ஜனநாயக தமிழர் தேசிய கூட்டணி யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உதய சூரியன் சின்னத்திலும் வவுனியாவில் நங்கூரம் சின்னத்திலும் தேர்தலில் குதிக்கும் இந்தக் கூட்டணி, இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயக தமிழர் தேசிய கூட்டணியின் யாழ். மாநகர சபையின் மேயர் வேட்பாளராக வீ. ஆனந்த சங்கரி நிறுத்தப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
த.வி. கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபாஅணி) ஆகிய மூன்று கட்சிகளும் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.
palli.
ஜயா வெற்றி பெற வாழ்த்துக்கள்; இரத்த பொட்டெல்லாம் அங்கு எதிர்பாக்க முடியாது; காரனம் பொட்டு வைக்ககூட மக்களில் இரத்தம் இல்லையாம்;இதுவரை எழுதிய கடித விபரங்கள் மக்களுக்கு ஓர் அளவு தெரியும்; ஆகவே அதை விட்டு செய்ய கூடியதை செய்ய வேண்டியதை மட்டும் சொல்லி பாருங்கோ; வெற்றி பெற்றால் அங்கு தமிழ் மக்களுக்காக அத்திய அவசிய தேவைகளை பூர்த்தி செய்யுங்கோ; தோற்று விட்டால் (அப்படி நடக்ககூடாது) இங்கு வந்து தமது மக்களுடன் வாழ பாருங்கோ, அப்படியே தெரிந்த பல தேச தலைவர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதலாம்தானே;
thevi
ஐயா ஆனந்த சங்கரி அவர்களே! ஒரு சின்னப் பிரச்சனைக்கே அந்த எகிறு எகிறின நீங்கள் மக்களுடைய பிரச்சனைகளை எப்படி கையாளப் போகின்றீர்கள்?உங்களால் அவற்றையெல்லாம் சரிபண்ண இந்த வயசிலும் உங்களுக்கிருக்கிற ஈகோ இடந்தராது. ஆதலால் தயவு செய்து………
Kusumbo
சங்கரி ஐயாவுக்கு எதாவது சங்கடம் எப்பவும் பண்ணவேணும்…….
palli.
பல்லியருக்கு வயதானதாலை இப்போது கண்டபடி ஊர் சுத்த முடியலை; அதனால் உலக நடப்புகள் சிறிது தாமதமாகதான் பல்லிக்கு தெரிகிறது: அதனால் இந்த யாழ்;வன்னி தேர்தல் விபரம் யாருக்காவது உருப்படியாக தெரிந்தா எழுதபடாதா?
சங்கரியர் (கூட்டணி) யார் யார் எங்கு நிற்க்கிறார்கள்; தோழரின் அமைப்பில் யாரெல்லாம் வெத்திலையில் நிற்க்கிறார்கள்; சுவிஸ் பிரபா எங்கே கும்மாழம் போடுகிறார்; ரெலோ உதயன் எங்கே வெத்திலைக்கு சுண்னாம்பு தேடுகிறார்; ரணில் என்னவாம்; அவனவன் மனவிமாரையும் தேர்தலில் நிக்கும்படி கட்டளையாம் உன்மையா(பளய கூட்டமைப்பு) கூத்தமைப்பும்(சம்பந்தர் பகுதி) தங்களும் குதியன் குத்த தயார் என்பது போல் வன்னிநோக்கி நகர்வு என கேள்வி ஆனாலும் உன்மை நிலமை நம்ம தேசத்தில் வந்தா தானே புரியும்;;;;;;
மாயா
பல்லி, அடுத்தவர் எழுதுறதை சிப்பு சிப்பு என்று சப்பித் துப்பிறதை விட்டுட்டு , வயசான காலத்தில காலாற நடந்தா நடப்புகள் தெரியும்? நீங்களும் எழுதுங்கோ? அப்ப எங்களாலும் சப்பித் துப்ப ஏலுமில்ல?
மகுடி
சுவிஸ் பிரபா ஆரம்பத்தில வேலையே செய்யயில்லையாம். புலிகளோட ஒட்டித் திரிஞ்சு , பிறகு TTN தொல்லைக் காட்சிக்கு பொறுப்பாளராகி நல்லா கறந்து கொண்டு இருந்தவர். யாழ்பாணத்துக்கு போய் சோடா பக்டரியும் துறந்து, சமாதான காலத்தில ஆணிவேர் படமும் எடுத்தவர். பிறகு ஏதோ சாசடிச்சதாக வன்னிக்கு கூப்பிட்டு விசாரிச்சு ……. பிறகு சுவிஸில புலிகளுடைய வேலையில இருந்து ஒதுங்கி ஏதோ நகைக் கடையும் பிறகு வீடு வாங்கல் விற்றல் கட்டுதல் என்று ஒரு நிறுவனம் துவங்கி , தரிசனத்துக்கு ஏதோ தொல்லை புரோகிறாம் செய்தவர். வன்னி முடிவு காலத்தில வீதிக்கு இறங்கி சூரிச்சில புலி சார்பில ஊர்வலம் செய்ய திரிந்தவர். இப்ப சில நேரம் எங்காவது மண் கொள்ளை அடிக்க இடம் தேடித் திரியிறாரோ தெரியாது?