வட மாகாண அபிவிருத்திக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் நான்காவது மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் இன்று மீண்டும் வவுனியாவில் நடைபெறவுள்ளது.
வடமாகாண விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் நடைபெறும் இவ்விசேட கூட்டத்தில், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் துரித அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், குடிநீர், என்பவற்றுடன் மீள்குடியேற்றங்கள் தொடர்பாகவும் ஆராயப்படும்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிளிநொச்சி மாவட்டம் தொடர்பான மாநாடு காலையிலும், முல்லைத்தீவு மாவட்டம் தொடர்பான மாநாடு மாலையிலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பான மாநாடு கடந்த புதன்கிழமையும், யாழ்,மாவட்ட அபிவிருத்தி மாநாடு கடந்த வெள்ளிக்கிழமையும், மன்னார் மாவட்ட மாநாடு நேற்று சனிக்கிழமையும் நடைபெற்றன. இன்று நடைபெறவுள்ள மாநாட்டில் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமார், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.