வெற்றிலைச் சின்னத்தில் ஈ.பி.டி.பி. போட்டி

21deva.jpgயாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இது குறித்துத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளரும்,  சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அத்துடன்,  வெற்றிலைச் சின்னத்தின் கீழ் ரெலோ (சிறி அணி) மற்றும் ஈரோஸ் ஆகியனவும் போட்டியிடவுள்ளன. யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை ஐக்கிய,  யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,  வவுனியா நகரசபைத் தேர்தலுக்கான வேட்புமனுவை நாளை புதன்கிழமை தாக்கல் செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர,  ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாநகரசபைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திலும்,  வவுனியா நகரசபைத் தேர்தலில் நங்கூரம் சின்னத்திலும் போட்டியிடவுள்ளது. இக்கட்சி தனது வேட்புமனுக்களை இறுதிநாளான நாளை புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ளது. 

அதேநேரம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி யாழ் மாநகரசபைத் தேர்தலுக்கான வேட்புமனுவை நேற்றுத் திங்கட்கிழமை தாக்கல் செய்திருந்த நிலையில்,  வவுனியா நகரசபைத் தேர்தலுக்கான வேட்புமனுவை ஐக்கிய தேசியக் கட்சி இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • msri
    msri

    வடக்கின் “வசந்த ஐனநாயகம்”
    அவசரகாலச சட்டத்துடன்> வடக்கில் ஊரடங்குச் சட்டமும்! இரண்டு லடசத்திற்கு மேறபட்ட தமிழ்+முன்லீம் மக்கள் வெளியில் உள்ளனர்! இதைவிட மூன்று லட்சம் மக்கள் முட்கம்மபி வேலிக்குள்> இந்த ஐனநாயக பூத்துக்குலுங்கலில் ஓர் தேர்தல்!

    Reply
  • sivaji
    sivaji

    எமது மக்கள் முகாம்களில் இருக்கும் போது தேர்தலை பகிஸ்கரிப்பதே தமிழ்மக்களக்கு செய்யும் மதிப்பாகும் அதைவிட்டு மக்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை எங்ஙகளக்கு வாக்கு போடுங்கோ என்பத நீங்கள் எல்லாருமே உங்கள் பதவிக்குத்ததான் என்றாகி விட்டது.

    மக்கள் முகாமிலிருந்து வெளியேறட்டும் பின்னர் மக்களுக்கான தேர்தலை நடாத்துங்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    தேசிக்காய் தலைவர் தேர்வு செய்து விடுதலை வாங்கிக் கொடுத்த அதிபருக்குத்தான் தமிழர்கள் வாக்களிப்பார்கள். அதுவே அவர்களுக்கு வசந்தத்தை கொண்டு வரும். இல்லையென்றாலும் அதுதான் நடக்கும். தேர்தலை பகிஸ்கரிப்பதால் அது பழிவாங்கலாக ஆனாலும் ஆகிவிடும். இனியும் முட்டாள்தனங்களை தவிர்த்து முள்வேலியை விட்டு வெளியேறி உயிர்வாழ வழி காட்டுவோம். அடுத்த தேர்தலில் யாருக்கு என்பதை பார்த்துக் கொள்ளலாம்.

    அரசு , தமிழருக்கு எதையாவது செய்து தம்மை நிலைக்க வைத்துக் கொள்ள முனைகிறது. தேர்தலை பகிஸ்கரிப்பது தமிழருக்கே கேடு விளைவிக்கும். மாதக் கணக்கில் சத்துணவு இன்றி சோகையோடு உயிர் வாழும் மக்கள் மற்றும் மந்தமாகியுள்ள குழந்தைகள் நடக்கவாவது பலம் வேண்டும். அதுவே முக்கியம். இந்த புண்ணாக்கு அரசியல் எவருக்கும் உயிர் கொடுக்காது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.

    Reply
  • rony
    rony

    காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. இந்நிலையில் இன்றுஏனோ இந்த அவசரத்தேர்தல்.பு.அ.மு(புலிகளின் அழிவுக்கு முன்பு)தமது பிள்ளைகளை புலிகளிடமிருந்து பாதுகாப்பதில் பெரும்பாடு பட்டார்கள், தற்போது பு.அ.பி(புலிகளின் அழிவுக்குப்பின்)பும் பெற்றோருக்கு அதே நிலைதான். ஜனநாயக நீரோட்டத்தில் நீந்துவதாக கூறிக்கொள்ளும் சில புதிய எலிகள் மீண்டும் இளையவர்களை தங்கள் இயக்கத்தில் சேரும்படி வற்புறுத்தி கடத்திச்செல்வதாக அறியப்படுகின்றது.தமிழனின் தலைவிதி இன்னும் மாறவில்லையா?
    இன்னிலை மாறவேண்டும். இல்லை மாற்றவேண்டும். எவ்வளவு காலத்திற்குத்தான் பிள்ளைகளைப் பறிகொடுக்கும் நிலை தொடரப்போகின்றது. ஜனநாயக அரசு இதைக்கவனிக்குமா? பெற்றோர்களை நிம்மதியாக வாழவிடுமா?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    உள்ளநிலமைகளை சீர்செய்து அதில் முன்னேற கூடியவழிகளை கண்டுபிடிப்பவனே புத்திசாலியாவான். தேர்தலை பகீஸ்கரிப்பதால் எந்த நன்மையும் ஈழத்தமிழ்மக்களுக்கு எந்த நன்மையும் பயிற்கப்போவதில்லை. தமிழ்மக்களுக்கு தீர்வுதேடப் புறப்பட்ட ஆயுதக்குழுக்கள் இறுதியில் மாபெரும் விலைகளை செலுத்திய பிறகு ஆயுதக்குழுக்களை அழித்தொழிப்பது தான் தமிழ்மக்களின் அமைதியான வாழ்வுக்கு தீர்வாக வந்ததுயல்லவா!முப்பதுவருட துன்பங்களுக்கும் தேர்தலை பகீஸ்கரித்ததின் விளைவுகளில் ஒன்றல்லவா? தமிழ்இனம் ஏதோவழியில் கசடுபட்டஇனமாகவே என்பார்வையில் தெரிகிறது இல்லாவிட்டால் புலம்பெயர்சிங்களமக்கள் தம்பிடியில் வைத்திருந்த மக்களை விடுவிக்க அவுஸ்ரோலியா நகரங்களில் புலிகளுக்கெதிராக போரட்டம் நடத்தியிருப்பார்களா?

