு தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரஜைகளாகவே நடத்துகின்றது என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

இடம்பெயர்ந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் நல்வாழ்வை மட்டுமே கவனத்திற்கொண்டு அம்மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் மறைமுக நோக்கங்களற்ற ரமிழ் சொலிடாரிற்றி போன்ற அமைப்புகளின் போராட்டங்கள் இலங்கை அரசு மீது தொடர்ச்சியான அழுத்தங்களை மேற்கொள்வதற்கு அவசியம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • tax
    tax

    தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போது பல்டியடித்தது போல் பிரிதானிய தமிழ் பேரவை வெகுவிரைவில் பல்டியடிக்கப்போகிறது. இப்போது அவர்களுக்குள் உடைவு ஆரம்பித்துவிட்டதாக ஆரம்பகட்டத்தகவல் தெரிவிக்கிறது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    யுத்தம் இன்னும் ஆறுமாதகாலம் தொடர்ந்து நீடிக்குமேயானால் அரசாங்கம் எது ஒருவழிகளில் பணம் பெற்றேதீரும். எந்த அரசாங்கமாவது அகதிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திகொடுக்க மீளகுடியமைத்துவதற்கு தங்களுக்கு உடனடியாக வசதியில்லை வாய்பில்லை என்று சொல்லுவார்களேயானால் அதுவும் ஏதோ ஒருவகையில் ஊனமுற்ற அரசாங்கமே! விதிவசமான இப்படியான கருத்துக்களை அரசாங்கம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றே நினைக்கிறேன். அகதிமுகாம்களை பூரணமாக இல்லாது செய்வதும் அவர்கள் தமது இருப்பிடக்கு திரும்பிப்போவதற்கு வழிசெய்வது ஒரு அரசாங்கத்தின் உடனடிக் கடமையாகும் இதில் காலம் கடத்தி ” கதை”சொல்லுவார்களேயானால்…..?

    அன்பார்ந்த புலம்பெயர்தமிழ் மக்களே!புலிகள் என்றுமே மக்களுக்கு நம்பிக்கையாக இருந்தது இல்லை அப்படியிருந்தும் உரியகாலத்தில் உரியகோஸங்களை அர்த்தமுடன் வைப்பார்களே யானால் நிபந்தனையில்லாமல் அகதிகளை இலங்கை பூராவும் இல்லாது ஒழிப்பதற்கு திடசங்கற்பம் பூணுவோர்களானால் ஜதிககெலஉறுமையா என்ன? ஜேவிபி என்ன? உங்கள் பூரணஆதரவையும் ஒத்துழைப்பையும் எந்த நிபந்தனையும் இல்லாமல் வழங்குங்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தற்போதைய நிலையில் அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை புலம் பெயர்ந்துள்ள மக்களும் முன்வந்து செய்வதே முக்கியம். அதைவிடுத்து ஆர்ப்பாட்டங்களோ, ஊர்வலங்களோ எவர் நடத்தினாலும் அதனால் அந்த மக்களுக்கு எந்தவித நன்மைகளும் ஏற்படப் போவதில்லை. மாறாக இந்த ஊர்வலங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் வைத்து சில ஊடகங்கள் தமது பிழைப்புகளை நடத்தவும் சில அமைப்புகள் பணங்களைச் சுருட்டவுமே உதவுகின்றன. எனவே எனிமேலாவது சிந்தித்து அந்த மக்களுக்குத் தேவையானவற்றை மட்டுமே செய்வதே குறிக்கோளாகட்டும்.

    Reply
  • மகுடி
    மகுடி

    //அந்த மக்களுக்குத் தேவையானவற்றை மட்டுமே செய்வதே குறிக்கோளாகட்டும்.- பார்த்திபன்//
    மக்கள் தேவைகளை விட தாங்கள் ஏதாவது செய்தோம் என்பதை ஊடகங்களின் மூலம் தமிழருக்கு காட்டவே கடந்த கால வீதிப் போராட்டங்களும் , இன்றைய போராட்டங்களும் நடைபெற்றன. இதனால் நன்மையை விட கேடுகளே அதிகமாயின. சுவிஸிலும் புலிகள் பல பிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். சுவிஸின் புலிகளின் தலைவராக இருந்த குலம் , பிரபாகரன் இறந்ததாக சொன்னதால் விலக்கப்பட்டு புலிகளின் காரியாலயத்தை நிர்வகிக்கும் அப்துல்லா மற்றும் ஜெயம் தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவொன்று தலைவர் இருக்கிறார் குழுவாக இயங்க ஆரம்பித்திருக்கிறது.

