வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவும் நாடாளுமன்ற உறுப்பி்னர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக விசேடமாகக் கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு வருகை தந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.