    இது உலகம்பரந்து வாழும் கடமையாக அல்லவா? இருந்திருக்க வேண்டும். சுனாமிக்கும் அவசரகாலநிதிகளை அள்ளிக்கொடுத்த கைகள் எரிஞ்ச விறகுகட்டை கோலத்தில் இருக்கும் எமதுமக்களுக்கு எத்தனை விதமானஉதவிகளை அள்ளிக் கொட்டமுடியும் எதிர்மாறான வேலைகளையும் கருத்துகளையும் செய்தும் சொல்லியும் கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து விதிவிலக்காக சிலர்இருக்கவே செய்கிறார்கள் அவர்கள் என்னைமன்னிக்கவும். தேர்தல் என்பது கிரேக்ககாலத்திலிருந்து தொன்றுதொட்டு வருகிற ஜனநாயக வழிமுறை அதையாவது தமிழ்மக்கள் கற்றுக் கொள்ளட்டும். அது காட்டுமிராண்டி தனமாக இருந்தாலும்கூட.

    Reply
  • palli.
    palli.

    தேர்தல் நடக்கட்டும்; அதில் யார் வெற்றிபெற போகிறார்கள் என்பதும் முடிவாகி விட்டது; தோழர் இப்படிதான் செய்வார் என இரு தினங்களுக்கு முன்பே பல்லி சொல்லிவிட்டது; இல்லையேல் அவர் தோற்ப்பது உறுதி என முடிவாகிய நிலையில் மகிந்தாவின் வளர்ப்பு பிள்ளயாக களம் இறங்கி உள்ளார்; இதில் ஜயா தோற்றிட்டால் அகதி விண்ணப்பம் உறுதியாகி விடும்; இதில் மகிந்தாவுக்கு பெரிய சங்கடம்: வளர்ப்பு பிள்ளையா? பங்காளியா என யார் வந்தாலும் மகிந்த& கோவுக்கு பிரச்சனை இல்லை: ஈரோஸ் ரெலோ(சிறி அணி) அதுவும் வெத்திலைதான் போடபோவதாக உறுதியாகிவிட்டது; இது புதிய கூத்தமைப்பு என நம்பலாம்;

    அடுத்துதான் மிக பலம் வாய்ந்த கூட்டணி புளொட்+ சங்கரி+ ஈபிஆர்எல்எவ்+ புலம்பெயர் புத்திஜீவிகள் இவர்கள் வவுனியாவை தான் குறிவைத்து களம் காண்கிறார்கள்; இங்கு புளொட் தனியாக நின்றாலே வெற்றி கிடைத்துவிடும் புலி அழிப்புக்கு முன்: ஆனால் இன்று மகிந்தா குடுபத்துக்கும் அங்கு நல்ல வாரபாடு என தோழர் உறவுகள் முனுமுனுப்பது தெரிகிறது; அடுத்து இந்த தேர்தலில் யார் வெற்றி வாகை சூடினாலும் அது மகிந்தாவின் வெற்றியே, அதனால் அரசு இந்த தேர்தலில் ஆர்வம் காட்டாது; முள்வேலியில் மக்கள் இருக்கும்போது தேர்தல் தேவையா? கட்டாயம் அவர்களை விடுவிக்க தன்னும் பேச சிலர் வரட்டுமே; அவர்கள் பேசாவிட்டால் இருக்கவே இருக்கு நம்ம தேசம் தோய்த்து காயபோட வேண்டியதுதான்;

    இறுதியாக கூட்டமைப்பு மிக இக்கட்டான சூழ்னிலையில் களம் காண்கிறது; இது ராஜி இல்லாத அமிப்பாகவே சமீபகாலமாக செயல்படுகிறது, ஏதாவது ஒரு இடத்தில் ஏனும் இவர்கள் வர வேண்டும் என்பது பல்லியின் விருப்பம்; வந்த பின் அரசுடன் இனைவதானால் அதுவும் தேவையா? என யோசிக்க வேண்டி உள்ளது, எது எப்படியோ தேர்தல் நடக்கட்டும் அப்போதுதான் அந்த அப்பாவி மக்களுக்கு எதாவது விடிவுவர இதுவே ஆரம்பமாக இருக்கட்டும்: தேர்தலை புறகணிப்பது மிக மிக தவறு.

    Reply