பாராளு மன்றத்தில் இவ்வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள சிலசட்ட மூலங்களுக்கு தாம் எதிர்ப்புக் தெரிவிக்கப் போவதில்லையென எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார். பாராளுமன்ற கட்சிகளின் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது பொது விமான சேவைகள் தொடர்பான சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதேபோல் எதிர்வரும் வியாழக்கிழமை கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதிக்கு அதிக அதிகாரங்களுடன் ஒருவரை நியமிப்பது தொடர்பான சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், வியாழக்கிழமை மாலை நடைபெறும் அமர்வில் டெங்கு தொற்று தொடர்பான சட்ட மூலத்தை பிற்போடுவது தொடர்பான விவாதம் இவ்வார அமர்வில் இடம்பெறவுள்ளது.