    புலிகளின் சொத்துகள் மற்றும் பணம் உள்ளவர்கள் தலைவர் இருக்கிறார் என்றும் , புலிகளின் சொத்துகள் இல்லாதவர்கள் (கேபீயை தவிர்த்து) தலைவர் இறந்து போனார் என்றும் முதற் கட்டமாக பிரிந்துள்ளனர்.அடுத்த கட்டமாக ஆயுதப் போராட்டம் தொடர வேணும் என்று ஒரு குழுவும், அரசியல் போராட்டம்தான் இனி சரியென ஒரு குழுவும் அடி படுகின்றன. இன்னும் ஒரு சிலர் கப்பல் விட்டும் , கப்பல் விடவும் அடிபடுகின்றனர்……இன்னும் வரும்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    பாவம் சுவிஸில் உண்ணாவிரதம் இருந்த கிருஸ்ணா அம்பலவானரை பைத்தியகார ஆசுபத்திரியில் இருத்திய செலவாக 40 ஆயிரம் சுவிஸ் பிராங்கு பணத்தை கட்ட வேண்டியுள்ளதாக சொல்லி சில புலிகள் என்னிடம் சொல்லிச் சிரிதனர். காசு கட்டினாப் பரவாயில்லை. பைத்தியகார சர்ட்டிபிக்கட்டுமில்ல கொடுத்தவை என்கின்றனர். இவர்கள் இப்ப அம்பலவானரை துரோகி என்கிறார்கள்.

    இவர்கள் பைத்தியகாரர்கள் என்று சுவிஸ்காரனுக்கே தெரிஞ்சது, ஆனால் இந்த மடத் தமிழருக்கு தெரியுதா? ஊகும்……..போலீஸ் காசு எவ்வளவு என்பது ……….. யாருக்காவது தெரியுமா? இவரும் பிரபாகரன் இறந்ததாக சொன்னதால் துரோகியாகிவிட்டார். அன்றைய பதங்களை இப்போது இவர்களுக்கே தொப்பியாக அலங்கரிக்கப்படுகிறது. அனைத்து புலிகளும் இனி தேசத் துரோகிகளும் – தொப்பி புரட்டிகளும் – பச்சொந்திகளும்தான் என்பதை சரித்திரம் பொன் எழுத்துகளால் பதியும்.

    அம்பலவாணரை முன்னர் எல்லா விழாவுக்கு தலைமையுரை நடத்தக் கூப்புடுறவை. அதுக்கு காரணம் ஐபீசியில செய்தி வரும் என்று….. இப்ப ஒருதரும் திரும்பியும் பார்க்காமல் குலைச்சுக் கொண்டு ஓடுது. குலமும் ஓடுற குதிரைதான் வேணும் என்று ஒருத்தரோடு வாக்கு வாதப்பட்டவர். தலைவரோடு இருந்தவன் என்று தலைகணத்தோடு பேசினவராம். பாவம் இப்ப தலைவர் செத்த பிறகு இவர் ஓடாத குதிரையில்ல. இப்ப செத்த குதிரை. கறிக்கு கூட உதவாது. கலிகாலம் இல்ல இது. கலிங்க காலம்.

    Reply
  • தணுஜா
    தணுஜா

    குலத்தார் , புலிகளின் சுவிஸ் தலைவர் இல்லையா? அப்ப யார் தலைவர்? விபரம் தர முடியுமா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தணுஜா,
    நான் தான் தலைவரென்று நினைக்கின்றேன். ஏதாவது அன்பளிப்புகள், பணமுடிப்புகள் தர விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். ஏற்கனவே வங்கிக்கடன் எடுத்துக் கொடுத்து, அதைத் திருப்பிப் பெற முயல்வதற்கென்றால் அப்துல்லா என்ற பெயரிலுள்ளவருடன் தொடர்பு கொள்ளுங்கள். இப்ப தான் அறிக்கைகள் விடுவதெப்படி என்று எழுதிப் பழகுகின்றேன். வெகு விரைவில் உத்தியோகபூர்வமான எனது அறிக்கை வெளிவரும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இதோ விளக்கம் தணுஜா!ஏன் இப்படி தலைவர் உபதலைவர் என்று பெரிய வார்தைகளையெல்லாம் பாவிக்கிறதே பிழையான வார்த்தைப்பிரயோகம். சுவிஸ்லுள்ள அசையும்சொத்து அசையாச் சொத்துகளுக்கு உரிமையாளர்களை பங்குதாரர்களை நிர்ணயம் செய்வது…… தேடுவது… அத்தாச்சிப்படுத்துவது என்பது மாதிரியான “ரேஞ்சு”லேயே போய்கொண்டிருக்கலாம்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    பார்த்திபன் , வாழ்த்துகள் சொல்ல பயமாக இருக்கிறது. விரைவில் பலர் உதை வாங்குவார்கள் போல் இருக்கிறது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நண்பன்,
    வாழ்த்துகள் சொல்லாதீங்கோ. ரொம்ப கூச்சமாக இருக்கு. உதை எல்லாம் எப்பவோ ஆரம்பிச்சாச்சு. எனி பச்சைமட்டை அடி தான் பாக்கி.

    Reply