கேப்டன் அலி (வணங்காமண்) நிவாரணப் பொருட்களை இலங்கை அரசு இறக்கி மக்களுக்கு அளிக்க வேண்டும் – கருணாநிதி

vanangaaman-captainali.jpgஇலங் கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஐரோப்பிய வாழ் தமிழர்கள் அனுப்பிய உதவிப் பொருட்களுடன் வந்த கப்பலில் இருந்து மருந்து மற்றும் நிவாரணப் பொருட்களை இலங்கை அரசு இறக்கி மக்களுக்கு அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார்.இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடித்ததை அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்துக் கொடுக்கவுள்ளார்.

இலங்கையில் நடந்த போரில் காயமடைந்தும், வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டும் உள்ள லட்சக்கணக்கான தமிழர்கள் ராணுவம் அமைத்துள்ள திறந்த வெளி முகாம்களி்ல் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள பெண்களிடம் ராணுவ வீரர்கள் முறைகேடாக நடப்பது, இளைஞர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்று கொல்வதுமாக கொடுமைகள் நடந்து கொண்டுள்ளன. இந்த மக்களுக்காக ஐரோப்பா வாழ் தமிழர்கள் கேப்டன் அலி (வணங்காமண்) என்ற கப்பலில் 884 டன் உணவு, மருந்து மற்றும் உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் இந்த கப்பலில் இருந்து உதவிப் பொருட்களை இறக்க அனுமதிக்காமல் இலங்கை அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இதனால் இந்தக் கப்பல் இப்போது இந்திய கடல் எல்லையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் கருணாநிதி ஒரு அவசர கடிதம் எழுதியுள்ளார். அதில்,

பாதிப்புக்கு உள்ளான மக்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு உதவுவதற்காக சர்வதேச சமுதாயம் நிவாரணப் பொருட்களை அளிப்பது வழக்கம். இதை தடுப்பது மனிதாபிமானமல்ல. எனவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு அந்தக் கப்பலில் இருந்து நிவாரணப் பொருட்களை இறக்குவதற்கு அனுமதிக்குமாறு வலியுறுத்த வேண்டும்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் மூலம் இவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை அமைச்சர் பொன்முடி டெல்லிக்கு விரைந்து அதை நேரடியாக கிருஷ்ணாவிடம் வழங்கவுள்ளார்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜய்காந்தும் இன்று காலை கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply to DEMOCRACY Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • DEMOCRACY
    DEMOCRACY

    வணங்கா மண் கண்ட அடங்காத் தமிழன், தானைத் தலைவன் கலைஞர் வாழ்க!!, ஆழக் கட்டலெங்கும் சோழ மகராஜன் ஆட்டிப்? படைத்தானே அன்று..இன்று ஈழக்? கடெலெங்கும் எங்கள் கலிகாலன் கூட்டிக் கொடுத்தானே இன்று…பாக் ஜலசந்தி வழியாக(அதற்காகத்தான் சேது சமுத்திர திட்டம்),மும்பாய், கொச்சிக்கும், விசாகப்பட்டண்த்திற்கும் இடையில், அரசாங்க கான்ட்ராட்டுகளை, குறைந்த எரிப்பொருள் செலவில், “கப்பலோட்டிய தமிழனாக வணங்காமன் ஓட்டும் மாவீரன் வாழ்க!!”….

    Reply
  • sekaran
    sekaran

    கருணாநிதி அவுங்களுக்கு

    ஒங்க ஊர்ல இருக்கிற ஈழத்து அகதிகளையே ஒழுங்கா பாக்கிறதுக்கு யோக்கியதை இல்ல. எங்கேயே ஒரு கப்பலாம். யாரோ அதுவும் மெத்தப்படிச்ச ஜகஜாலக் கள்ளனுகளாம். வேணும்னே அனுப்பிப் பாத்து வேடிக்கை காட்ரானுகளாம். இந்தக் கூத்தை நம்பி அதுக்கு அட்வகேட் வேல பாக்க ஆரம்பிச்சீட்டீங்களே! வெக்கமா இல்ல? உள்ளுர்லயே ஏகப்பட்ட வேல தலக்கி மேல இருக்குது. அது உட்டுட்டு…

    Reply